நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தொழில்நுட்பத்தில் சாதனை புரிந்த 3 இளம் இந்திய சாதனையாளர்கள்!

அற்புதங்களை நிகழ்த்த வயது ஒரு தடை கிடையாது. தொழில்நுட்பத்தில் பல்வேறு கண்டுபிடிப்பாளர்களை நீங்கள் அறிந்துகொள்ளும்பொழுது, உங்களைப் போன்ற சில இளைஞர்களே இருப்பார்கள், ஒருவேளை உங்களைவிட இளையவர்களும் இருக்கலாம்! இந்த இளம் சாதனையாளர்கள் தொழில்நுட்பத் துறையில் தங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகள் காரணமாக அனைவரையும் பெருமைகொள்ளச் செய்கிறார்கள்.

அவர்களில் சிலர் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது!

1. டெனித் ஆதித்யா - அசாதாரண கண்டுபிடிப்பாளர்

சரிசெய்யத்தக்க மின்சார எக்ஸ்டெண்சன் பலகை மற்றும் வாழை இலை பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவை பற்றி எப்போதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? இந்த கண்டுபிடிப்புகளின் பின்னால் டெனித் என்ற பையன் இருக்கிறார்! அவர் ஏற்கனவே 17 கண்டுபிடிப்புகளை தனது பெயரில் வைத்திருக்கிறார். 2013ம் ஆண்டில் ராஷ்டிரபதி பவனில் அவருக்கு வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.

2. அங்கத் தர்யானி - அடுத்த எலோன் மஸ்க்!

பதின்பருவ வயதினரான மும்பையைச் சேர்ந்த அங்கத் தர்யானி என்பவர் திறந்த-மூல மென்பொருளை பயன்படுத்தி, கண்பார்வையற்றவர்களுக்கான ஒரு மெய்நிகர் மின்னணு-வாசிப்பு சாதனம், சூரிய சக்தியில் இயங்கும் ஒரு படகு, கர்டுயினோ என்று அழைக்கப்படும் ஒரு தானியங்கி தோட்டப்பராமரிப்பு சாதனம் மற்றும் இந்தியாவின் மலிவான 3டி பிரிண்டர் என்று அழைக்கப்படும் ஷார்க்போட் ஆகியவற்றை உருவாக்கினார்.  அவர் பள்ளியிலிருந்து வெளியேறி, குழந்தைகளுக்கான விலைகுறைவான டிஐஓய் கிட்களை விற்க தனது சொந்த கிட் நிறுவனத்தைத் தொடங்கினார்.

3. ஆனந்த கங்காதரன் & மொஹக் பல்லா - அதிபுத்திசாலி இரட்டையர்கள்

டெல்லியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் மொஹக் ஆகிய இரு நண்பர்களும், மொபைல் சாதனங்களுக்கான ஒரு சிறிய சார்ஜராகவும் செயல்படும் ஒரு காலணியை (ஷூ) கண்டுபிடித்தனர். அதை அவர்கள் "வாக்கி மொபி சார்ஜர்" என்று அழைக்கின்றனர், இது பொதுவாக சார்ஜர்கள் உருவாக்கும் 5 வோல்ட்களைக் காட்டிலும் 6 வோல்ட் மின்சாரத்தை உருவாக்குகிறது.

இந்த இளம் சாதனையாளர்கள், புதுமையாக சிந்திக்க மற்றும் உருவாக்க தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளனர். உங்கள் வயது எதுவாக இருந்தாலும், உங்களுக்கு ஆதரவாக உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு எந்தவித தடையும் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். இவர்களின் செயல்களில் ஈர்க்கப்பட்டு, இந்த வேடிக்கையான தொழில்நுட்ப-பொழுதுபோக்குகளை முயற்சிப்பதன் மூலம் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்களின் சாகசத்தை தொடங்குங்கள்!

எந்தவொரு வயது மிகவும் குறைந்தது இல்லை மற்றும் எந்தவொரு கனவு மிகவும் பெரியது இல்லை. இப்பொழுதே தொடங்குங்கள்!