சர்வதேச பெண்கள் தினத்தை உங்கள் குழந்தையுடன் கொண்டாடுவது எப்படி

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளில், பெண்கள் செய்யும் தியாகங்களையும் சமூகத்தில் அவர்கள் வைத்திருக்கும் சக்தியையும் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தையுடன் ஒரு சிறந்த கல்விபுகுத்தும் சர்வதேச பெண்கள் தினத்தை நீங்கள் இவ்வாறு திட்டமிடலாம்

ஒரு திரைப்பட இரவைத் திட்டமிடுங்கள்

குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் வலிமை வாய்ந்த பெண் கதாபாத்திரங்கள் பல திரைப்படங்களில் உண்டு. உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, பெண்களின் வலிமையைக் கொண்டாடும் ஒரு திரைப்படத்தை அவர்களுடன் அமர்ந்து பாருங்கள்.

இணையத்தில் சுயசரிதம் படியுங்கள்

இன்று, சர்வதேச பெண்கள் தினத்திற்கு உகந்தவாறு சக்தி வாய்ந்த பெண்களின் சுயசரிதங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வடிவமைப்பாளர்கள் முதல் கலைஞர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை தங்கள் வாழ்வில் பல சாதனைகளைப் புரிந்த தலைசிறந்த பெண்மணிகளின் வாழ்க்கையை நீங்களும் உங்கள் குழந்தையும் ஒன்றாகக் கண்டறியலாம்.

ஒரு உணவை ஒன்றாகத் தயார் செய்யுங்கள்

நீங்களும் உங்கள் குழந்தையும் சில எளிதான சுவாரசியமான உணவை ஒன்றாகச் சமைக்கலாம். அவர்களே YouTube -ஐப் பார்த்து செய்முறையைக் கண்டுபிடிக்கட்டும் மேலும் இரவு உணவையும் தீர்மானிக்கட்டும். இது சமையல் என்பது ஒரு பொதுவான வாழ்க்கைக்குத் தேவையானத் திறன், பாலினம் சார்ந்த பணி அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தும்.

ஒரு போட்டி விளையாட்டு விளையாடுங்கள்

நீங்கள் ஒன்றாக வேடிக்கையான போட்டி விளையாட்டுகள் விளையாட வேண்டும். பெரும்பாலானக் குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கும், ஆனால் பெரியவர்களான நமக்கு அவர்களுடன் விளையாட நேரம் கிடைப்பதில்லை. ஒன்றாக விளையாடும் பல விளையாட்டுகள் ஆன்லைனில் உள்ளன

ஒரு மெய்நிகர் வாழ்த்து அட்டை வடிவமைக்க அவர்களுக்கு உதவுங்கள்

ஆன்லைனில் வாழ்த்து அட்டைகள் உருவாக்க உங்கள் குழந்தையை உந்துங்கள், அவற்றை சர்வதேச பெண்கள் தினத்தன்று ஆசிரியர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்புங்கள். Canva போன்ற ஆன்லைன் கருவிகள் கொண்டு செயல்முறையை எளிதாகவும் கற்பனைத் திறன் மிகுந்தும் எடுத்துச் செல்லலாம்.

இந்த மகிழ்ச்சியான வழிகளால், சர்வதேச பெண்கள் தினம் பற்றி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதோடு 

மட்டுமல்லாமல் சிறப்பாகவும் நேரத்தை செலவழிக்கலாம்.