ஆசிரியர்கள் - ப்ரீ ஸ்கூலை ஆன்லைனில் கற்பிக்க 5 குறிப்புகள்

ப்ரீ ஸ்கூல் மாணவர்களுக்குக் கற்பிப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ப்ரீ ஸ்கூல்கள் ரிமோட் லேர்னிங் முறைக்கு மாறிவிட்டதால், ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் வல்லமையையும் ஒழுக்கத்தையும் தொடர்ந்தால் தான் அவர்களது கற்பித்தல்கள் சரியான விளைவை ஏற்படுத்த முடியும்

3 மற்றும் 4 வயது குழந்தைகளுக்கு ஆன்லைனில் கற்பிப்பதன் சிரமங்களே பல ப்ரீ ஸ்கூல் ஆசிரியர்களின் பிரச்சனையாக இருக்கிறது. அதனால் அடிப்படை கொள்கைகள் மாறாதவாறு பார்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்

மெய்நிகர் தளத்தில் ஆசிரியரைச் சந்தித்தல்

ஒரு வலிமையான வகுப்பறைச் சூழலை உருவாக்குவதற்கு வருடத்தின் தொடக்கத்திலேயே ஆசிரியரைச் சந்தியுங்கள் நிகழ்ச்சியை நடத்துவது ஒரு வாய்ப்பளிக்கும். பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களை சௌகரியமாக உணர வையுங்கள்.

வீடியோ கான்ஃபரன்சிங் தளங்கள் உங்கள் உற்றத் தோழனாக மாறப்போகின்றன

உங்கள் மாணவர்கள் உங்களைப் பார்த்து, உங்கள் குரலைக் கேட்டு , உங்களுடன் மற்றும் அவர்களது வகுப்பு மாணவர்களுடன் ஒட்டுதல் ஏற்படுவது மிகவும் முக்கியமாகும். இது உங்களைக் கலவரப்படுத்த விடாதீர்கள். வகுப்பறையில் உங்கள் மாணவர்களுக்குக் கற்பித்து அக்கறை கொள்வது போலவே வீடியோவிலும் செய்யுங்கள்.

உங்கள் மீது அன்பு செலுத்துங்கள்!

ப்ரீ ஸ்கூலை மெய்நிகர் வழியில் கற்பிப்பது மிகவும் கடினமானது. பொறுமையாக இருங்கள், நேர்மறை சிந்தனையுடன் அவர்களை ஈடுபடுத்துங்கள். நீங்கள் கச்சிதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களைக் கவனித்துக் கொள்ள மறக்காதீர்கள், உங்களுக்குப் போதுமான இடைவேளை கொடுத்து உங்களுக்கு மட்டும் என சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

உங்கள் பாடங்களைக் குறிப்பாகவும் உங்கள் செயல்முறைகளை அர்த்தத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள்

போஸ்டர்கள், ஆங்கர் அட்டைகள், வெள்ளை பலகைகள், வீடியோ டுடோரியல்கள் அல்லது உதாரங்கள் உபயோகியுங்கள். மாணவர்கள் கற்றதை பயன்படுத்துமாறு வீட்டுப்படங்கள் கொடுங்கள். உங்கள் பாடத்தை சிறிய பகுதிகளாகப் பிரித்து பல நடவடிக்கைகளை உட்புகுத்துங்கள்.

உங்கள் மாணவர்களைக் கொண்டாடுங்கள்

சிறு குழந்தைகளைப் பாராட்டி அவர்களது சாதனைகளுக்குப் பரிசுகள் கொடுக்கும் போது, அவர்கள் இன்னும் அதிக ஊக்கம் பெற்று மீண்டும் மீண்டும் சிறப்பாகச் செயல்படுவார்கள். மாணவர்களுக்கு டிஜிட்டல் பரிசுகள் அல்லது சான்றிதழ்களை அனுப்புவது அல்லது ஆன்லைன் வகுப்பறையில் கவனிக்க இயலாத மாணவர்களுக்குத் தனியாகக் கற்றுக்கொடுப்பது போன்றவை அவர்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்த உங்களுக்கு உதவும்.

உங்கள் ஈ-லேர்னிங் திறமைகளைக் கூர்மையாக்கவும் உங்கள் வகுப்புகளுக்கு தாக்கம் மிகுந்ததாக மாற்றவும் எங்களது வெபினார்களில் பங்குபெருங்கள்.

https://www.dellaarambh.com/webinars/