ஒரு புதிய முறை கல்வி: கணிப்பொறிகளைச் சார்ந்து

 

கணிப்பொறி சார்ந்த கற்றல் யுகமானது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல நன்மைகள் தரும் ஒரு புதிய முறை கல்வியைக் கொண்டுவந்துள்ளது. ஒரு ஆசிரியராக நீங்கள் கீழ்கண்ட நன்மைகளை உபயோகித்து கற்றலுக்கு மிகவும் உகந்த வகுப்பறை சூழலை உருவாக்க வேண்டும்.

 

  1. பல்லூடகத்தை உங்கள் நன்மைக்கு உபயோகியுங்கள்

தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைக் கற்கும் பொழுது, மாணவர்கள் அவற்றைக் கற்பனை செய்து, உருவாக்கி தங்களை வெளிப்படுத்த PC சார்ந்த கருவிகள் உதவுகின்றன. அவர்களது யோசனைகளைக் கண் முன்னே நிஜமாகக் கொண்டு வருவது மட்டுமன்றி அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கும் அவை உதவுகின்றது. நாளைய சிறுவர்களை சிறு வயதில் இருந்தே பல்லூடகத்திற்கு வெளிப்படுத்தி அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

 

  1. கற்றலுக்கு எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

மெய்நிகர் கற்றல் முறையின் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருக்கும் திறனையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதால், மாணவர்களுக்கு கல்வியில் வரைமுறை என்ற ஒன்றே இல்லை. இது அவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதோடு மட்டுமல்லாமல் தங்கள் ஆளுமையை உணர்ந்து அதை வலுப்படுத்தவும் வாய்ப்பு வழங்குகிறது.

 

  1. காட்சிப்படுத்தும் கருவிகளை உபயோகியுங்கள்

நுண்புலன் கருத்துகளைக் கற்பனை செய்தல் கடினம், அதனால் தான் PC சார்ந்த கற்றல் கருவிகளைக் கொண்டு கருத்துகளின் நுண்ணியத் தன்மையைக் குறைத்து குழந்தைகளின் கண்களுக்குப் புலப்படுமாறு மாற்ற முடியும்.

 

  1. எளிதான தகவல்தொடர்பு

கணிப்பொறிகள், தொழில்நுட்பம் மற்றும் இணையம் இவை அனைத்தும் சேர்ந்து தூரங்களைக் கடந்து உலகத்தை நெருக்கமாகப் பிணைக்கிறது. உங்கள் குழந்தை உங்கள் நகரம், பள்ளி மற்றும் வகுப்பறையுடன் நிற்காமல், கற்றல் மீது ஒரு உலக பார்வையைக் கொள்ள நீங்கள் உதவலாம்.

 

  1. ஆராய்ச்சி மற்றும் தகவலுக்கு விரைவான வழியை உருவாக்குகிறது

குழந்தைகளுக்கு ஆராய்ச்சிகளுக்கானத் தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் பெற கணிப்பொறிக் கல்வி உதவுகிறது. சில பொத்தான்களை அழுத்தினால், அவர்களது சந்தேகங்களுக்கு விடை கிடைத்து அவர்களது புரிதலை மேம்படுத்துகிறது.

 

உங்கள் மாணவர்கள் படிக்கும் விதத்தை மாற்றவும் அறிவைப் புகுத்தவும் உங்கள் வகுப்பறைக்குள் ஈ-லேர்னிங்கைப் புகுத்துங்கள்.