ஆன்லைன் விரிவுரைகளுக்குச் செல்லும் முன் நினைவில் கொள்ளவேண்டிய 6 விஷயங்கள்

 

கற்றலின் எதிர்காலமே ஆன்லைன் விரிவுரைகள் தான். தற்போதைய சூழ்நிலையில் அவசரப்படுத்தப்பட்டாலும், இந்த விரிவுரைகள் உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆரம்பத்தில் கடினமாக இருந்திருக்கலாம்.

 

உங்களுக்கு உதவுவதற்காக, விரும்பத்தக்க ஆன்லைன் விரிவுரைகளுக்கான ஆறு எளிய காணொளி இங்கிதக் குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

 

தவிர்க்க முடியாத சுற்றுப்புற இரைச்சல் இருந்தால், மியூட் செய்துவிடுங்கள்

உங்கள் சுற்றுப்புறத்தில், பாத்திரங்கள் உருட்டுவது போன்ற சப்தங்கள் ஏற்பட்டு உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையூறை ஏற்படுத்தலாம். உங்கள் வீட்டில் அது போல இடையூறுகள் இருக்கும்பட்சத்தில், மியூட் செய்துவிடுங்கள்.

 

வேண்டாம் என்று சொன்னாலொழிய உங்கள் காணொளியை எப்பொழுதும் ஆன் செய்து வையுங்கள்

உங்கள் வகுப்பை உயிர்ப்பாகவும் ஊடாடும் விதத்தில் வைக்கவும், எப்பொழுதும் உங்கள் காணொளியை ஆன் செய்து வையுங்கள். உங்கள் ஆசிரியர் வெற்றுத்திரையுடன் பேசுவதை விரும்பமாட்டார். உங்கள் ஆசிரியர் சொன்னால் மட்டுமே காணொளியை ஆஃப் செய்யுங்கள்.

 

குறிப்புகள் எடுக்க ஒரு புத்தகம் மற்றும் பேனாவை தயாராக வைத்திருங்கள்

கற்றலின் ஊடகம் வேறாக இருந்தாலும் கூட, அனுபவம் ஒன்றே தான். உங்கள் ஆசிரியர் பேசும்பொழுது, முக்கியமானக் குறிப்புகளை எழுத உங்கள் பக்கத்திலேயே புத்தகம் மற்றும் பேனாவை வைத்திருங்கள். 

 

சுருக்கப்பெயர் மற்றும் வட்டார மொழிகளைத் தவிர்க்கவும்

விரிவுரைகளில் சுருக்கப்பெயர் மற்றும் வட்டார மொழிகளை உபயோகிக்க வேண்டாம். நிஜமான வகுப்பறையில் நீங்கள் பராமரிக்கக்கூடிய அதே ஒழுங்கைப் பின்பற்றவும்.

 

எப்பொழுதும் சரியான நேரத்தைப் பின்பற்றவும்

ஆன்லைன் தளத்தை உங்கள் நலனுக்காக உபயோகிக்கவும். விரிவுரை ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பே காத்திருக்கும் அறையில் இணையவும். விரிவுரைக்கான மனநிலைக்கு உங்களைக் கொண்டு செல்வதுடன், பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள இது உங்களுக்கு உதவும்.

 

பங்கேற்றுக் கேள்விகள் கேட்கவும்

ஈடுபாட்டுடன் இருங்கள், கேள்விகள் கேளுங்கள் மற்றும் வகுப்பறையில் இருப்பது போன்ற சந்தேகங்களைக் கேளுங்கள். தளத்தின் முறையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வேறு ஒருவர் பேசும்பொழுது குறுக்கிடாதீர்கள்.

 

உங்கள் அடுத்த ஆன்லைன் விரிவுரையில் இந்தக் குறிப்புகளைப் பின்பற்றி ஆன்லைன் கற்றலின் இனிமையை அனுபவியுங்கள்.