தொழில்நுட்பத்தை அணைத்துக்கொள்ளுங்கள், அச்சப்படாதீர்கள் – என்? என்பதற்கு 3 காரணங்கள்

டிஜிட்டல் உலகில் பெற்றோராக இருப்பது கடினமான ஒன்றாகும். ஆனால் பெற்றோரான நீங்கள் தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்சாமல் அதை அரவணைத்துக்கொண்டால், உங்கள் குழந்தையின் மீது அது ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு உங்கள் குழந்தையின் டிஜிட்டல் பயணத்தைப் பாதுகாப்பான ஒன்றாக மாற்றலாம். தொழில்நுட்பமானது சில வழிகளில் நம் அறிவுக்கண்களைத் திறக்கும் திறனுள்ளது.

 

  1. ஆர்வத்திற்குத் தீனிபோடும்

 

முடிவில்லா அறிவார்வத்திற்கு தொழில்நுட்பமானது அட்சய பத்திரமாக விளங்குகிறது. சாட்கள் அல்லது இணைய ஃபோரம்கள் மூலம் ஒரு பாடத்தில் தங்களின் ஆர்வத்தை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உங்கள் குழந்தை பகிர்ந்துக்கொள்ள இது அனுமதிக்கிறது. உங்கள் குழந்தைக்கு ஆர்வம் இருக்கும் பாடங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ள அவர்களை ஊக்குவியுங்கள் - அது ரோபாட்களை உருவாக்குவது எப்படி அல்லது ஓரிகாமியின் பிறப்பிடம் எது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த ஆர்வமானது உங்கள் குழந்தையை பல்வேறு விருப்பங்களை வளர்க்க அல்லது அற்புதமான வாழ்க்கைத் தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும்

 

  1. முன்னேற்றத்தை டிராக் செய்தல்

 

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நிலையான உரையாடல் இருப்பதற்குத் தொழில்நுட்பம் வழி வகுத்துள்ளது. குழந்தையின் முன்னேற்றத்தை டிராக் செய்தல் மூலம் கூடுதல் முயற்சி தேவைப்படும் பகுதிகளை அறிய முடியும். பிறகு ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அந்தப் பகுதிகளில் கவனம் செலுத்தி உங்கள் குழந்தையின் முழு ஆற்றலை வெளிக்கொணர முடியும்.

 

  1. திறந்த உரையாடல்கள்

 

தொழில்நுட்பத்தின் அடிப்படை மற்றும் தொடர்ந்து நடக்கும் பரிணாம வளர்ச்சி குறித்த உரையாடல்கள் உங்கள் குழந்தையைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதுடன் தொழில்நுட்பத்தின் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்க உதவும். ஆதரவு மற்றும் சுதந்திரம் இரண்டையும் சமப்படுத்துவது தான் இங்கே விஷயமாகும்.

 

டிஜிட்டல் பேரன்டிங் குறித்து மேலும் தகவல் அறிய எங்கள் வெபினார்களைப் பாருங்கள்  -

https://www.dellaarambh.com/webinars/