மின்னஞ்சல் நடத்தை நெறி 101

 

மின்னஞ்சல் – ஒன்று உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லது முற்றிலுமாகப் பிடிக்காது, இதில் இடைநிலை ஏதுமில்லை. எவ்வாறாகினும், சில விஷயங்களை, குறிப்பாக “நடத்தைநெறிகளை” நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். நடத்தை நெறிகள் என்பவை காலாவதியானவை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், அவை உங்களுக்கு உதவுவதற்காகவே உள்ளன.

 

 

1. உங்கள் சப்ஜெக்ட் லைன் (பொருள் பிரிவு) செய்திக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்

தொழில்நிபுணத்துவ மின்னஞ்சல் சார் நடத்தை நெறிகளில் முதலாவது படிநிலை, மின்னஞ்சலின் சப்ஜெக்ட் லைனானது நீங்கள் எந்த விஷயம் குறித்து தெரிவிக்கிறீர்கள் என்பது குறித்து பெறுபவருக்கு உடனடியாக புரியவைக்கும் வகையில் இருக்க வேண்டும், மேலும், அது “அதிகப்படியான வார்த்தைகளை” கொண்டதாகவோ அல்லது “மீக நீண்டாகவே” இல்லாமல் இருக்கிறதா என்பது சரிபார்க்கப்பட வேண்டும்.

 

2. எப்போதும் ஒரு சிக்னேச்சரை உட்படுத்தவும்

உங்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்பதை எவரும் தேட வேண்டிய நிலையை நீங்கள் எப்போதும் ஏற்படுத்தக்கூடாது. எனவே, பெறுபவருக்குத் தெரிவிக்கும் வகையில் உங்களது ஒவ்வொரு மின்னஞ்சலும் நீங்கள் யார் என்பதையும், உங்களது சமூக ஊடக ஹேண்டில்கள் மற்றும் தொடர்பு விபரங்களையும் உள்ளடக்கியதொரு சிக்னேச்சரையும் கொண்டிருக்க வேண்டும்.

 

3. சரியான நேரத்தில் பதிலளிக்க வேண்டும்

ஒரு மின்னஞ்சலை நீங்கள் பெற்ற பின்பு, அது உண்மையாகவே முக்கியமானதாக இருக்கும்பட்சத்தில், எவ்வளவு வேகமாக பதிலளிக்கிறீர்களோ அந்த அளவிற்கு நல்லதாகும். பெறுபவர் உங்களது வேகமான நடவடிக்கையைப் பாராட்டுவார் மற்றம் நீங்கள் அதிகம் சார்ந்திருக்கத்தக்கவராக கருதப்படுவீர்கள்

 

4. குறு வடிவாக்கங்களை தவிர்க்கவும் – தொழில்நிபுணத்துத்தை வெளிப்படுத்தவும்

உங்கள் மின்னஞசல் எழுதும் முறையைக் கொண்டு உங்களது தன்மை தீர்மானிக்கப்படுவதில் வியப்பு கொள்ள வேண்டாம். உதாரணத்திற்கு, உங்கள் மின்னஞ்சலானது, எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள், குறு வடிவாக்கங்கள் அல்லது வட்டார மொழிச் சொற்களைக் கொண்டிருப்பின், நீங்கள் ஒரு அக்கறையற்ற அல்லது பொறுப்பற்ற நபராக கருதப்படுவீர்கள். எனவே “சென்ட்” பட்டனை அழுத்துவதற்கு முன்பு, ஒரு முறை மின்னஞ்சலை சரிபார்க்கவும்

 

5. எப்போதும் எவருக்கேனும் CC செய்யவும்

இதன் காரணம், நீங்கள் ஏதேனும் சந்திப்புகள் அல்லது விடுப்புகள் காரணமாக, பதில் அனுப்ப முடியாத நிலையில் இருந்தாலும், மின்னஞ்சல்களுக்கான பதில்கள் பிறரால் அனுப்பப்படுவதை உறுதி செய்வதே ஆகும்.

 

6. செய்தியை சுருக்கமாகவும் மற்றும் எளிமையாகவும் தெரிவிக்கவும்

முக்கியமானதாகத் தோன்றச் செய்வதற்கான நீண்ட மின்னஞ்சல்களை எழுதுவதற்குப் பதிலாக, அவற்றை சுருக்கி, தேவையற்ற அலங்காரங்களை தவிர்க்கவும். மின்னஞ்சலைப் பெறும் நபர் என்ன எதிர்நோக்குவார் என்பதன் மீதும் மற்றும் நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்பதன் மீது மட்டுமே கூர்நோக்கம் கொள்ளவும்

 

இப்போது, நீங்கள் மின்னஞ்சல் பயன்பாட்டின் நிபுணத்துவம் பெற்றுவிட்டீர்கள். இனி தினசரி கற்பிப்பில் உங்கள் பிசியை மேம்படுத்தி, ஒரு ஆசிரியராக சிறந்து விளங்கிடுங்கள்