2 - ஹைபிரிட் டீச்சிங்கிற்கான முக்கியக் குறிப்புக்கள்

ஹைபிரிட் கற்றல் சூழலின் உருவாக்கத்தை நவீன கல்வித் தொழில்நுட்பம் அனுமதித்துள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் நேரிலும் மற்றும் ரிமோட் வழியிலும் கல்வியாளர்கள் கற்பிக்கலாம்.

மாணவர்கள் அதிக அளவில் நன்மையடையக்கூடிய முறை இது. இந்த முறையின் புகழ் அதிகரித்துக்கொண்டே வருகிறது மேலும் வரப்போகும் மாதங்கள் மற்றும் வருடங்களில் இதன் தேவை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஹைபிரிட் கற்றலின் குறிப்புகளைப் புரிந்துகொள்ளுவது மிகவும் அவசியமாகிறது.

இரண்டு பிரிவினருக்கும் சமமானக் கவனம் கொடுங்கள்

வகுப்பறையில் உங்களுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு நீங்கள் கற்பிக்கும் பொழுது அந்த மாணவர்களுக்கு அதிகக் கவனம் கொடுப்பது இயல்பாக மனப்போக்காகும். இந்த வலைக்குள் விழாமல் இரு பிரிவினருக்கும் சமமானக் கவனம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

இரண்டு பிரிவினர்களும் ஒன்றாகப் பணியாற்றுவதை உறுதி செய்யுங்கள்

உங்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மாணவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஊடாட வாய்ப்பளியுங்கள். மாணவர்களுக்கும் எந்த பிரிவினையும் இல்லாதிருக்க இருபிரிவினரும் ஒன்றாக பயிற்சிகள் மற்றும் செயல்திட்டங்களில் ஈடுபடுவதை உறுதி செய்யுங்கள்.

நாம் கல்வி குறித்து எண்ணும் முறையை ஹைபிரிட் கற்றல் முறை மாற்றுகிறது மேலும் முன்னர் இருந்த 

பல தடைகளையும் அது அகற்றுகிறது. மாணவர்களுக்கு சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கல்விக்கான வாய்ப்பையும் இது அதிகரிக்கிறது.

ஹைபிரிட் கற்றல் குறித்து மேலும் அறிய எங்கள் வெப்பினரைப் பாருங்கள் – https://www.dellaarambh.com/webinars/