உங்கள் குழந்தைக்கு ஈ-லேர்னிங் நன்மை என்பதற்கான 5 காரணங்கள்

 

ஆன்லைன் கற்றலில் ஒரு மாபெரும் வளர்ச்சியை நாம் இப்பொழுது பார்க்கிறோம். அறிக்கைகளின் படி, இந்தியாவின் ஆன்லைன் சந்தையானது 2024 க்குள் ₹360 பில்லியன் மதிப்பை எட்டிவிடும் என்கிறது

ஒரு பெற்றோராக உங்களுக்கு உங்கள் குழந்தையின் ஈ-லேர்னிங் மற்றும் அதன் விளைவுகள் குறித்து கேள்விகள் இருக்கும். அவர்களது கற்றல் திறனை அதிகப்படுத்துவதுடன் ஒட்டுமொத்த அனுபவத்தில் இருந்து உங்கள் குழந்தை பல நன்மைகளை அடையலாம்.

நன்மைகள் இதோ-

உங்கள் குழந்தை இன்னும் பொறுப்பான நபராவார்

ஈ-லேர்னிங்கில், வீட்டுப்பணிகளைச் செய்யவும் வகுப்பறை விவாதங்களில் கலந்து கொள்ளவும் நினைவூட்ட யாரும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே சுய உந்துதலுடன் இருப்பார்கள்.

ஆர்வத்தையும் கற்பதற்கான ஆசையையும் வளர்க்கிறது

இணையத்தில் கோடிக்கணக்கானத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆன்லைன் கற்றலின் பல்வேறு முறைகளைக் கையாளுவதன் மூலம், அவர்கள் கற்பதற்கு ஆர்வமாக இருக்கும் தலைப்புகளைத் தேடித் கற்கலாம்.

குழந்தைகளின் ஒழுக்கம் அதிகரிக்கும்

வகுப்புக் கோப்பைகளைப் பராமரித்தல், பிற மாணவர்களுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் வீட்டுப்பணிகளைச் சமர்ப்பித்தல் மூலம், முறைப்படுத்தும் திறமைகளை உங்கள் குழந்தை நேரடியாகக் கற்பார்கள். சிறு வயது முதலே பணிகளை வரிசைப்படுத்த அவர்களுக்கு இது கற்றுக்கொடுக்கும்.

தனிப்பயணக்கப்பட்டக் கற்றல்

ஒலி, ஒளி அல்லது செய்து என பலதரப்பட்ட கற்றல் வழிகள் மூலம், உங்கள் குழந்தைக்குப் பிடித்த முறையில் அவர்கள் கல்வி கற்கலாம். ஆசிரியர்களை ஆன்லைனில் தொடர்புக்கொண்டு அல்லது தானே தீர்வு தேடி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

தொழில்நுட்பத்தைப் பொழுதுபோக்குக்கு அன்றி கற்றலுக்கு உபயோகிக்கலாம்

உங்கள் குழந்தை எப்பொழுது சமூக வலைத்தளங்களில் இருக்கிறார் என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்றால், ஈ-லேர்னிங் அந்தக் கவலையைப் போக்கி விடும். ஆன்லைனில் கொட்டிக்கிடக்கும் பல கற்றல் முறைகள் மூலம், பொழுதுபோக்கு இல்லாமல் வேறு பயன்களுக்காகவும் அவர்கள் தொழில்நுட்பத்தை உபயோகிப்பார்கள்.

இந்த முறை கற்றலுக்கு உங்கள் குழந்தைகளை ஊக்குவியுங்கள், ஏனென்றால் வெற்றிகரமானப் பண்புகள் வளர்க்க மற்றும் அவர்களின் வாழ்க்கை முழுமைக்குமானக் குறிக்கோளை வளர்க்க இது உதவும்.