#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி!

 

நீங்களே உங்கள் குழந்தையின் ஒரே சூப்பர் உமன் மற்றம் முன்மாதிரி என அனைத்தும் கலந்த கலைவையாவீர். நீங்களே அவர்களது #DigiMom என்பதையும் நாம் மறக்கக்கூடாது. எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

1. கனிவுடன் இருப்பதே பலன் தரும்

உங்களை நீங்களாக மாற்றுவது கனிவுத்தன்மையே!

ஒரு தாயாக, உங்கள் குழந்தையை நீங்கள் உறக்கத்திலிருந்து எழுப்புவது முதல் மீண்டும் அவர்களை உறங்கச்செய்வது வரை – ஒவ்வொரு நிமிடமும் உங்கள் கனிவிற்குச் சான்றாகும். உங்கள் குழந்தை உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை...அதிலும் தொழில்நுட்பம்-தொடர்பான கேள்விகள் சற்று கடினமானதாக இருக்கலாம். உங்கள் குழந்தை, தான் கவனிக்கப்படுவதை உணர, தினமும் தொழில்நுட்பத்திற்கென்று ஒரு நேரத்தை உருவாக்கவும். இதில் கணிணி மற்றும் மொபைல் ஆகிய இரண்டும் உட்படலாம். குழந்தைக்கு எது தொழில்நுட்ப நேரம் என்று தெரிந்துவிட்டால், எதிர்பாராத கோரிக்கைகள் எதுவும் நேரிடாது.

 

2. பொறுமை என்பது ஒரு கலை – அதை படிப்படியாக கட்டமைக்கவும்

கணிணியில் உங்கள் குழந்தைக்கான சரியான கற்றல் ஆதாரத்தை தேர்ந்தெடுக்கையில் இது மிகவும் உண்மையாகும். உங்கள் குழந்தையை ஒரு இணையதளத்தை பார்க்க அனுமதிக்கும் முன்பு, அதை முழுவதுமாக ஆராய்ந்து, உங்கள் குழந்தை அறிய வேண்டியதில்லை என்று நீங்கள் கருதும் எதுவும் அதில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம், நிஜமெது பொய்யெது என்பதை பிரித்துப்பார்க்கும் திறனை குழந்தைக்கு பயிற்றுவித்து, “பொய்யான” செய்திகள் மற்றும் உண்மைகளை அடையாளம் காண அவர்களுக்கு கற்றுத்தருவதாகும்.

 

3. கவனமாக இருக்கவும்

உங்கள் குழந்தை கேள்விகளைக் கொண்டிருக்கும்...ஒன்று அதற்கு நீங்கள் பதில் தர வேண்டும் அல்லது இணையம் அதற்கு பதில் தந்துவிடும். இணையம் விரைவாக பதில் தரலாம், ஆனால் அது சரியானதாக இல்லாமல் இருக்கலாம். இந்த நிலையில், அச்சிக்கலை தீர்க்க சரியான வழி, நீங்கள் குழந்தையை கவனிப்பதும் மற்றும் அதற்கு கிடைக்கப்பெறுவதுமே ஆகும்.

ஒவ்வொரு தாயும் ஒரு சரிபார்ப்புப் பட்டியலைக் கொண்டிருப்பாள். டிஜிட்டல் பேரண்டிங்கிலும் அதில் மாற்றமில்லை – உங்கள் சரிபார்ப்புப் பட்டியலை வரிசைபடுத்தவும் மற்றும் வெகு விரைவில் நீங்கள் டிஜிட்டல் பேரண்டிங்கில் நிபுணத்துவம் பெற்றுவிடுவீர்கள்! இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், உங்களுக்கும் மற்றும் உங்களது குடும்பத்திற்கு கணிணியில் நற்பண்புகளை பெறும் வகையில் சிறிது நேரம் செலவழிக்க வேண்டியதே ஆகும். மகிழ்ச்சிகரமான டிஜிட்டல் பேரண்டிங்கிற்கு வாழ்த்துக்கள்!