21ஆம் நூற்றாண்டில் குழந்தை வளர்ப்பு

நாம் குழந்தைகளின் பெற்றோர்களாக தொழில்நுட்ப பயன்பாடுகளை நாம் பல்வேறு கோணங்களில் அணுகுகிறோம். ஆனால் நமது குழந்தைகள் டிஜிட்டல் பயன்பாட்டில் மூழ்கியிருக்கிறார்கள் என்ற நிதர்சனமான உண்மையை நாம் மறுக்க முடியாது. நமது குழந்தைகள் தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்துவதற்கான தேவைகளை கண்காணிப்பதும் அதை பற்றி நாம் அறிந்திருப்பதும் முக்கியமாகும்.

1. தொழில்நுட்ப ஆற்றலை குறித்த புரிதல்

தொழில்நுட்ப அம்சங்களின் உதவியோடு குழந்தைகளால் எந்த எல்லை வரை செல்வதற்கான சாத்தியம் உண்டு என்பதை பெற்றோர்களாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். தொழில்நுட்பங்களால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உணர வைக்க வேண்டியது அவசியம்.

2. ஆன்லைன் தொடர்புறவுகள் மற்றும் ஒழுங்குமுறைகள்

குழந்தைகள் இணையம் வாயிலாக எதைப் பார்க்கிறார்கள், எதைக் கேட்கிறார்கள், யாரைச் சந்திக்கிறார்கள், தங்களைப் பற்றிய எந்தெந்த விவரங்களை எல்லாம் அவர்கள் பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

3. ஆன்லைனில் படைப்புத்திறன் மற்றும் கவனம் செலுத்தல்

ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் கல்விமுறையில் பல்வேறு உதவிகுறிப்புகளும் நுட்பமான வழிமுறைகளும் இருக்கின்றன. மாணவர்கள் தங்கள் அதிகபட்ச திறனை எட்டுவதற்கான சாத்தியத்தை அவை ஏற்படுத்துகின்றன.

21 ஆம் நூற்றாண்டில் குழந்தைவளர்ப்பு நிகழ்வுக்கான அமர்வில் கலந்துக் கொள்ளுங்கள். டிஜிட்டல் முறைக்கு பழக்கப்பட்டுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் இந்த தொழில்நுட்ப யுகத்தில் எப்படி நல்ல முறையில் வளர்ப்பது என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைத்து அதற்கு வேண்டிய கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களையும் வழங்குகிறது.

https://www.dellaarambh.com/webinars/