கற்பித்தலின் புதிய யுகத்தைத் தழுவுதல்

 

காலமாற்றத்திற்கு ஏற்ப நாடு முழுவதிலும் கற்பிக்கும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திடீரெனெ அனைவரும் டிஜிட்டல் வகுப்பறை முறைக்கு மாறிவிட்டனர், இந்தப் புதிய யுகத்தில் கணிப்பொறி சார்ந்த கற்றல்முறையே மையமாக உள்ளது.

 

எங்களது கல்விக்காக டெல்(Dell for education) முயற்சியின் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள் தங்கள் தகுதிகளை மேபடுத்திக்கொள்ளவும் கணிப்பொறி சார்ந்த கற்றல் முறையை ஏற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு இணையவழி கருத்தரங்கம் நடத்தத் துவங்கினோம்.

 

75-90 நிமிடங்களில், எண்ணங்களை இணைத்தல், பயனுள்ள ஆன்லைன் கற்பித்தல், வடிவமைப்பு மற்றும் கற்றல் வெளிப்பாட்டினை வரிசைப்படுத்தல், கற்பிக்கும் முறையின் செயல்படுத்தும் திறன், மீண்டும் யோசிக்கவைக்கும் தேர்வுகள் மற்றும் ஒரு ஆன்லைன் அமர்வில் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.

 

எங்கள் பயிற்சிகளில் பின்வருபவற்றை நீங்கள் முக்கியமாக கற்றுக்கொள்வீர்கள்-

உங்கள் மாற்றத்திற்காக

  • ஆன்லைன் வழியில் ஒரு வகுப்பு எடுக்கும் முன்னர் அதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அதன் அம்சங்கள் மற்றும் கருவிகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள். ஒரு சோதனை வகுப்பை நடத்திப் பாருங்கள்.
  • ஒரு தனிப்பட்ட உணர்விற்காக உங்கள் கேமராவை ஆன் செய்து வையுங்கள். வகுப்பில் பங்குபெறுபவர்கள் பதில்களைக் கூற ஊக்குவியுங்கள். அவர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.
  • தடையற்ற இணையம் கிடைக்காத மாணவர்கள் அல்லது வேறு வேலை காரணமாக ஒவ்வொரு அமர்வையும் பதிவு செய்து கவனிக்கும் மாணவர்களுக்காகவும் தயாராக இருங்கள்.

ஊடாடும் பாடங்களுக்கான

  • பாடத்தை சிறியப் பகுதிகளாகப் பிரித்து சுருக்கமாகக் கூறுங்கள். மாணவர்களுக்கு காணொளிகள் மற்றும் PDF போன்ற கற்பிக்கும் கருவிகள் தரவும்.
  • பல தலைப்புகள் கொண்ட ஒரு ஈ-லேர்னிங்(E-learning ) நூலகத்தை உருவாக்கி சமீபத்திய தகவல்களை அதில் சேருங்கள். கவனத்தை ஈர்ப்பதற்கு நல்ல காணொளிகள் மற்றும் ஒலி துண்டுகளை உபயோகியுங்கள்.
  • ஊடாடும் பணிகள், வினாவிடை மற்றும் வாக்களிப்புகள் நடத்தி மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யுங்கள்.

நீங்கள் சந்திக்கக் கூடிய சிக்கல்கள்

  • சில மாணவர்கள் ஒலி வாயிலாகக் கற்பார்கள், மேலும் சிலர் காணொளி வாயிலாகக் கற்பார்கள். உங்கள் விளக்கக்காட்சியில் பல வடிவங்களையும் சேர்த்தால் அனைத்து மாணவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
  • மாணவர்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் பொழுது ஏற்படக்கூடிய தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து அறிந்து வைத்திருங்கள். ஆன்லைன் ஆவணங்களை அனைவரும் கையாளுமாறு வைத்திருங்கள்.
  • ஆன்லைன் கற்றல் முறையினால் ஏற்படும் தனிமையைப் போக்க, குழு செயல்பாடுகள், பணிகள் மற்றும் ஊடாடும் கற்றலுக்கான விளக்கக்காட்சிகள் ஆகியவற்றை உருவாக்குங்கள்.

 

மாறி வரும் காலத்திற்கேற்ப ஆசிரியர்களாக நீங்கள் தயாராக இருத்தல் வேண்டும். உங்கள் திறனை மேம்படுத்தவும் எதிர்கால கற்றல் முறையைத் தழுவவும் இங்கே செல்லுங்கள்.

(https://www.dellaarambh.com/webinars/)