ஆசிரியர்களுக்கான 5 இலவச இணையவழி கற்பிப்புக் கருவிகள்

கற்பித்தலை உங்கள் மாணவர்களுக்கு அதிக விளையாட்டுத்தனமாகவும் மற்றும் கலந்துரையாடலாகவும் உருவாக்க விரும்புகிறீர்களா? உங்கள் மாணவர்களை வகுப்பில் சிறந்த விதத்தில் ஈடுபடுத்த விரும்புகிறீர்களா? இதைச் செய்வதற்கு இணையவழி கற்பிப்பு கருவிகளே சாவியாகும். வீடியோக்கள், படக்காட்சிகள், விளையாட்டுகள், மற்றும் குழு விவாத செயல்பாடுகள் போன்றவை உங்கள் சார்பில் முக்கிய கருவிகளாக இருக்க வேண்டும் மேலும் நீங்கள் மாணவர்கள் போல தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கும் போது, வகுப்பறையில் அற்புதமான விஷயங்கள் நடக்கும்.வகுப்பறையில் கணினியை ஒருங்கிணைப்பது 21 ஆம் நூற்றாண்டில் வேகமாக வளர்வதற்கு மாணவர்களுக்கு தேவைப்படும் முக்கிய தொழில்நுட்ப திறன்களை பலப்படுத்துவது மட்டுமின்றி மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது மற்றும் கற்றலையும் மேம்படுத்துகிறது.  [1]

இந்த ஆறு கருவிகளும் உங்கள் மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்தும் மற்றும் கருத்துக்களை நன்கு புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவும்!

1. Edmodo

மாணவர்கள் குழுக்களாக படிக்க விரும்புகின்றார்கள். அதே நேரத்தில், மாணவர்கள் பொதுவாக டிஜிட்டல் உலகில் நுழைவதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு அம்சங்களையும் இணைத்து எட்மோடா ஆசிரியர்கள் ஆன்லைனில்  வீட்டுப்பாடத்தை வழங்கவும் மற்றும் மதிப்பிடவும் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சமூக ஊடக அரங்கை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் வீட்டுப்பாடம் சரியான நேரத்தில் திருத்தப்படுவது குறித்து உற்சாகமடைந்துள்ளனர். மேலும் உங்களது அடுத்த வகுப்பில் என்ன நடக்கும் என்பதை அறிய ஆவலாய் காத்திருக்கிறார்கள்!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பள்ளி சார்பாக பதிவு செய்து ஒரு படிப்புக் குழுவை உருவாக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்ததும் உங்கள் மாணவர்களிடம் குழு குறியீட்டை பகிர்ந்து கொண்டு பாடத்தை துவங்கலாம்! நீங்கள் பதிவு செய்து உங்கள் வகுப்புக் குழுவை உருவாக்குவது போன்ற தளம் குறித்த ஒரு படக்காட்சி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

2. Kahoot!

வகுப்புக்கான கேள்வித்தாள்கள் மற்றும் வினாடிவினாவை வடிவமைக்க உதவி தேவையா? கஹூட் என்பது உங்கள் சேவைக்காக கிடைக்கப் பெறும் ஒரு இலவசமான பயனருக்கு ஏற்ற கருவியாகும். ஒரு ஆசிரியர் அவருடைய மாணவர்களின் அறிவை சோதிக்க ஒரு வினாடி வினா, கணக்கெடுப்பு அல்லது கேள்வித்தாளை வடிவமைக்கலாம். மாணவர்கள் பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். “கஹூட்கள்” என குறிப்பிடப்படும் வினாடி மற்றும் கேள்வித்தாள்கள் வகுப்பறையில் விளையாட்டு போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்கெடுப்பவர்கள் தங்கள் சொந்த கணினியில் பதிலளிக்கிறார்கள், அதேநேரத்தில் ஒரு ‘அனல்பறக்கும் நேரத்தை’ உருவாக்கி வகுப்பை ஒன்றிணைக்க ஒரு  பகிர்வு திரையில் விளையாட்டுகள் காண்பிக்கப்படுகின்றன. உங்கள் சொந்த வினாடி வினாவை உருவாக்குவது எவ்வளவு எளிது என்பது இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

3. Schoology

It’s a learning management system to facilitate the creation of class rosters, curricula, and calendars. It also keeps track of interactions among students and student assessment results, among other things. You can add assignments, quizzes, media albums among other resources to make learning fun for your students. It’s a great tool to promote interactive learning, with its basic package being free. Here’s a look at the endless possibilities this tool has to offer.

