உங்கள் குழந்தையின் உலகப்பார்வையை கணிப்பொறிகள் எவ்வாறு விரிவாக்குகின்றன

 

இந்த பூமி உலகளாவிய அளவில் சமமாகிக்கொண்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு மற்றும் பரவலான பயன்பாடு மூலம், நாடுகளுக்கு இடையில் உள்ள எல்லைகளைத் தாண்டி, பல கலாச்சாரங்களின் கலவையாக நாம் மாறிக்கொண்டு வருகிறோம்.

 

இந்தப் புதிய உலகில், மக்களின் உலகப்பார்வையை விரிவாக்க கணிப்பொறிகளின் பங்கு மிக முக்கியமானது. உங்கள் குழந்தை இந்த புதிய உலகில் நுழைகையில், கணிப்பொறி சார்ந்த கற்றலின் நன்மைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும், அப்பொழுது தான் அவர்களது உலகப்பார்வை விரிவடைந்து எதிர்காலத்திற்குத் தகுந்த குடிமக்களாக மாற முடியும்.

 

உங்கள் குழந்தை அவர்களது வீட்டின் வசதியில் இருந்துக்கொண்டே பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்குள் மெய்நிகராக நுழையக் கூடிய ஒரு தளத்தை கணிப்பொறி தருகிறது. புதிய கலாச்சாரத்தை ஆய்வு செய்வதுடன், பிற நாடுகளின் நிலக்குறிகள், பூங்காக்கள், சுற்றுலாத்தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் உட்பட பலவற்றை கற்க இது உதவுகிறது.

 

உலகின் பிற பகுதிகளின் உணவுப்பழக்கங்கள், மொழிகள் மற்றும் பண்டிகைகள் குறித்த ஏராளமானத் தகவல்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களது ஆர்வத்திற்கு கணிப்பொறி தீனிபோடுகிறது. இதனால் உங்கள் குழந்தை தனக்குத் தெரிந்த உலகைத் தாண்டி பார்க்க உதவும், உலகை ஒரு பெரும் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கும் இது உதவும்.

 

வீட்டிற்கு அருகில், சொந்த நாட்டில் அவர்கள் சென்றிராத இடங்கள் குறித்து குழந்தைகள் அறிந்துகொள்வார்கள், சொந்த நாடு குறித்த கண்ணோட்டத்தை விரிவாக்க இது உதவும். கிராமப் பகுதியில் உள்ள இளம்வயதினர் நகரங்கள் குறித்து அறியலாம் மேலும் நகரத்துக் குழந்தைகள் அவர்கள் அறிந்திராத வயல்கள் மற்றும் காடுகளைப் பற்றி அறியலாம்.

 

இது போன்ற ஊடாடும் கற்றல் முறை மற்றும் ஆய்வுகளால் உங்கள் குழந்தை ஆவலாக, ஆர்வமுள்ள எப்பொழுதும் அறிவுப்பசி கொண்ட ஒரு உலகக் குடிமகனாக வளர்ச்சியடைய முடியும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கணிப்பொறி சார்ந்த கற்றல் மூலம் அவர்களுக்குள் ஒரு திரியைப் பற்ற வைத்து, அது அவர்களுக்குள் ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்னும் ஜுவாலையாக எரிவதைப் பார்ப்பது தான்.

 

கண் மூடித்திறப்பதற்குள், நீங்கள் அறிந்தே இராத நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் குறித்தத் தகவல்களை உங்கள் குழந்தை உங்களிடம் சொல்வார்கள், அதே நேரத்தில் அவர்களது உலக மற்றும் கலாச்சார அறிவையும் வளர்த்துக்கொள்வார்கள்.

 உங்கள் குழந்தையை வழக்கத்திற்கு மாறான இம்முறைகள் மூலம் கற்க வையுங்கள்

 

புத்தகங்கள் மற்றும் வகுப்பறைகள் மூலம் மட்டுமே அறிவைப் பெற முடியும் என்ற காலம் மலையேறி போய்விட்டது. தொழில்நுட்பத்தின் கட்டிற்கடங்கா வளர்ச்சியின் காரணமாக நாளைய குழந்தைகளுக்கு தனித்துவமான மற்றும் வழக்கத்திற்கு மாறான வழிகளிலும் இப்பொழுது கற்பிக்க முடியும்.

 

பெற்றோர்களான நீங்கள், மெய்நிகர் கற்றல்முறையை உங்கள் நன்மைக்கு உபயோகித்து உங்கள் குழந்தை கற்கும் முறையில் புரட்சி செய்து, கற்றலை சிறந்த முறையில் கொண்டுசெல்ல உதவலாம்.

 

அவ்வாறு செய்ய எளிய நான்கு வழிகள் இதோ.

  • ஒரு ஆன்லைன் திட்டத்திற்குப் பதிவு செய்யுங்கள்

உங்கள் குழந்தையுடன் நீங்கள் சேர்ந்து கற்க விரும்பும் ஒரு புதிய திறனைத் தேர்ந்தெடுங்கள். பாட்டுப் பாடுதல், ஆடுதல் அல்லது சங்கீதம் கற்றல் போல எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு புதிய திறனைக் கற்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடன் பிணைப்பு ஏற்படுத்தவும் இது உதவும்.

 

  • ஒன்றாகச் சமைத்தல்

பிணைப்பு ஏற்படுத்தவும் கற்கவும் இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். யூடியூபில் இருக்கும் எளிதாகப் பின்பற்றக்கூடிய ஒரு செய்முறையை ஒன்றாக கற்று அனுபவிக்கலாம். செய்முறையைப் பின்பற்றுதல் மற்றும் உணவை வழங்குதல் மூலம் உங்கள் குழந்தையும் கற்றுக்கொள்வார்கள்.

 

  • இணையத்தில் விளையாட்டு விளையாடுதல்

பல வேடிக்கையான ஊடாடும் பலர் விளையாடும் விளையாட்டுகள் இணையத்தில் உள்ளன. ஸ்க்ராபில் விளையாட்டு போன்றவை விளையாடுவதால் உங்கள் குழந்தையின் மூளை சிறப்பாக வேலை செய்து சிறந்த முறை ஈ-லேர்னிங்காகத் திகழும். அதே நேரத்தில், நீங்கள் இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கலாம்.

 

  • கல்வியூட்டும் திரைப்படத்தைப் பாருங்கள்

உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவர சிறந்த வழிகளில் ஒன்று ஒளி-ஒலி முறை தான். கல்வியூட்டும் சுவாரஸ்யமான திரைப்படத்தைக் காட்டுவதன் மூலம் ஒன்றாக மகிழ்வதுடன் அவர்களுக்கு ஏதேனும் கற்றும் தரலாம்.

 

இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையுடன் அவர்களது பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒரு கல்வியூட்டும் சுவாரஸ்யமான அனுபவத்தை நீங்கள் பெறலாம்.