பெற்றோர்களே - உங்கள் குழந்தைக்கு முதல் மடிக்கணினி வாங்கும் பொழுது இவற்றை நினைவு கூறுங்கள்

அன்றாட வாழ்வில் கணிப்பொறிகளும் மடிக்கணினிகளும் தவிர்க்க முடியாத பகுதி ஆகிவிட்டன. நாம் அனைவரும் இவற்றை அன்றாடம் பயன்படுத்துகிறோம், அதனால் நம் குழந்தைகள் இவற்றைக் கேட்க ஆரம்பித்தால், அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கணிப்பொறிகளின் அளவு சிறியதாகச் சிறியதாக, கணிப்பொறி கற்கும் வயதும் சிறியதாகிறது.

உங்கள் குழந்தையின் வயதைக் கருத்தில் கொள்ளுங்கள்

குழந்தைகள் சீக்கிரமாக சுதந்திரத்தையும் தனிமையையும் தேட ஆரம்பித்துவிடுவார்கள், அதனால் அவர்களுக்கு மடிக்கணினி வாங்கித்தரும் பொழுது அவர்களது முழு திறனுக்கு வளரும் வண்ணம் கற்பதற்கு மடிக்கணினி உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதில் நுண்ணிய சிந்தனை பெரும் ஆற்றல் பெற்று சிக்கலான நேரம் சார்ந்த விளையாட்டுகளை அனுபவித்து ஆன்லைனில் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்வார்கள்.

உங்கள் குழந்தைக்கு எதில் ஈடுபாடு உள்ளது?

ஒரு மடிக்கணினியை வாங்கும் முன்பு, நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஏன் இந்த முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணங்களை யோசியுங்கள். உங்கள் குழந்தையின் கல்விக்குத் துணை புரிய கணிப்பொறி வாங்குகிறீர்களா அல்லது விளையாட மற்றும் திரைப்படம் பார்க்க வாங்குகிறீர்களா? காரணம் எதுவாக இருப்பினும், உங்கள் குழந்தையின் விருப்பம் மற்றும் பாதுகாப்பை முதல் இடத்தில் வையுங்கள்.

உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள்

இன்று பல மடிக்கணினிகள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. உங்கள் பட்ஜெட் மற்றும் உங்களுக்குத் தேவையான அம்சங்களைப் பொறுத்து உங்கள் குழந்தையின் வாழ்வில் சிறப்பாகப் பொருந்தும் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். விலை அதிகமான மடிக்கணினியை வாங்குகிறீர்கள் என்றால், அதைக் கையாளுவதற்கு உங்கள் குழந்தைக்குப் பயிற்சி கொடுங்கள்.

தேவைப்படும் அம்சங்களைக் கவனியுங்கள்

மேலும், திரை அளவு, சாதனத்தின் எடை மற்றும் தாங்கும் திறன் இவை அனைத்தும் மிகவும் முக்கியம். 12 வயதிற்கும் குறைவானக் குழந்தைகளுக்கு சிறிய மற்றும் எடைகுறைந்த மடிக்கணினிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீடித்து நிலைக்கும் தன்மையைத் தன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கும் மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கற்றல் வளங்களை உருவாக்குவதற்கு மேலும் தகவல்களைப் பெற எங்கள் வெபினாரைப் பார்க்கவும்

https://www.dellaarambh.com/webinars/