இன்றைய ஆசிரியர்கள் நாளைய மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றனர்

 

கடந்த வருடங்களில் கல்வித்துறையானது பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. தகவல்களைப் பரவலாக அறியச் செய்வது முதல் அச்சு இயந்திரங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் நிறுவுவது வரை, இப்பொழுது நாம் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தைச் சந்தித்து வருகிறோம்.

 

இணைய வழி கற்பித்தல் தான் கல்வித்துறையின் எதிர்காலம் ஆகும். தற்போதைய நிலையில், காலம் மாறுகின்ற பொழுதில், நாளைய ஆசிரியர்கள் விரைவாக எழுந்து கல்வியின் புதிய அலைக்கு தங்களைப் பொருந்திக்கொண்டனர். கற்பித்தலின் பாரம்பரிய முறையில் இருந்து தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, சிறப்பான மெய்நிகர் கற்றல் சூழலை உருவாக்கப் பயிற்சி எடுத்துக்கொண்டனர்.

 

 

ஈ-நூலகம், ஒளி/ஒலி கருவிகள், ஊடாடும் வகுப்பறைகள் மற்றும் வகுப்பறையில் ஏற்படக்கூடிய தொழில்நுட்பக் கோளாறுகளை அறிந்துக்கொள்வதுடன் வளர்ச்சியும் கல்வியும் என்றுமே முற்றுப்புள்ளியை எட்டாது என்பதை ஆசிரியர்கள் உணர்த்துகின்றனர்.

 

கல்விக்காக கணிப்பொறியை அறிந்துக்கொள்வதுடன் நிறுத்தாமல் ஆசிரியர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள். மெய்நிகர் ஊடகத்தின் வழியாகவே முழுமையான திருத்தல்கள், பணிகள், தேர்வுகள், முன்னேற்றப் பதிவுகள் மற்றும் உடனடி பின்னூட்டம் வழங்கி, ஊடாடும் இணையவழி வகுப்புகளை உருவாக்குகிறார்கள்.

 

 

டெல் ஆரம்ப்(Dell Aarambh) மூலம் நாங்கள் இணையக் கருத்தரங்குகள் மூலம் ஆசிரியர்களின் கணிப்பொறி சார்ந்த கற்றலுக்கு உதவ விரும்புகிறோம். நாங்கள் 75-90 நிமிட நீள இணையக் கருத்தரங்குகளை வடிவமைத்துள்ளோம். அதில் கீழ்கண்டத் தலைப்புகளை ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்:

 

 • இணைய வழி கற்றலுக்கு மனரீதியாகத் தயாராதல்
 • இணைய வழி கற்றலுக்கானக் கருவிகள்
 • இணையவழி அமர்வுத் திட்டத்தைத் தயாரித்தல்
 • இணையவழி அமர்வை செயல்படுத்துதல்
 • சிறப்பான இணையவழி கற்பித்தல்
 • தொழிநுட்பத்திற்குத் தயாராதல்
 • இடையூறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாளுதல்
 • இணையவழியில் சிறப்பாகக் கற்பித்தல்
 • கற்றல் பலன்களை வடிவமைத்தல் & முறைப்படுத்தல்
 • ஈடுபடுத்தும் வழிமுறைகள்
 • மதிப்பீடுகளை மறுயோசனை செய்தல்
 • ஒரு இணைய அமர்வில் இவற்றைத் தவிர்க்க வேண்டும்
 • கற்பித்தல் முறைகளின் செயல்திறன்

 

கல்வியை வழங்கும் முறை மற்றும் ஏற்றுக்கொள்ளும் விதம் வேகமாக மாறி நம்மை கல்வியின் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஆசிரியர் தினத்தில் இந்த மாபெரும் மாற்றத்தின் முதுகெலும்பாக இருப்பவர்களை அறிந்துகொண்டு அவர்களைப் பாராட்ட விரும்புகிறோம், அவர்கள் தான் நம் ஆசிரியர்கள்!

 

 

 மெய்நிகர் பள்ளியில் சிறந்து விளங்கக் குறிப்புகள்

தொலைதூர கற்றலில் இது தான் உங்கள் முதல் அனுபவமா? உங்கள் நாளை எப்படி முறைப்படுத்துவது என்பது புரியவில்லையா? முதலில், ஆன்லைன் கற்றலில் வெற்றிபெறுவதற்கு நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும் மேலும் சுதந்திரமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் மெய்நிகர் பள்ளியில் சிறந்து விளங்கி உங்கள் வகுப்பில் முதன்மையாகத் திகழுங்கள்.

1.சுவாரஸ்யமான பாடப்பொருட்களை வடிவமைத்தல்

குறிப்புகள், தேதிகள் மற்றும் பெயர்களுக்கு சுவாரஸ்யமான மற்றும் வண்ணமயமான மின்னட்டைகளை வடிவமையுங்கள். மறக்கக்கூடிய விஷயங்களை எளிதாக நினைவில் வைக்க மின்னட்டைகள் உதவும்.

2.கவனச்சிதைவுகளைத் தவிர்க்கவும்

ஆன்லைன் வகுப்புகளுக்கு அதிக கவனச்சிதறல்கள் ஏற்படலாம். கூச்சல்களில் இருந்து விலகி உங்கள் ஆசிரியர் சொல்வதை கவனியுங்கள். வகுப்பறையில் உள்ளவாறு நிமிர்ந்து அமர்ந்து கவனியுங்கள்.

