உங்கள் மாணவர்கள் விரும்பும் 4 மைக்ரோஷாப்ட் ஆஃபிஸ் பாடத்திட்டங்கள்

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் என்பது மிகவும் பயனுள்ள கருவியாகும், இது தகவல், தரவு மற்றும் புள்ளிவிவரங்களை ஒழுங்கமைக்க, நிர்வகிக்க மற்றும் முன்வைக்க அலுவலகம், வீடு மற்றும் பள்ளியில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

 

மாணவர்களுக்கு வேடிக்கையான கற்றல் அனுபவத்தைப் பெற உதவும் 4 மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் பாடம் திட்டங்கள் இதோ இங்கே உள்ளது.

 • மைக்ரோஷாப்ட் வோர்டு பாடத்திட்டம் -

  வோர்ட் என்பது ஒரு பிரபலமான நிரலாகும், இது முதன்மையாக கட்டுரைகள், பரிசோதனைகள் மற்றும் வினாடி வினாக்கள் போன்ற ஆவணங்களை உருவாக்க பயன்படுகிறது. வோர்டு பல எளிய மற்றும் பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது, அது தகவல்களைப் படிப்பதையும் மற்றும் புரிந்துகொள்வதையும் எளிதாக்குகின்றன. உதாரணத்திற்கு, இலக்கணப் பிழைகளை முன்னிலைப்படுத்துவதன் மூலமும், இலக்கணப்படி எல்லாவற்றையும் சரியானதாக்க திருத்தங்களை பரிந்துரைப்பதன் மூலமும் இது ஆங்கில கட்டுரை எழுதுவதில் உங்களுக்கு உதவுகிறது.
 • மைக்ரோ எக்ஸல் பாடத்திட்டங்கள்

  இந்த எக்ஸல், தரவை எளிதான வகையில் ஒழுங்கமைக்க ஏதுவாக்குகிறது மற்றும் அடிப்படையான மற்றும் சிக்கலான கணித கணக்குகளை செய்ய முடியும். இது தரவுக் குவியல்களை வண்ணமயமான விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களாக மாற்றுகிறது, மேலும் கணிப்புகளைச் செய்ய அதை பகுப்பாய்வு செய்கிறது. உதாரணத்திற்கு, சரியான சூத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கழித்தல் போன்ற கணித தீர்வுகளைச் செய்ய மாணவர்கள் எக்ஸ்லைப் பயன்படுத்தலாம். 
 • மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் பாடத்திட்டம் – தொழில்முறைரீதியான  மற்றும் நிலையான வடிவமைப்பை உருவாக்குவதன் மூலம் விளக்கக்காட்சிகளை ஒழுங்கமைக்கவும் கட்டமைக்கவும் பவர்பாயிண்ட் உதவுகிறது. மேலும் இது உள்ளடக்கத்திற்கு ஒரு விளக்க பின்னணியை வழங்குகிறது மற்றும் அதிக காட்சி தாக்கத்திற்காக ஸ்லைடுகளை அனிமேஷன் செய்கிறது. இது வரலாறு, புவியியல், அறிவியல் உள்ளடக்கதை  பாடப் புத்தகங்களிலிருந்து படிப்பதற்குப் பதிலாக மாணவர்கள் அதை மிகவும் வேடிக்கையாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
 • மைக்ரோசாப்ட் பப்ளிஷர் பாடத்திட்டம் – இந்த பப்ளிஷர், மாணவர்களை படைப்புத்திறன், கலைத்திறன் மற்றும் கற்பனைத்திறன் கொண்டவர்களாக மாற்றுகிறது. பின்வரும் காரணங்களுக்காக இது வகுப்பறையில் பயனுள்ளதாக இருக்கிறது.
  • மாணவர்கள் அவர்களது ப்ரசன்டேஷன் / வாய்வழி தேர்வுகளின் போது ஒரு கதையை எழுதலாம் மற்றும் அதை விளக்கலாம்
  • அவர்கள் ப்ரொஜக்ட் / அசைண்மெண்ட்களுக்கு ஒரு ஊடாடும் செய்திமடலை உருவாக்க முடியும்.
  • கலை மற்றும் கைவினைகளுக்கான டிஜிட்டல் பட்டியல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளை உருவாக்க பப்ளிஷரைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஆசிரியராக நீங்கள், நிச்சயமாக மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் சர்டிஃபிக்கேஷனுக்கு தயாராக வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரத்தின்படி உங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கான சமீபத்திய கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் இருப்பதால், மேலே உள்ள பாடங்களை இன்னும் திறமையாகவும் எளிதாகவும் கற்பிக்க இந்த சர்டிஃபிக்கேஷன் உதவும். கற்றலுடன் உங்கள் மாணவரின் உறவை மேம்படுத்தவும் மாற்றவும் இந்த திறன்கள் உங்களுக்கு உதவும்.