மேக்கர்ஸ்பேஸ் என்பது ஒரு எதிர்கால நூலகமாகும்

கல்வியின் தோற்றத்தை மாற்றும் தொழில்நுட்பத்துடன், நாடு முழுவதிலுமுள்ள பள்ளிகளில் பிரபலமாகி வரும் அநேக கல்வி முறைகள் காணப்படுகின்றன. வகுப்பறையிலிருந்து இணையவழி குழு கல்வி முறைக்கு மாறுவதனால், டிஜிட்டல் முறையில் ஆர்வமுள்ள மாணவர்களை பள்ளிக்கூடத்தில் ஈடுபாட்டுடன் வைத்திருக்க  ஆசிரியர்களும் பல்வேறு கருவிகள் மற்றும் நுட்பங்களை கடைபிடிக்கின்றனர்.

மேக்கர்ஸ்பேஸ் என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமுள்ள கல்வி நிறுவனங்கள் முழு மனதுடன் பின்பற்றும் கருவிகளில் ஒன்றாகும்.

 

ஒரு கல்வி கட்டமைப்புக்குள் மேக்கர்ஸ்பேஸ் என்பது மாணவர்களுடைய எண்ணங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர உதவும் இலவசமான கருவிகள் மற்றும் வசதிகளை அவர்களுக்கு வழங்கும் ஒரு தளமாகும்.

“மேக்கர்ஸ்பேஸ் ஆனது செயல்சார் வடிவமைப்பு, உருவாக்கம், மற்றும் மறு செய்கை மூலம் ஆக்கப்பூர்வமான உயர்மட்ட பிரச்சனையை தீர்ப்பதில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஒரு முறையாகவே பெருமளவில் பார்க்கப்படுகிறது” (பக். 38) என கூறியுள்ள 2015ம் ஆண்டுக்கான புதிய ஊடக கூட்டமைப்பு (NMC) ஹாரிசான் அறிக்கை மூலம்  K-12 கல்விக்கான கல்வி தொழில்நுட்பத்தின் ஆறு முக்கிய வளர்ச்சிகளில் ஒன்றாக மேக்கர்ஸ்பேஸ் சமீபத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு மேக்கர்ஸ்பேஸில் மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து கருவிகளையும் மற்றும் வசதிகளையும் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள்  கோட்பாடுகளை பரிசோதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் சிந்தனைகளை செயலாக்க வேண்டும்.

வகுப்பறையில் தீர்க்க முடியாத கேள்விகளுக்கு பதில்களையும் தீர்வுகளையும் கண்டறிய மேக்கர்ஸ்பேஸ் மாணவர்களுக்கு உதவுகிறது. அவர்கள் பரந்த அளவிலான பொருளடக்கப் பகுதிகள் மற்றும் அனுபவங்களில் இருந்து அறிவு, திறமை மற்றும் கருவிகளை பயன்படுத்துகின்றனர், இது சிக்கலான கருத்துக்களையும் எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது.

அதுமட்டுமல்ல, மாணவர்கள் எதையாவது புது வழியில் கண்டுபிடிக்க மேக்கர்ஸ்பேஸ் அவர்களுக்கு உதவுகிறது, இது அவர்களுடைய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கிறது. [1]

“சமூக மற்றும் கலாச்சார அறிவையும் பயன்படுத்த ஒரு மேக்கர்ஸ்பேஸை பயன்படுத்தலாம்” மாணவர்கள் கருத்துக்களை வெறுமென அறிந்துகொள்வது மட்டுமல்லாமல் அவற்றை புரிந்துகொண்டு தங்கள் சொந்த எண்ணங்களை வளர்க்க அவர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாகவும் இருக்கிறது” என R N போடார் பள்ளியின் முந்தைய கல்வி ஆலோசகரான வர்ஷா பம்பானி கூறுகிறார். R N போடார் பள்ளியானது செயலிகள் (applications) மூலம் ஆழமான கல்வியை வளர்க்க தங்கள் சொந்த மேக்கர்ஸ்பேஸை பயன்படுத்தும் பல பள்ளிகளில் ஒன்றாகும்.

அப்படியான ஒரு மேக்கர்ஸ்பேஸை உங்கள் பள்ளியில் எப்படி உருவாக்குவீர்கள்?

நீங்கள் இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு உங்களுக்கு உதவுவதற்காக, உங்கள் பள்ளியில் ஒரு மேக்கர்ஸ்பேஸை உருவாக்க உதவும் ஒரு எளிய விளக்கப்படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து, ஸ்கிராட்ச், மேக்கி மேக்கி, மேக்பிளாக் போன்ற, கீழே பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு கருவிகள் மற்றும் மென்பொளுடன் உங்கள் மேக்கர்ஸ்பேஸை வைத்துக் கொள்ள வேண்டுமென்று திருமதி. பம்பானி பரிந்துரைக்கிறார்.[2] இந்த கருவிகள் கணினிகள் உதவியுடன் குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. மாணவர்கள் தங்களின் கற்பனை இலக்கை உணர உதவும் கட்டிட தொகுப்புளாக செயல்படும்  மேக்கர்ஸ்பேஸ்க்கு கணினிகள் உயிரூட்டுகின்றன. ஒரு மேக்கர்ஸ்பேஸில், இணையவழி பாடங்கள் மூலம் எவ்வாறு வடிவமைப்பது, ஒரு முழு புத்தகத்தையும் எவ்வாறு ஸ்கிரீன்-பிரிண்ட் எடுப்பது அல்லது ஒரு 3D பிரிண்டரில் மாதிரி வீடுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை கற்றுக்கொள்ள மாணவர்கள் ஒரு கணினியை பயன்படுத்தலாம். [3] அளவற்ற சாத்தியங்களுக்கான கதவுகளை திறக்கக் கூடிய உங்கள் மேக்கர்ஸ்பேஸ்க்கான சரியான கணினியை தேர்ந்தெடுப்பற்கு இது அவசியமாகும்.

 

கல்விசார்ந்த மேக்கர்ஸ்பேஸின் நன்மைகள் ஏராளமானவையாகவும் பலதரப்பட்டதாகவும் இருக்கிறது. மாணவர்கள் அவர்களுக்கான சவால்கள் எதுவுமில்லாமல் வந்தாலும், மேக்கர்ஸ்பேஸ் மாணவர்களின் கல்வி மற்றும் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் பள்ளியில் ஒரு மேக்கர்ஸ்பேஸை உருவாக்குவது பதில்களைக் கண்டறிவதற்கு ஆர்வமான தேடல்கள் நிரம்பிய புத்திக்கூர்மையான மனது மற்றும் ஒரு செயல்பாடு போன்ற அற்புதமான பலன்களை கொண்டுவருகிறது. மேக்கர்ஸ்பேஸ் மாணவர்கள் மத்தியில் படைப்பாற்றலை அதிகரிக்கிறது, எனவேதான் இது எதிர்கால நூலகம் என அழைக்கப்படுகிறது. உங்கள் பள்ளியில் ஒரு மேக்கர்ஸ்பேஸில் முதலீடு செய்வது மாணவர்களின் ஆற்றலை திறப்பதற்கான சாவியாக இருக்கும். [4]