இயல்புநிலை திரும்புகையில் கலப்பு முறை கல்வியை உங்கள் குழந்தை ஏற்றுக்கொள்ள நீங்கள் எப்படி உதவ முடியும் என்று அறியுங்கள்

கடந்த இரு வருடங்களாக உலகமே லாக்டவுனில் இருந்த போது, மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து நடந்து அனைத்துமே டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டிருந்தது. அதன் விளைவாக, ஆன்லைன் வகுப்புகள் புதிய இயல்புநிலையாக மாறிவிட்டது. இப்பொழுது பாதிப்படைந்தவர் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கத் தொடங்கியவுடன், மீண்டும் பள்ளிக்குச் செல்ல பெரும்பாலானக் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். சீக்கிரம் மாறுவது சிறிது கடினமாக இருக்கலாம். அவர்களது மாற்றம் எளிதாக இருக்க இதோ சில குறிப்புகள்:

 

  1. புதிய வழக்கம்: உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் அவரது அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் மாறும். அதனால், பள்ளியில் ஒரு சாதாரண நாள் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவலை அவர்களுக்குக் கொடுக்கும் பொழுது அவர்கள் அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
  2. தூங்கும் அட்டவணை: ஆன்லைன் கல்வியால் தூங்கும் பழக்கமும் மாறிவிட்டது. குழந்தைகளை இரவு சீக்கிரம் தூங்கச் செய்து காலையில் வழக்கமான பள்ளி நேரத்திற்கு எழுப்பி, அவர்கள் எட்டு மணி நேரம் தூக்கம் பெறுமாறு ஒரு முறையான தூக்க நேரத்தை அமைக்க நீங்கள் உதவலாம்.
  3. தகவல் அளிப்பதே பிரதானம்: இது போன்ற பெரிய மாற்றங்களை உங்கள் குழந்தை எளிதாக ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு சரியானத் தகவல்கள் கொடுத்து அவர்கள் கருத்தையும் கேளுங்கள். பிறகும் சிக்கல் தொடர்ந்தால், அவர்களது பள்ளி அல்லது நம்பிக்கைக்குரிய ஆசிரியரை அணுகுங்கள்.
  4. ஏற்றுக்கொள்ள உதவுங்கள்: மாற்றங்களை ஏற்றுக்கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு காலநேரம் ஆகலாம். உங்கள் குழந்தையின் வேகத்தைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்கள் சிக்கலை எதிர்கொண்டால், உங்களிடம் வந்து வழிகாட்டல் மற்றும் ஆதரவு கேட்கும் அளவிற்கு சுமூகமான சூழலை அவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யுங்கள்.

 

சிறப்பாகத் தயாராவது மற்றும் உங்கள் டிஜிட்டல் உலகக் குழந்தைகளை வளர்த்த எப்படி தயாராவது என்று அறியுங்கள். எங்கள் வெபினாரைப் பாருங்கள் - https://www.dellaarambh.com/webinars/