வகுப்பில் கற்றலில் போராடுபவர்களை ஊக்குவிக்க 5 வழிகள்

 

 

நம்மிடம் சிறந்த கற்பித்தல் திட்டம் உள்ளது, முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கென சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குதல், செமஸ்டர் சரியான நேரத்தில் நிறைவடைவதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் மற்றும் வரைபடங்கள் என பல இருந்தாலும் இன்னும் ஏதோ குறைகிறது என்றே சொல்லலாம். சரிதானே?? ஒரு சாதாரண மாணவரும் சிறந்த வெற்றியைப் பெறுவதைக் காணும்போது அது மகிழ்ச்சியாக இருக்காதா என்ன?

மாணவர்களை ஊக்குவிப்பதற்கென PC யைப் பயன்படுத்தி வகுப்பறையில் பயன்படுத்தக்கூடிய 5 உத்திகள் இங்கே:

  • மாணவரின் மனதில் உள்ளதை புரிந்து கொள்ளுங்கள்: மாணவர்களிடம் கற்றல் குறித்த ஒரு மறைக்கப்பட்ட நம்பிக்கை உள்ளது. அவர்கள் அவர்களிடம் சில திறன்களும் திறமையும் இல்லாமல் பிறந்து விட்டார்கள் என்று நம்புகிறார்கள், மேலும் அவர்களை ஊக்குவித்தால்  மட்டுமே இந்த எண்ணம் அவர்களிடம் இருந்து போகும். இதை அவர்கள்  கடக்க வேண்டுமென்றால் அவர்களைப் புகழ்வது ஒன்று தான் அதற்கான மிக முக்கிய  அம்சம் ஆகும். உதாரணத்திற்கு ஒவ்வொரு வாரமும் உங்கள் அசைன்மெண்ட் பணிகளில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள். அருமை, நீங்கள் உங்கள் வாசிப்பை நன்கு பயிற்சித்து வருகிறீர்கள், உங்கள் வரைதல் மிக நன்றாக இருக்கிறது. திறன்களுக்கான பாராட்டு நீண்டகால கற்றலை ஊக்குவிக்கிறது மற்றும் அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது. 
  • நண்பர் வழி வழிகாட்டல் திட்டம்- உங்கள் மாணவருக்கு எப்போதும் ஒரு ஆசிரியராக மட்டும் இருக்காதீர்கள், அதற்கு பதிலாக அவர்களின் நண்பராக முயற்சி செய்யுங்கள். இது அவர்கள் உங்கள் மீது நம்பிக்கையையும் அவர்கள் மேல் தன்னம்பிக்கையையும் பெற உதவும், இதன் விளைவாக அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட ஆரம்பிப்பார்கள். கல்வி மற்றும் கற்றலுக்கான நவீன முறை எதுவெனில், ஒன் ட்ரைவ் மற்றும் இமெயில்கள் மூலம் ஆன்லைனில் இணைந்திருப்பது ஆகும். இந்த தளங்களின் மூலம் உங்கள் டேட்டாவை சேமிக்க முடியும் மேலும் பகிர்ந்து கொள்ள முடியும்.
  • 2*4 டெக்னிக்கை முயற்சிக்கவும் எளியது மற்றும் பயனுள்ளது. இந்த டெக்னிக் மாணவர்கள் 4 நாட்களுக்கு 2 நிமிடங்கள் என அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்த பரிந்துரைக்கும். அவர்களது நண்பர்கள் பற்றியோ அல்லது அவர்களுக்கு பிடித்த பாடத்தைப் பற்றியோ எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் பேசலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் மாணவர்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்வீர்கள், நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள், அவர்களை வருத்துவது என்ன என்பதைப் பற்றி கூட கலந்தாய்வு செய்வீர்கள். 
  • குழு செயல்பாடுகளுக்கு ஊக்கப்படுத்தவும் - குழு பணிகள் மாணவர்களை ஊக்குவிக்கவும் மேலும் ஈடுபாட்டோடு கற்கவும்,  மற்றும் தகவல்தொடர்புகளில் அவர்களை ஊக்குவிக்கவும் செய்யும் ஒரு சிறந்த முறையாகும். குழுப் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் குழு உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்  மற்றும் தனித்து செயல்படும் மாணவர்களைக் காட்டிலும் குழுவில் செயல்படுவோர் அதிக தன்னம்பிக்கையோடும், செயற்திறனோடும் இருப்பர். ( த நேஷனல் அக்கடமிக் ப்ரஸ் -  https://www.nap.edu/read/5287/chapter/3).

 

  • முன்னேற்றத்தை கண்காணியுங்கள் -  நேர்மறை (கள்) விட எதிர்மறையை தான் மனிதர்கள் அதிகம் பார்க்க முனைகிறார்கள். குழந்தைகளின் முன்னேற்ற அறிக்கையைக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் அவர்களிடம் நேர்மறைத் தன்மையை வளர்க்கலாம். முன்னேற்றத்தை வரைபடங்கள் மூலம் காண்பிக்கலாம் மற்றும் அவர்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதை நம்ப வைக்க முடியும்.

உத்வேகம் தரும் ஆசிரியர்கள் உண்மையான அரவணைப்பையும் பச்சாதாபத்தையும் பொழிகிறார்கள், இது மாணவர்களை அவர்களின் சிறந்த பதிப்புகளாக உருவாக ஊக்குவிக்கிறது. மேலும் உங்கள் கற்றலை நல்லதிலிருந்து சிறந்தவையாக மாற்றும்.