தொலைதூர கற்றல் - குழந்தைகள் தொடர்ந்து கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் இருக்க உதவும் 8 குறிப்புகள்

தொலைதூர கற்றல் யுகத்தில் மாணவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருப்பது கவர்ச்சியூட்டுவதாகும் இருக்கும் அதே நேரம் சவாலாகவும் இருக்கும். அவர்களைக் கற்றல் குறித்து ஆர்வமாக வைத்திருத்தல் மற்றும் அவர்களது ஆர்வத்திற்குத் தீனி போடுவதே இதில் முக்கிய அம்சமாகும். உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ:

 

  1. பெற்றோர்களுடன் கூட்டுசேருங்கள்: மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மாதம் இருமுறை வீடியோ கான்பரன்சிங் செய்வது சிறந்த வழியாகும். ஒரு ஆசிரியராக, வகுப்பறை நேரங்களைத் தாண்டி குழந்தைகளை ஈடுபாட்டுடன் வைத்திருக்க பெற்றோர்களுக்கு உதவும் டிஜிட்டல் கற்றல் வளங்களை நீங்கள் வழங்க வேண்டும்.
  2. கற்றலை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுங்கள்: டிக்டாக்கில் "60 நொடிகளில் அறிவியல் குறிப்புகள்" போன்ற அமர்வுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்களுடன் உங்களை இணைந்திருக்க வைக்கும்.
  3. நேர்மறை வலுவூட்டல் செயல்களை இரட்டிப்பாக்குங்கள்: கையால் வழங்கப்படும் பரிசுகள், அஞ்சல் மூலம் அனுப்பப்படும் சான்றிதழ்கள் ஆகியவை ஒரு குழந்தையை ஆழமாக ஊக்குவிக்கும்.
  4. மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்: குழுவாக அல்லது தனிப்பட்ட ஆலோசனை அமர்வுகளுக்கு வழிவகுத்துக் கொடுங்கள். படிப்பு, நடத்தை, சமூகத் தேவைகள் போன்றவற்றிற்கு கூடுதல் துணை இருந்தால் அனைத்து மாணவர்களும் பங்கேற்று ஈடுபடுவார்கள்.
  5. பாடங்களை எளிமையாக்குங்கள்: நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள் மற்றும் எப்படி கற்பிக்கிறீர்கள் என்பதை எளிமைப்படுத்துங்கள். பாடத்திட்டத்தில் இருக்கும் திறன்கள் மற்றும் கருத்துகளில் கவனம் செலுத்துங்கள். இது குழந்தையின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும்.
  6. தொழில்நுட்பத்தைத் தழுவுங்கள்: இசை, வீடியோ கேமிங், ஒலி வடிவமைப்பு மற்றும் பலவற்றை பாடங்களை உபயோகித்து மாணவர்களுக்கு வித்தியாசத்தைக் கொடுங்கள்.
  7. மாற்றத்தைக் கண்காணியுங்கள்: நேரம் விரயமாகாமல் இருக்க பாடங்களுக்கு நடுவில் உள்ள மாற்றங்களை முன்னரே திட்டமிடுங்கள். ஒரு டைமரை உபயோகியுங்கள்.
  8. மோசமான நிலைக்கும் தயாராக இருங்கள்: 3 சொற்கள். மோசமான இணைய இணைப்பு. அனைத்தும் தவறாகும் என்று நீங்கள் எதிர்பார்த்திருந்தால், உங்கள் இழப்புகளையும் நேரத்தையும் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

 

இது நிச்சயமாக நல்ல தொடக்கம் என்றாலும் கூட மேலும் குறிப்புகளுக்கு எங்கள் வெபினாரைப் பாருங்கள் - https://www.dellaarambh.com/webinars/