கூகுள் சேஃப் சர்ச் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

 

நாம் வாழ்ந்து வரும் இந்த இண்டர்நெட் யுகத்தில், தகவல்கள் என்பது ஒரு சில சொடுக்குகள் தொலைவில் தான் உள்ளது. இந்த இண்டர்நெட் உங்கள் குழந்தைகளுக்கான வளமான தகவல்களுக்கான மூலாதாரமாக இருந்தாலும் கூட, அது தகவலின் இருண்ட வெற்றிடமாகவும் இருக்கிறது, அதாவது அவர்களின் இளம்வயது மற்றும் ஈர்க்கக்கூடிய மனதிற்கு பாதுகாப்பற்றதாகவும் இருக்கிறது. ஒரு டிஜிட்டல் பெற்றோராக, நீங்கள் அவர்களது ஆன்லைன் தேடல் நடத்தைகளுக்கான பொறுப்பாளியாக இருக்கிறீர்கள் அதாவது அவர்கள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பூதாகாரமான பணியை ஒரு எளிய, திறன் வாய்ந்த கருவி மூலம் செயல்படுத்தலாம். கூகுள் – சேஃப் சர்ச்

 

இண்டர்நெட்டில் கூகுள் முன்னணி சர்ச் என்ஜினாக இருப்பதால், பொருத்தமற்ற தளங்களுக்கான கட்டுப்பாடற்ற அணுகலை ஒரு பொத்தானை தட்டுவதன் மூலம் உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

 

ஆனால் முதலில், அப்படி என்றால் என்ன?

 

கூகுள் என்பது நம்முடைய சாதனங்களில் அதிகளவில் விரும்பப்படும்  தேடல் என்ஜின் ஆகும் மேலும் பெற்றோர்கள் தேடல் முடிவுகள் மீது கட்டுபாடுகளைக் கொண்டிருந்தாலும் கூட, குறிப்பிட்ட தேடல் வினவல்கள் பொருத்தமற்ற உள்ளடக்கத்தையேக் கொண்டு வருவதாக இருக்கும். இந்த சேஃப் சர்ச்  தேடல் முடிவுகளிலிருந்து இது போன்ற உள்ளடக்கத்தை (படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவைகள்) வடிகட்டுவதற்கு உதவுகிறது, மேலும் இது பெற்றோருக்குரிய கட்டுப்பாடுகளை அமைக்க பெற்றோருக்கு உதவக் கூடிய  Google –ளின் முக்கிய வழிகளில் ஒன்று ஆகும்.

 

கூகுள் – சேஃப் சர்ச்சை எவ்வாறு அமைப்பது?

 

  • உங்கள் வெப் ப்ரவுசர்களில் சேஃப் சர்ச்சை செயல்படுத்துவதற்கு, கூகுள்சர்ச் செட்டிங்ஸ் பேஜை விசிட் செய்யவும்: google.com/preferences
  • “Turn on SafeSearch” பாக்ஸை பார்க்கவும்
  • “Lock SafeSearch - க்கு அடுத்துள்ள ப்ளூ வார்த்தைகள் மேல் கிளிக் செய்யவும்.  
  • நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டில் லாகின் செய்யப்படாமல் இருந்தால், நீங்கள் சேஃப் சர்ச் செட்டிங்கை லாக் செய்வதற்கு முன் லாகின் செய்ய வேண்டியது அவசியமாகும் (ப்ரவுசிங் செய்வதற்கு முன் யாராவது சேஃப் சர்ச்சை டர்னிங் ஆஃப் செய்வதை தடுப்பதற்காக லாகின் செய்யப்படுகிறது)
  • நீங்களும் உங்கள் ப்ரவுசர் செட்டிங்கை “always accept cookies” என மாற்ற வேண்டியது அவசியமாகும். (இதை எப்படி செய்வது என தெரியாத பட்சத்தில் கூகுள் உங்களுக்கு ஒரு லிங்க்கை அனுப்பும்)
  • இதை செய்து முடித்தவுடன், “Lock SafeSearch” பட்டன் மேல் கிளிக் செய்யவும்.

 

இப்பொழுது சேஃப் சர்ச்சை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள், நீங்கள் இப்பொழுது கவலையின்றி இருக்கலாம் ஏனென்றால் உங்கள் பிள்ளைகளிடம் இப்போது இருக்கிறது பாசிடிவ் டிஜிட்டல் ஃபுட்பிரிண்ட்.