5 நவீன கணிப்பீடுகளை சாத்தியமாக்கியவர்கள்

நமது வீட்டுவேலைகளை செய்வதிலிருந்து நமது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது வரை – இன்று, நாம் அனைத்திற்கும் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் 50 ஆண்டுகளுக்கு பின்னால் சென்றோம்என்றால், இது நிகழ்வல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். உலக வரலாற்றில் ஒப்பீட்டளவில் ஒரு புதிய கண்டுபிடிப்பான, கம்ப்யூட்டர்கள் பல்லாண்டுகள் கடின உழைப்பு, ஆய்வு, ஆராயச்சிமற்றும் கனவின் விளைவாக பிறந்த ஒன்றாகும்; அது சாத்தியமில்லாதவற்றையும் செய்யக்கூடிய ஒரு இயந்திரம்.

 

1. அல் குவரீஸிமி, கம்ப்யூட்டர் அறிவியலின் தாத்தா

முகமது இப்ன மூசா அல்-குவரீஸிமி என்பவர் பாக்தாதைச் சார்ந்த ஒரு பாராசீக கணிதவியலாளர், வானியலாளர்,  ஜோதிடர், புவியியலாள் மற்றும் அறிஞரும் கூட. அல்-குவரீஸிமி கணித கணிப்புநெறி கோட்பாடுகளை உருவாக்கயவர், அதன் காரணமாக அவர் கம்ப்யூட்டர் அறிவியலின் தாத்தா என்று அழைக்கப்படுகிறார்.

இன்று, ஒரு கணிப்புநெறி எனப்படும் கட்டளைகளின் வரிசையின் உதவியுடன் நாம் மென்பொருட்களை உருவாக்குகிறோம். கணிப்புநெறிகள் இல்லாமல், நவீன கம்ப்யூட்டர்கள் வந்திருக்க முடியாது. கம்ப்யூட்டரை ”மூடுவது” போன்ற எளிய விஷயங்களைத் தேடுவதற்கான கூகுளின் திறனிலிருந்து, இந்த அனைத்து செயல்பாடுகளும் அல்-குவரீஸிமியால் 1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட விதிகளின் அடிப்படையிலானவை! இது ஆச்சரியமளிக்கிறதல்லவா?

 

2. சார்லஸ் பாபேஜ், முதல் கம்ப்யூட்டரை தயாரித்தவர்

சார்லஸ் பாபேஜ், 1791ல் இலண்டனின் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர், ஒரு பொதுவான புரோகிராம் செய்யக்கூடிய கம்ப்யூட்டரின் யோசனைக்கு பின்னால் மூளையாக இருப்பவர். அவர் தனது வாழ்நாளை இரண்டு வெவ்வேறு கம்ப்யூட்டர்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் செலவிட்டார். முதலாவது, மாறுபாட்டு இன்ஜின் என்று அழைக்கப்படுகிறது, அது 1830களின் ஆரம்பத்தில் பகுதி நிறைவு செய்யப்பட்டது. பகுத்தாய்முறை சார்ந்த இன்ஜின், இது அவரது இரண்டாவது மற்றும் மிகவும் சிக்கலான வடிவதைதினைக் கொண்ட ஒரு இன்ஜின், அது ஒரு போதும் நிறைவு செய்யப்படவில்லை. எனினும், இரண்டும் மிகவும் ஆற்றல்மிக்க கணிக்கும் கருவிகளைக் கொண்டிருந்தன மற்றும் அவரது காலத்தில் யோசனைகள் மற்றும் நடைமுறையைப் பொருத்தளவில் புரட்சிகரமானவையாக இருந்தன.

அவரது இயந்திரங்கள் அடிப்படையில் வரலாற்றில் முதல் கம்ப்யூட்டர்கள் ஆகும்!

 

3. ஆலன் டூரிங், நவீன கம்ப்யூட்டரின் தந்தை

ஆலன்டூரிங் இரண்டாம் உலகப் போரின் நாயகன் ஆவார், அவர், தனது குழுவினருடன், பிளட்ச்லே பார்க்கில், பாம்பே எனப்படும் ஒரு கணிக்கும் இயந்திரத்தினைக் கட்டமைத்தார், அது நாஜி எனிக்மா இயந்திரத்தித்தைப் பயன்படுத்தி மறையாக்கப்பட்ட தகவல்களை குறியகற்றம் செய்த்து. ஆலன் டூரிங்கிற்கு அது இல்லை என்றால், போர் இன்னும் 8 ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கும்!

