நீங்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய 10 டைப்பிங் விளையாட்டுகள்!

 

டைப்பிங் என்று வருகையில், இரண்டு விஷயங்களே முதன்மையானவை – துல்லியம் மற்றும் வேகம். உங்கள் சக மாணவர்களுக்கு இணையாக வேகமாக டைப்பிங் செய்ய முடியாத ஒரே காரணத்தால் நீங்கள் வகுப்பில் பின் தங்கினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாக்கவும். நல்ல செய்தியாதெனில், முயற்சி உண்மையாகவே பலன் தரும் என்பதே ஆகும்.

 

1. டைப்ரேஸர்

டைப்ரேஸர் என்பது ஒரு உலகளாவிய டைப்பிங் போட்டியாகும் மற்றும் உலகம் முழுவவதிலுமிருந்தும் பிற போட்டியாளர்களுடன் போட்டியிடுவதன் வழியாக அது உங்களது டைப்பிங் வேகத்தை அதிகரிக்கும்

 

2. டைப்பிங் ஏலியன்

கற்றல் குதூகலம் அற்றது என யார் சொன்னது? ஒரு சுற்று டைப்பிங் ஏலியன் விளையாடிப்பாருங்கள், உங்களுக்கு அது மிகவும் பிடித்தமானதாக அஇருக்கும்! டைப்பிங் நுட்பங்கள் மற்றும் வேகத்தை அதிகரிக்க இந்த விளையாட்டு ஒரு நல்ல முறையாகும்

 

3. கீமேன்

கீமேன், உங்கள் கண்-கை ஒருங்கமைப்பினை உருவாக்கவும் மற்றும் உங்கள் டைப்பிங் வேகத்தை துரிதமாக அதிகரிக்கவும் உதவிடும் வகையில் ஒரு நிலையை (எழுத்துகள் மற்றும் எண்களை தனித்தனியாகக் கொண்டு, சுலபம் என்பதில் துவங்கி கடினம் என்பது வரை) கட்டமைக்க உதவும்.

 

4. கீபோர்டு நீன்ஜா

பெயருக்கு ஏற்றவாறு, கீபோர்டு நீன்ஜா என்பது, விளையாட்டை அனுபவித்து விளையாடும் அதே நேரத்தில், வேகமாகவும் மற்றும் திறன்வாய்ந்த முறையிலும் டைப் செய்வதை ஏதுவாக்கும் விளையாட்டாகும்.

 

5. டைப்-எ-பலூன்

கீபோர்டிலுள்ள வரிசைகளை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு கடின அளவுகளைக் கொண்ட விளையாட்டு (ஹார்டு, மீடியம் மற்றும் சுலபம்). உங்கள் டைப்பிங்கிற்கான சிறந்த பயிற்சி டைப் - எ - பலூன் ஆகும்.

 

6. தி டைப்பிங் ஆஃப் தி கோஸ்ட்ஸ்

பெயர் அச்சமூட்டுவதாக இருப்பினும், டைப்பிங் ஆஃப் தி கோஸ்ட்ஸ், உங்களை நீங்களே பேய்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் ஒரு சவால் விளையாட்டாகும் - இச்செயல்முறையில் உங்கள் கண்-கை ஒருங்கமைப்பு மேம்படும்.

 

7. வோர்டுடிரிஸ் ஸ்கிராபிள்

வோர்டுடிரிஸ் ஸ்கிராபிள் உங்கள் டைப்பிங் ரிஃப்ளெக்ஸ்கள் மற்றும் சொற்தொகுதிகள் இரண்டிற்கும் பயிற்சிளிப்பதற்கானதொரு வாய்ப்பாகும். நீங்கள் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டிலும் உங்களை ஒரு மேம்பட்ட “டைப்பராக” மாற்றுவதற்கான குதூகலமூட்டும் குறிப்புகள் மற்றும் டிரிக்குகளை இந்த விளையாட்டு கொண்டுள்ளது.

 

8. டைப் தி ஆல்ஃபபெட்

ஒரு டைப்பிங் ஸ்பீட்ஸ்டெராகத் திகழ உங்களுக்குத் தேவையான சரியான கருவி டைப் தி ஆல்ஃபபெட் ஆகும். யார் அறிந்தது, அது உங்கள் வகுப்பில் ஒரு போட்டியாகலாம்

 

9. ஃபாஸ்ட் ஃபயர் டைப்பர்

உங்கள் சொற்தொகுதியை மேம்படுத்தவும் மற்றும் ஒரு டைப்பிங் மாஸ்டராகவும் மாற வேண்டுமா? ஒரு முக்கியப் பணி அல்லது தேர்விற்கு முன்பாக, உங்களை சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல, நீங்கள் விளையாடுவதற்கு ஏற்றதொரு சரியான விளையாட்டு ஃபாஸ்ட் ஃபயர் டைப்பர் ஆகும்.

 

10. டைப்பிங் மாஸ்டர் 10 ஃபார் விண்டோஸ்

டைப்பிங் மாஸ்டர் 10 ஃபார் விண்டோஸ் வெறும் ஓரு விளையாட்டு அல்ல. அது உங்களது டைப்பிங்கை சிறப்பானதாக மாற்றவும் மற்றும் உங்களுக்குள்ள சிக்கல்களை (ஏதேனும் இருப்பின்) தீர்க்கவும் எற்ற சரியான, பதிவிறக்கம் செய்யத்தக்க பயிற்சியாகும்.

இப்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களது கணிணியை சூப்பர்-புரொடெக்டிவாக மாற்றுவதே ஆகும். ஹேப்பி டைப்பிங்!