மாணவர்களின் வெற்றிகரமான கல்விக்கு ஒரு 360⁰ அணுகுமுறையைத் தொழில்நுட்பம் இவ்வாறு வழங்குகிறது

 

மாணவர்களின் கற்றலுக்கான அனைத்து வழிகள் மற்றும் தொடுபுள்ளிகளை உள்ளடக்கியது 360 அணுகுமுறை. ஆய்வகங்கள் முதல் அவர்கள் பாடத்தை எடுத்துக்கும் கொள்ளும் ஊடகம் வரை, சக மாணவர் கற்றல் வரை, 360 கற்றல் என்பது ஒரு முழுமையான வளர்ச்சியை வழங்குகிறது.

இன்று, கற்றல் தொடர்பான இந்த அணுகுமுறையை தொழில்நுட்பம் பெரிதும் சாத்தியமாக்குகிறது. ஈ-புத்தகங்கள், PDFகள், ஒளி/ஒலி கற்றல், விருந்தினர் விரிவுரைகள், சர்வதேச வகுப்பறைகள், முனை முதல் முனை வரை கற்றல், பின்னூட்டங்கள் & வகுப்பறையின் சந்தேகம் தீர்த்தல் என்று பல ஊடாடும் சுவாரஸ்யமான முறைகளை வழங்குகிறது.

இதில் பல நன்மைகள் உண்டு:

 

  • தனிப்பயனாக்கப்பட்டக் கற்றல்

பாரம்பரிய முறை கற்றல் போலில்லாமல், டிஜிட்டல் கற்றலில் மாணவர்கள் கற்றுக்கொள்ள பல வழிகள் உள்ளன. ஒலி/ஒளி, சக மாணவருடன் கற்றல், ஈபுத்தகம் போல பல முறைகளில் மாணவர்கள் தங்களுக்கு மிகவும் வசதியான முறையில் கற்கலாம்.

 

  • அதிகரித்த நினைவுத்திறன்

ஒரு மாணவர் அவருக்குப் பிடித்தமான முறையில் கற்பதால், அது ஒலி, ஒளி அல்லது செய்தி எதுவாக இருப்பினும்,  அவர் படித்ததை நீண்ட காலம் நினைவில் வைத்திருப்பார்.

 

  • சுறுசுறுப்பான ஈடுபாடு

சுவாரஸ்யமான படக்காட்சிகள் போன்ற கற்றலின் வேடிக்கையான வழிகளை உபயோகிப்பதன் மூலம், வகுப்பறையில் சுறுசுறுப்பான ஈடுபாட்டினை ஆசிரியர் உருவாக்கமுடியும்.

 

  • ஒருங்கிணைந்த சக மாணவர் மூலம் கற்றல்

ஆன்லைன் வகுப்புகள், வீட்டுப்பணிகள் மற்றும் அவ்வப்போது செய்திகள் மூலம், மாணவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம் ஒன்றாக வளர்ந்து ஒருவருக்கு ஒருவர் கற்றுத்தரலாம்.

 

  • எதிர்காலத்திற்குத் தயாராக அவர்களுக்கு உதவுகிறது

எதிர்காலம் டிஜிட்டல் ரூபத்தில் தான் இருக்கப்போகிறது. PC கற்றல் முறை போன்ற நாளையக் கருவிகளை இன்றையக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், சிறிய வயதில் இருந்தே அவர்கள் பெரிதும் தேவைப்படுகின்ற திறமையினை வளர்த்துக்கொள்வார்கள்.

 

டெல் ஆரம்ப்பில்(Dell Aarambh) நாங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தொழில்நுட்பத்தின் சக்தி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி டிஜிட்டல் இந்தியா என்னும் கனவை நனவாக்க முனைகிறோம். நாடு முழுவதும் வகுப்பறைகளில், PC சார்ந்த கற்றல் முறை கொண்டு வருவதன் மூலம், கற்பனைத்திறன், சிந்திக்கும் திறன் மற்றும் சிக்கல்களை விடுவிக்கும் திறன் ஆகியவற்றை இன்றைய குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம், ஏனென்றால் அவர்கள் தானே நாளைய எதிர்காலம்.