#டிஜிபேரன்ட்ஸ் – குழந்தைகளின் இணைய நேரத்தை ஆக்கபூர்வமாக நிர்வகிக்க 3 ஆலோசனைகள்

 

குழந்தைகள் விளையாடுவதற்கும் முடிவே இல்லாமல் உலாவுவதற்கும் இணையத்தை விரும்புவார்கள். முடிவே இல்லாத கற்றல் மற்றும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் கூடுதலாக உள்ளன.

 

இருப்பினும், இதில் ஒரு பின்னடைவு தெளிவாகத் தெரிகிறது. பல நேரங்களில், உலாவுவதில் மனக்கட்டுப்பாடு இல்லாமல், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கார்ட்டூன்கள் பார்க்கையில் பல மணி நேரங்கள் அபாயகரமாக வீணாகிவிடுவதும் உண்டு. அதனால் தான் பெற்றோர்களான நீங்கள் உங்கள் குழந்தைகளின் இணையம் மற்றும் திரை நேரத்தை ஆக்கபூர்வமாக மேலாண்மை செய்ய இந்த எளிய ஆலோசனைகளை நாங்கள் வழங்குகிறோம்.

 

  1. புதிய திறன்களைக் கற்க ஊக்குவியுங்கள்

 

ஓரிகாமி முதல் அறிவியல் ஆராய்ச்சிகள் வரை மற்றும் பாடுதல் முதல் புதிய மொழியைக் கற்பது வரை பலதரப்பட்ட ஊடகங்கள் மற்றும் ஈ-லேர்னிங் தளங்கள் மற்றும் செயலிகளை உங்கள் குழந்தைகள் உபயோகிக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

 

அவர்களது படைப்புகளை உலகிற்குப் பகிருங்கள். முடிந்த அளவு பின்னூட்டங்களை உங்கள் குழந்தைகள் பெறட்டும். இணையம், குழந்தைகள் மற்றும் தொழில்நுட்பத்தை உங்கள் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். எங்களை நம்புங்கள். நீங்கள் உணரும் முன்னரே, ஒவ்வொரு நாளும் கால் நீட்டிக்கொண்டு கார்ட்டூன் பார்ப்பதை விட பலவற்றை செய்ய ஆரம்பிப்பார்கள்.

 

  1. பொழுதுபோக்கு மற்றும் உய்யச் சிந்தனையை ஊக்குவியுங்கள்

 

பாடப்புத்தகங்களைத் தாண்டி பல செயல்முறை வகுப்புகளுக்குச் செல்ல உங்கள் குழந்தைகளை ஊக்குவியுங்கள். பியானோ போன்ற ஏதாவது இசைக்கருவி வாசிக்க உங்கள் குழந்தைக்கு விருப்பமாக இருக்கலாம். இணையதளங்களில் பல வகுப்புகள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு துறையில் அவர்கள் ஆசைவளர்க்க மென்மையாக உந்துங்கள்

 

சுடோகு மற்றும் குறுக்கெழுத்து போட்டி போன்ற அறிவை வளர்க்கும் விளையாட்டுகளை விளையாட அவர்களை ஊக்குவியுங்கள். இவை இணையத்தில் எளிதாகக் கிடைக்கும். இதனால் அவர்களது நினைவாற்றல் மற்றும் தர்க்கசிந்தனை வளரும்.

 

கிளாக்ஒர்க் பிரைன்(Clockwork Brain) அல்லது பிரைன்பீன்(Brainbean ) போன்ற செயலிகள் புதிர்கள், நினைவாற்றல் மற்றும் பிற கல்விசார்ந்த விளையாட்டுகள் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு சவாலாக இருந்து கற்றும் கொடுக்கும். உய்யச் சிந்தனை என்பது 21 ஆம் நூற்றாண்டில் அத்தியாவசியமான ஒன்றாகும், இதனால் நாளைய குழந்தைகள் இத்திறனை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.

 

  1. வழிக்காட்டுதல் மற்றும் வரையறுக்கப்பட்ட உபயோகம்

 

'வழிகாட்டுதல் உபயோகம்' போன்ற அம்சங்கள் குறிப்பிட்ட செயலிகளை நீங்கள் எவ்வளவு நேரம் உபயோகிக்கலாம் என்பதை கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் வெவ்வேறு வரையறைகளை வைத்துக்கொள்ளலாம். விளையாட்டுகள் மற்றும் நேரலை செயலிகளுக்கு அதிக கட்டுப்படும் வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் குழந்தைகள் அவர்களது நேரத்தைத் தொழில்நுட்பம் மூலம் ஆக்கபூர்வமாக உபயோகிக்கலாம்.