3. கேள்விகள் கேளுங்கள்

மிக அதிகக் கேள்விகள் என்று ஒன்று இல்லவே இல்லை. கடினமான விஷயங்களை விளக்கிக்கூறுமாறு உங்கள ஆசிரியரிடம் கேளுங்கள். ஏதாவது ஒன்று கடினமாக இருந்தால், உங்கள் வகுப்பாசிரியருடன் தனியாகப் பேசுங்கள்.

4. முறைப்படுத்துங்கள்

உங்கள் கணிப்பொறி மற்றும் மின்னஞ்சலில் ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி எலக்ட்ரானிக் ஃபோல்டர்களை உருவாக்குங்கள். உங்கள் மெய்நிகர் பள்ளி ஆன்லைன் பிளானரைக் கொடுத்திருந்தால், அதை உபயோகித்து உங்கள் அவசரத்தின் வரிசைக்கேற்ப, அப்பாய்ன்ட்மென்ட்களைத் திட்டமிட மற்றும் உங்கள் செய்யவேண்டியப் பட்டியலை உருவாக்க உபயோகியுங்கள்.

5. நேர்மறையாக இருங்கள்

ஒரு மாற்றத்தைக் கடந்து செல்வது என்பது கடினமானது ஆனாலும் நேர்மறை எண்ணம் கொண்டிருந்தால், செய்யக்கூடியது. உங்களுக்கு நீங்களே கொடுக்கக் கூடிய ஒரு சிறந்த பரிசு ஆன்லைன் கற்றல் குறித்த ஒரு நேர்மறை எண்ணமே ஆகும்.

வாழ்த்துக்கள்!வீட்டில் சிறந்த கற்கும் சூழலை உருவாக்குதல்

தற்போதைய நிகழ்வுகளால் குழந்தைகளின் கல்வி அவர்களின் வகுப்பறையில் இருந்து வீட்டிற்கு மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடைமுறையில் இருப்பதால் அதனை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்களைக் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். இது போன்ற நேரத்தில், வீட்டில் சிறந்த கற்கும் சூழலை ஏற்படுத்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவுவது ஆசிரியரான உங்கள் பணியாகும்.

ஆன்லைன் வகுப்புகளைக் குழந்தைகள் சிறப்பாகப் பயன்படுத்த உதவுவதற்கு வகுப்பில் செயல்படுத்த மற்றும் பெற்றோர்களுடன் பகிர இதோ சில வழிகள்:

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்:

 • பெற்றோர்களுடன் சிறப்பாக இணைந்து பணியாற்ற ஒரு ஆன்லைன் வகுப்பறையில் உங்களுக்குப் பிடித்த யுக்திகள் பற்றிய குறிப்புகளை அனுப்புங்கள். நீங்கள் எவ்வாறு வகுப்புகளைக் கையாளுவீர்கள் என்பதைப் பற்றிய குறிப்புகளைப் பகிருவதன் மூலம் வீட்டிலேயே ஒரு பழக்கமான சூழலை உருவாக்க குழந்தைக்கு உதவும். இதனால் பொருளடக்கத்தின் மீது குழந்தை சிறப்பாக கவனிக்கும்.
 • குழந்தையின் கவனத்தை மேம்படுத்த கற்பதற்கு என ஒரு தனி இடத்தை ஒதுக்குதல் அல்லது வகுப்பு நடக்கும் பொழுது 'வகுப்பு நடைபெறுகிறது' என்ற வாசகத்தை அவர்கள் இடத்தில் ஒட்டி வைத்தல் போன்றவை நன்று. வகுப்புகளை உயிரோட்டமாகக் கொண்டுச்செல்ல ஆசிரியர்களான நீங்கள் சிறிய இடைவெளிகள் எடுத்துக்கொண்டு வேடிக்கை நடவடிக்கைகளை நடத்தலாம். ஒரு குழந்தையின் ஆர்வம் மற்றும் போக்கு பற்றி நீங்கள் அதிகம் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு இன்னும் சிறப்பாகக் கற்பிக்க முடியும்.

 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்:

 • மெய்நிகர் குழுக்கள் மற்றும் ஆன்லைன் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வுகள் நடத்த முயற்சியுங்கள். இதனால் பெற்றோர்களுக்கு இருக்கும் ஏதாவது சிக்கல்களைப் பற்றி அறிய முடியும்.
 • குழந்தையின் சிறந்த பணியை வாரத்திற்கு ஒருமுறை அவர்களது பெற்றோருக்கு அனுப்பலாம். அவர்களது பணியைப் பாராட்டி காட்சிப்படுத்துதல் அவர்களை ஊக்குவிக்கும்.

ஒரு குழந்தையின் கல்விப்பயணத்தில் சரியான உள்ளுணர்வு இருந்தால் அது மெய்நிகர் வகுப்பறையில் திருப்புமுனையாக இருக்கும் மேலும் ஆசிரியர்-பெற்றோர் இணக்கத்தை மேம்படுத்தும்.

ஆன்லைன் கற்றல் குறித்த அடித்தளம் கட்டுவது குறித்து மேலும் அறிய எங்கள் வெபினாரில் இணையுங்கள் - https://www.dellaarambh.com/webinars/