அவரது பிற பங்களிப்புகளுடன் (இன்னும் பல உள்ளன!), ஆலன் டூரிங் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கிற்கான பாதையையும் வகுத்தார். ஆரம்ப கால புரோகிராம்கள் தங்களின் நினைவகத்தில் புரோகிராம்களை சேமிக்கவில்லை. ஒரு புதிய புணியாக இந்த கம்ப்யூட்ர்களை அமைப்பதற்காக, இயந்திரங்களின் சில ஒயரிங்கை மாற்றுவதும், கையினால் கேபிள்களை ரீ-ரூட் செய்வதும் ஸ்விட்ச்களை அமைப்பதும் அவசியமானதாக இருந்தது. கிட்டத்தட்ட 7 பதின்மகளுக்கு முன்னால், ஆலன் டூரிங் புரோகிராம்களை ஸ்டோர் செய்யக்கூடிய முதல் கம்ப்யூட்டரை உருவாக்கினார், அது நாம் அறிந்தவாறு கமப்யூட்டர்களுக்கு ஒரு மதிப்பிடமுடியாத ஒரு பங்களிப்பாகும்.

 

4. டக்ளஸ் இங்கல்பார்ட் – மவுஸின் கண்டுபிடிப்பிற்குகு பொறுப்பாக இருக்கும் மனிதர்

ஒரு மவுஸ் இல்லாமல் ஒரு கம்ப்யூட்டரை இயக்குவது எத்தனை சிரம்மானது என்று உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? நிச்சயமாக, திரு. இங்கல்பார்ட்டின் முயற்சியினால் அத்தகைய சாத்தியத்தினை நாம் ஒரு போதும் கற்பனை செய்ய வேண்டியதில்லை! செயல்பாடுகளை நோக்கு சுட்டுவதன் மூலம் கம்ப்யூட்டர்களுடன் நாம் எளிதில் இடைவினையாற்ற மவுஸ் அனுமதிக்கிறது.இன்றும் உங்கள செய்ய வேண்டியது அனைத்து உங்கள் மவுஸுக்கு வழிகாட்டி க்ளிக் செய்தால் போதும் என்றிருக்கையில்,  மவுஸ் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால், அனைத்து கட்டளைகளும் கீபோர்டினைப் பயன்படுத்தி மட்டுமே எழுத வேண்டியிருந்தது.

 

5. டிம் பெர்னர்ஸ் லீ – வேர்ல்டு  ஒய்டு வெப்பை இரண்டு பதின்மங்களுக்க முன்னால் உருவாக்கினார்

ஆம், 25 ஆண்டுகளுக்கு முன்னால் www இல்லை. இன்டர்நெட் 1960களில் இரண்டு கம்ப்யூட்டர்களிடையே தகவல்களைப் பரிமாறுவதற்காக உருவாக்கப்பட்டது. எனினும் டிம் பெர்னர்ஸ் லீ அதை மக்களுக்கு மிகவும் உகந்த ஒன்றாக ஆக்க முடிவு செய்தார். அவர் அவ்வாறு செய்ததனால் தான் வேர்ல்டு ஒய்டு வெப் கண்டுபிடிக்கப்பட்டது.

தனது பேட்டிகளில் ஒன்றில், இந்த பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் விஞ்ஞானி வெப்பிற்கு சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தொழில்நுட்பங்களும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அவரது பங்களிப்பு அவற்றை ஒன்றாக சேர்ப்பது தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்! அது சாதாரணமானதுதான்.

 

அதே சமயம், நாம் இன்று அறிந்திருக்கிற கம்ப்யூட்டர்குளக்கு பொறுப்பாக இருக்கும் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் இஞ்சினியர்கள் இருக்கிறார்கள், இந்த ஐவரின் நோக்கம் மற்றும் பணியே நவீன கம்ப்யூட்டிங்கை சாத்தியமாக்கியது.