ஆன்லைனில் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைக்க 5 வழிகள்

அதிகரித்துக்கொண்டே இருக்கும் இன்றைய டிஜிட்டல் உலகில், உங்கள் குழந்தைகள் அவர்களின் பெரும்பான்மையான நேரத்தை ஆன்லைனில் தான் கழிக்கிறார்கள். வகுப்புகள் முதல் ஓய்வு நேரம், சமூக ஊடாடுதல் வரை அவர்கள் வாழ்வின் பெரும்பான்மை நேரம் ஆன்லைனிற்கு மாறிவிட்டது.

ஆன்லைன் உலகில் உள்ள மக்களுடன் உங்கள் குழந்தை ஊடாடும் பொழுது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்களான நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதை உறுதிப்படுத்துவதற்கான 5 வழிகள் இதோ:

விழிப்புணர்வை அதிகரித்தல்

ஆன்லைன் உலகின் ஆபத்துகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கடவுச்சொற்களை ரகசியமாக வைத்திருத்தலின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்குச் சொல்லுங்கள் மேலும் சைபர்செக்யூரிட்டி போன்ற கருத்துருக்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

உங்கள் குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்

இணையத்தில் தங்கள் சொந்த விவரங்களைப் பகிருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள். சொந்த விவரங்கள் என்பது அலைப்பேசி எண் மற்றும் முகவரி போன்ற நுண்தகவலாகவும் இருக்கலாம்.

உங்கள் கணிப்பொறியை பாதுகாப்பாக வையுங்கள்

நிதி மோசடிக்கு இட்டுச்செல்லும் ஸ்கேம்மர், ஹேக்கர் மற்றும் பிற ஆன்லைன் அச்சுறுத்தல்களில் இருந்து உங்கள் குடும்பத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அது போன்ற ஆபத்துகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கச் செய்யுங்கள் மேலும் பாதுகாப்பாக இருக்க உங்கள் மென்பொருள் பாதுகாப்பை மேம்படுத்துங்கள்.

ஆன்லைன் நடவடிக்கையைக் கண்காணியுங்கள்

ஆன்லைனில் இருக்கும் அனைத்துக் களங்களின் கருத்துகளும் இணையத்தில் உண்டு. தேவையில்லாதக் கருத்துகளில் இருந்து உங்கள் குழந்தைகளை விலக்கி வைத்திருப்பது பெற்றோரான உங்கள் கடமை. இதனை நீங்கள் பெற்றோர் கட்டுப்பாடு தேர்வு மூலம் செய்யலாம்.

சைபர்புல்லியிங்கைத் தவிருங்கள்

இணையத்தில் பதிவிடும் முன்பு அதைப்பற்றி நன்றாக யோசிப்பதற்கு உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். ஆன்லைனில் பிறர் மீது அநாகரிகமான இரக்கமில்லாமல் இருப்பதன் விளைவுகளை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.

இவற்றைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர்கள் பாதுகாப்பானக் கற்றல் அனுபவத்தைப் பெறுவதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

ஆன்லைனில் கற்கும் பொழுது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தல் தொடர்பாக மேலும் அறிய எங்கள் வெபினாரில் இணையுங்கள் -  

https://www.dellaarambh.com/webinars/