இணையத்தில் இருந்து தகவலை உபயோகிக்கும் அல்லது பகிரும் முன் நீங்கள் இதைச் செய்யவேண்டும்

 

நாம் இன்று வாழும் வாழ்வில், ஒரு பொத்தானின் முனையில் அபிரிதமானத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.இருப்பினும், இணையத்தில் இருக்கும் அத்தனைத் தகவல்களும் உண்மையானவையோ  அல்லது நம்பக்கூடியவையோ அல்ல. இந்தத் தகவல்களை எடுக்கும், உபயோகிக்கும் அல்லது பகிரும் முன்பு நீங்கள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 

  • தகவலின் ஆதாரத்தை எப்பொழுதும் சரிபாருங்கள்

இணையத்தில் பல பக்கங்கள் மற்றும் ஆதாரங்கள் போலியானத் தகவல்களைப் பகிருவதால், உங்கள் தகவலின் ஆதாரம் சரியானதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். நம்பகமான ஆதாரங்களின் தகவல் கொண்டு உங்கள் பக்கத்தின் உண்மைத்தன்மையை சரிபாருங்கள்.

 

  • தகவல்களை உபயோகிக்கும் பொழுது பொறுப்பாகப் பெயரைக் கொடுங்கள்

கணிப்பொறி சார்ந்த கற்றலின் பொழுது, நீங்கள் எப்பொழுது தகவல்களை உபயோகித்தாலும், எழுதியவரின் பெயரை குறிப்பிட்டு, அவரது எழுத்தை நீங்கள் குறித்ததைக் குறிப்பிடவேண்டும். அப்படித் தருவதன் மூலம், எழுத்துத் திருட்டை நீங்கள் தவிர்க்கிறீர்கள்.

 

  • உங்கள் சொந்த வார்த்தைகளில் பொழிப்புரை செய்தல் வேண்டும்

உங்கள் பணி, வீட்டுப்பாடம், அல்லது செயல்திட்டங்களுக்கு தகவலை உபயோகிக்கும் பொழுது, சொல்லுக்குச் சொல் அதே தகவலை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. உங்கள் சொந்த சொற்களில் நீங்கள் பொழிப்புரை செய்ய வேண்டும்.

 

  • உண்மைபோலில்லாத இணைப்புகளைத் திறக்க வேண்டாம்

ஒரு இணைப்பு உண்மையானது அல்லது நேரானது போலத் தெரியவில்லை என்றால், அதைத் திறக்க வேண்டாம்.

 

கணிப்பொறி சார்ந்த கற்றலின் பொழுது ஒரு இணைப்பு உண்மையானதா என்று இவ்வாறு சரிப்பார்க்கலாம்:

  • டொமைன் பெயரைக் கவனமாகப் பார்க்கவும், ஏனென்றால் ஆபத்தான இணைப்புகளில் எண்கள் அல்லது தவறான எழுத்துக்கள் இருக்கும்.
  • இணைப்பைத் திறக்கும் முன்பு, அதன் மீது வைத்து வெள்ளோட்டம் பாருங்கள்.
  • பக்கங்களில் உதிக்கும் விளம்பரங்களைத் திறக்க வேண்டாம்.
  • Https என்பது பாதுகாப்பானது, http ஆபத்தானதாக

 

  • ஒரே ஆதாரத்தில் இருந்து அனைத்துத் தகவல்களையும் எடுக்க வேண்டாம்

உங்கள் பணி, வீட்டுப்பாடம், அல்லது செயல்திட்டங்களுக்கு ஒரே ஆதாரத்தில் இருந்து அனைத்துத் தகவல்களையும் எடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தகவல் அறிந்த, முழுமையான கருத்திற்கு பல ஆதாரங்களைக் குறிப்பிடுங்கள்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், தகவல்களைப் பொறுப்பாக நம்பகமாகப் பகிருவதை நீங்கள் உறுதி செய்யலாம்.