ஆரம்ப் என்பது தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்தி கற்றலைப் மேம்படுத்துவதற்காக பான்-இந்தியா PC ஃபார் எஜுகேஷன் முயற்சிக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும்; அது டிஜிட்டல் இந்தியாவில் உறுதியாக கால் பதிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த முயற்சி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைக்கவும் அவர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்க்கும் முனைகிறது அதனால் அவர்கள் பள்ளி மற்றும் வீடு ஆகிய இரண்டு இடங்களிலும், கற்பதற்கான PCஐ சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

Dellல் நாங்கள்,PC ஏற்பது என்று வரும் போது தற்போதைய சூழ்நிலையைப் பகுப்பாய்வு செய்து இந்தியாவில் PC ஊடுருவல் ௧௦% க்கும் குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் கல்வியில் PCயின் முக்கியத்துவத்தை உணர துவங்கியிருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம், சிறப்பாக கற்பதற்கு PCயை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான அறிவின் பற்றாக்குறை - அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியத் தடையாக உள்ளது.

பயிற்சி மற்றும் சான்றுளித்தல்கள் மூலமாக பெற்றோர்கள், குழந்தைள் மற்றும் கல்வி நிறுவனங்களை கூட்டாக இயலச் செய்வதன் மூலம் இதை சமாளிக்க முடியம் என்று நாங்கள் நம்புகிறோம். கம்ப்யூட்டருக்கான அறிவினை அணுகக்கூடியதாக ஆக்கும் போது பெற்றோர்கள் மற்றும் அசிரியர்களுக்கும் , அதன் விளைவாக குழந்தைகளுக்கும், முக்கிய PC திறன்களை நாங்கள் வழங்குகிறோம்.

படைப்பற்றல், நுணுக்கமான சிந்தனைத் திறன் மற்றும் சிக்கலான பிரச்சனை தீர்வு காணல் ஆகிய ‘டிஜிட்டல் இந்தியாவுக்கான’ மூன்று மிகவும் விரும்பத்தக்க திறனைகளாகும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த மூன்று திறன்களையும் தீட்டுவதற்கான எங்களின் முயற்சியே ஆரம்ப் ஆகும். இந்த முயற்சியின் மூலம், எங்கள் Dell சேம்ப்ஸ் பள்ளி தொடர்புத் திட்டம் மூலமாக ௧.௫ மில்லியனுக்கு நெருக்கமான மாணவர்களை நாங்கள் ஈடுபடுத்துகிறோம். NIIT உடன் இணைந்து, ௭௦ நகரங்களில் உள்ள ௫,௦௦௦ பள்ளிகளின் ௧,௨௫,௦௦௦ ஆசிரியர்களுக்கு பயிற்சியும் சான்றும் அளிக்கவும், Dell டிஜிமாம்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ௪,00,000 தாய்மார்களுக்கு அதிகாரம் வழங்குவதற்குமான நோக்கத்தை நாங்கள் கொண்டுள்ளோம்.

வாருங்கள், எங்கள் முயற்சியல் சேருங்கள் – கற்றலுக்கான ஒரு புதிய வகையை நாம் “ஆரம்ப்” பிக்கலாம்.