4. Desmos

பலகையில் வரைபடங்கள் வரைவது அதிக நேரம் எடுக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மணிநேரமே பள்ளியில் ஒதுக்கியிருப்பதனால், வரைபடங்களை உடனடியாக வரையும் மற்றும் காண்பிக்கும் ஒரு கருவி நமக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
டெஸ்மோஸ் என்பது கற்பனை செய்யக் கூடிய எந்த செயல்பாட்டையும் வரைபடமாக்கக் கூடிய நம்பமுடியாத அளவு வேகமான இணையவழி கால்குலேட்டர் ஆகும். இது பயனர்களுக்கு ஸ்லைடர்களை சேர்க்கவும், பின்செயல்களை செய்யவும் மற்றும் பிற காரியங்களுக்கு மத்தியில் முழு தரவு அட்டவணைகளையும் வைக்கவும் உதவுகிறது. ஒருங்கிணைந்த வடிவியல் மற்றும் நேரியல் சமன்பாடுகள் போன்ற கடினமான பாடங்களை கற்பிக்கும் போது உங்கள் வகுப்பிலுள்ள மாணவர்களை அதில் ஈடுபடுத்துவது கடினமாக இருக்கலாம், இங்குதான் டெஸ்மோஸ் உங்களுக்கு உதவுகிறது. இந்தக் கருவி பாடப்புத்தகங்களுக்கு அப்பால் செல்ல உங்களுக்கு உதவுகிறது  மேலும் மாணவர்கள் வகுப்பறைகளில் ஈர்பாட்டுடன் இருக்கும் போது அவர்களுக்கு சமீபத்திய தகவல்களை வழங்குகிறது.

5. Duolingo

மொழிகளை கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வமில்லாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் எளிதாக சலிப்படைந்து விடுகிறார்கள். மொழிகளை கற்றுக்கொடுக்க பயன்படுத்தப்படும் காலங்கடந்த கற்பித்தல் முறைகள் பணியை மேலும் சவால் நிறைந்ததாக்குகிறது.

டூயோலிங்கோ என்பது மாணவர்களுக்கு கற்றலை மேலும் விளையாட்டாக்குவதற்காகவும் விவாதித்தல் போலாக்குவதற்காகவும் இருபது மொழிகளில் விரிவான வழிகாட்டல்களைக் கொண்டுள்ள ஒரு மொழி கற்றல் செயலி மற்றும் இணையதளம் ஆகும்.
டூயோலிங்கோ என்பது பாடங்களின் விளையாட்டுத் திறன் ஆதாரமாகும். பல கருவிகள் மற்றும் செயலிகள் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) மீது கவனம் செலுத்தும் போது, டூயோலிங்கோ தைரியமாக மொழிகளை கற்பதில் முயற்சியெடுத்துள்ளது. எழுத்துக்களை கற்றுக் கொள்ளுதல், அதன்பின் வார்த்தைகளை கற்றுக் கொள்ளுதல், அதன்பின் வாக்கியங்களை கற்றுக் கொள்ளுதல் என்ற முறையை இது பின்பற்றவில்லை. அதிக சிக்கலான வாக்கியங்களைத் தொடர்ந்து எளிய வாக்கியங்கள் துவங்கும் ஒரு தனித்துவமான கற்றல் முறையை இது பின்பற்றுகிறது.


பள்ளிக்கூடங்களுக்கான டூயோலிங்கோவை பயன்படுத்தி பல்வேறு மொழிகளுக்கான பாடத்திட்டங்களை நீங்களே உருவாக்கலாம். அதனை நீங்களே இங்கே செய்யலாம்.