நடைமுறைப்படுத்துதல் மற்றும் தொடர்ந்து செயல்படுத்துதலில் சந்திக்கும் சவால்கள்

ஆரம்ப்(Aarambh) மூலமாக நாங்கள் சுமார் 1.5 மில்லியன் மாணவர்களிடம் ஈடுபட்டுள்ளோம். 70 நகரங்களில் 5,000 திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,00,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்து சான்றிதழ் அழிக்க முற்படுகிறோம். எங்கள் பயணத்தில் நாங்கள் இது வரை சந்தித்த சாதனைகளும் சவால்களும் இவையே.

ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியின் மீது நேர்மறையான மனோபாவம் கொண்டுள்ளார் என்பதை கந்தர் (Kantar) அறிக்கை கண்டுபிடித்துள்ளது. வார இறுதி நாட்களில் பயிற்சி, பாடத்திட்டம், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சி தரும் விதம் ஆகிய அனைத்திலும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

மாணவர்கள் கணிப்பொறி சார்ந்த வீட்டுப்பணிகளைக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள், ஸ்மார்ட் வகுப்பறைகளில் 100% வருகை இருப்பதாக ஆசிரியர்கள் நம்புகிறாரகள். வீட்டில் கணிப்பொறி இல்லாத மாணவர்கள் பள்ளியில் இருக்கும் கணிப்பொறிகளை வீட்டுப்பணிகளுக்கும் கூட்டுப்பணிகளுக்கும் உபயோகிக்கின்றனர்.

இந்தப் பயணத்தில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. சில பெற்றோர்களால் மடிக்கணினி/கணிப்பொறி வாங்கித்தர இயலவில்லை அல்லது இணையத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. குழந்தைகள் கணிப்பொறியில் அதிக நேரம் செலவழித்தனர், அதனால் கணிப்பொறி சார்ந்த பணிகள் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

மாறாக, திட்டத்தின் நேரத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் செயலிகள்/கருவிகள் குறித்து கற்க ஆசிரியர்கள் விரும்புகிறார்கள்.

 

 

பங்குதாரர்களின் தேவை என்ன

இணையவழி பயிற்சியில் 84% ஆசிரியர்கள் சௌகரியமாக உணர்கிறார்கள், இது வயதுடன் சேர்ந்து குறைகிறது. மாறும் காலத்திற்கேற்ப பள்ளிமுதல்வர்களும் இணையவழி பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள். செயல் சார்ந்த பயிற்சிகளுக்கும் சந்தேகம் நிவர்த்தி செய்யும் அமர்வுகளுக்கும் இணையம் அல்லாத பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.

 

 

எதிர்காலத் திட்டங்கள்

மூன்று முறைகளில் நாங்கள் மாற்றங்களை நடைமுறைப்படுத்தப் போகிறோம் -

  • மறுபயிற்சி-

கணிப்பொறியில் தேர்ச்சி மற்றும் செயல்பாடு வயது ஏறயேற குறைந்து விடும், அதனால் மூத்த ஆசிரியர்களுக்கு நாங்கள் சிறப்பு பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்கிறோம்.

  • கருத்தரங்கு நடத்துதல்-

கணிப்பொறி சார்ந்த கற்றல் முறையின் நன்மைகள் குறித்து பெற்றோர்கள் அறிவதற்கு ஆசிரியர்களும் மேலாண்மையும் விழிப்புணர்வு கருத்தரங்குகளுக்கு ஆதரவு தரலாம்.

  • பரிந்துரைகளை இணைத்துக்கொள்ளல்-

84% ஆசிரியர்கள் இதை சௌகரியமாக உணர்வதால் மேலும் இது கொணர்ந்த நிரந்தர மற்றும் நடத்தை மாற்றங்களை விரும்புவதால், நாங்கள் இணைய வழி பயிற்சியைத் தொடர்ந்து நடத்துகிறோம்.

இனி வரும் காலங்களில் கணிப்பொறியுடன் நட்பான ஒரு நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு, நாங்கள் மாற்றத்தை உருவாக்கி, அதிக மாணவர்களை ஊக்குவித்து, இன்னும் அதிக ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆவலாக இருக்கிறோம்.