ஒரு ஆசிரியரின் பங்கை ஆன்லைன் கற்றல் முறை எப்படி மாற்றி வரையறுத்துள்ளது?

இப்போதுள்ள புதிய வழக்கத்தின் படி, ஆசிரியர்களின் பங்கு வகுப்பறையைத் தாண்டி விரிவடைந்துள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் போது, பொருத்தமான வகுப்பறை சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்கள் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். பாடங்களில் மாணவர்கள் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு காட்சிகள், அனிமேட் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் விளையாட்டு சார்ந்த புதிர்கள் மூலம் ஊடாடும் கற்றல் அனுபவத்தை உருவாக்க ஆசிரியர்கள் புதுப்புது வழிகளை உருவாக்கியுள்ளர்கள். வகுப்பறையின் எல்லைகளை மாற்றியமைக்க ஆசிரியர்கள் உருவாக்கிய சில வழிகள் இதோ:

 

-லேர்னிங் மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு மாறுதல்:

ஈ-லேர்னிங் மூலம், தொழில்நுட்பத்தைக் கொண்டு மாணவர்கள் ஈ-லேர்னிங்கிற்கு மாற ஆசிரியர்கள் உதவி செய்துள்ளார்கள். ஒவ்வொரு மாணவரின் தேவையைப் பூர்த்தி செய்ய தனிப்பட்ட கற்றல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் தங்கள் சொந்த வேகத்தில் கற்கலாம் மற்றும் பாடங்களை ஒருங்கிணைந்து கற்கலாம்.

 

பாடத்தை உருவாக்குபவர்களாக ஆசிரியர்கள்:

ஏற்கனவே இருக்கும் பாடங்களைச் சார்ந்து இல்லாமல் ஆசிரியர்களே பாடங்களை உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள். மாணவர்களுக்குப் புதிய ஆர்வமூட்டும், ஊடாடும் பாடங்களை வடிவமைப்பதன் மூலம், மாணவர்கள் முழுமையாக வளர அவர்கள் பங்களித்துள்ளார்கள்.

 

கேள்விகளும் அழுத்தங்களும்:

புதிய சூழலில், பெற்றோர்களின் கேள்விகள் மற்றும் ஆன்லைன் கற்றலின் அழுத்தங்களைக் கையாள ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளார்கள். ஆசிரியர்களும் மாணவர்களாக மாறி புதிய கற்றல் முறைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.

 

இந்த ஆசிரியர் தின நன்னாளில், மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்ற தங்களை அர்ப்பணித்துள்ள இந்த ஆசிரியர்களை நாம் கொண்டாடுவோம். Dell வெபினாரில் இணையுங்கள்: https://www.dellaarambh.com/webinars/

 

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!