மழலையர் பள்ளி பெற்றோர்களுக்கானக் குறிப்புகள்

நீங்கள் பாலர் பள்ளி செல்லும் குழந்தையின் பெற்றோராக இருந்தால், சில நேரங்களில், உங்கள் குழந்தையின் பின்னால் ஓடுவது கடினமாகவும் சலுப்பாகவும் இருக்கக்கூடும். குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமானப் பணிகளில் ஒன்றாகும், ஆனால் அதை நீங்கள் தனியாகச் செய்ய வேண்டியதில்லை.

எளிய வழிகளில் ஈடுபாட்டுடன் இருப்பது மூலம் உங்கள் குழந்தை மற்றும் அவரது பள்ளிக்கு ஒரு வித்தியாசத்தை நீங்கள் உண்டாகலாம். உங்கள் குழந்தையின் கல்வியில் ஈடுபாட்டுடன் இருப்பது பல வழிகளில் நன்மை பயக்கும். பெற்றோர்களின் ஈடுபாடு பள்ளிகளை வலிமையாக்கும் மேலும் கற்றலுக்கு நீங்கள் மதிப்பளிக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்தும். உங்கள் குழந்தையை வளர்த்துவதற்கு நாங்கள் சில குறிப்புகளை வழங்குகிறோம்.

வீட்டில் இருந்து தன்னார்வ உதவி புரியுங்கள் -

பாடங்களுக்கு விளக்கக்காட்சிகள் போன்றவற்றை உருவாக்க உதவி செய்யுங்கள். நீங்கள் PTA வில் இணையலாம். பள்ளிக்கூடம் முக்கியம் என்பதை நீங்கள் தன்னார்வப் பணிகளை வீட்டில் செய்வதன் மூலம் குழந்தைகள் புரிந்துக்கொள்வார்கள். ஆசிரியருடன் உள்ள இணைப்பை வலுப்படுத்துவதற்கு இது உதவும்.

பள்ளி நிகழ்ச்சிகளுக்குச் செல்லுங்கள்-

மெய்நிகர் ஓபன் ஹவுஸ்கள், கலைக் காட்சிகள் மற்றும் பிற பள்ளி நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் செல்லுங்கள். ஆசிரியர்கள் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் உரையாடுவதற்கு பள்ளி நிகழ்ச்சிகள் சிறந்த இடமாகும்.

உங்கள் குழந்தையுடன் பள்ளி குறித்துப் பேசுங்கள்-

"பள்ளியில் என்ன நடந்தது?" என்று கேட்பதற்குப் பதில் "இன்று வகுப்பில் நடந்ததிலேயே சிறந்த விஷயம் எது? என்றோ அல்லது "இன்று நீ பாலர்பள்ளியில் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லேன்" என்றோ கேட்கலாம்.

இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது கடினமான ஒன்று தான். சரியான தொழில்நுட்ப அறிவு பெற்றோர்களுக்கு இருந்தால், இவை அனைத்தையுமே சிறப்பாகச் செய்து விடலாம். உங்கள் குழந்தையின் வேகம் மற்றும் ஆர்வத்துடன் ஈடுகொடுக்க சில நேரங்களில் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் வளர்ப்பு முறையை மேம்படுத்த உதவி தேவையென்றால், இந்தக் குறிப்புகளைப் பார்க்கவும்.

21 ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் குழந்தை வளர்ப்பு குறித்த எங்கள் வெபினாரை இங்கே பாருங்கள் –

https://www.dellaarambh.com/webinars/