தேர்வு காய்ச்சல்: தேர்வு மனஅழுத்தத்தை சமாளிக்க உங்கள் குழந்தைக்கு உதவுங்கள்

 

தேர்வுகள் மிகவும் மன அழுத்தம் நிறைந்த விவகாரம் என்று எல்லோருக்கும் தெரியும். உங்கள் குழந்தை வளர வளர, அதிக அழுத்தத்தை உணர்வார்கள். மாணவர்கள் படிப்பதை விட மன அழுத்தத்தில் தான் தங்கள் ஆற்றலை அதிகமாக செலவழிப்பதாக தெரியும். உங்களுக்கான நற்செய்தி என்னவென்றால், நீங்கள் உங்கள் குழந்தைக்கு இவ்வாறாக உதவ முடியும்:

1) ரொட்டீன் பழக்கத்தை கைக்கொள்வதற்காக

உங்கள் கைகளில் பரீட்சை கால அட்டவணை வந்தவுடன், கூகுள் காலண்டர் மற்றும் அசனா போன்ற டூல்களைப் பயன்படுத்தி ஒரு யதார்த்தமான அட்டவணையை உருவாக்குங்கள், அதில் உங்கள் உங்கள் குழந்தைக்கான டியூஷன்ஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் ப்ளே டைமும் இருக்க வேண்டும். ஸ்டடி நேரத்தை கண்காணிப்பதன் மூலமும் மேலும் சரியான நேர இடைவெளிகளுடனும், உங்கள் குழந்தை ஒரு ரொட்டீன் பழக்கத்திற்கு தன்னை பழக்கிக்கொள்ளும்.

2) உங்கள் குழந்தைக்கு எது சரியாக இருக்கும் என்பதைக் கண்டறியவும்

PC யுடன், தேர்வுக்கு முன் டெக்ஸ்ட் புத்தகம் மட்டுமே உங்கள் குழந்தைக்கான ரிவிஷன் கருவியாக அமையாது. யூ ட்யூப் எஜூகேஷனில் வீடியோஸ், எஜூகேஷன் வோல்டிலிருந்து வொர்க்ஷீட்ஸ், படிப்பதற்கான கூகுள் ஸ்காலர்-போன்ற வேறுபட்ட வழிகள் மூலம் உங்கள் குழந்தைகள் பாடத்தின் பொருளடக்கத்தை ஆழமாக சென்று புரிந்து கொள்ள உதவும். உங்கள் குழந்தைகள் செய்ய வேண்டியதெல்லாம் பொறுத்தமான ஒன்றை தேர்வு செய்து அதை பழக்க வேண்டும் மேலும் தொடர்ந்து அதை செயல்படுத்த வேண்டும்.

3) உதவி செய்யுங்கள் அளவுக்கதிகமாகவும் செய்ய வேண்டாம்

உங்கள் குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள், முக்கியமாக நல்ல நடத்தைக்குரிய விஷயங்களில் ஆனால் படிப்பு விஷயத்தில் அவர்களாக ஓரிரண்டு முறை முயற்சித்தப் பின் மட்டுமே உங்கள் உதவிகரம் அவர்களுக்கு நீட்ட வேண்டும். இது அவர்கள் சுயமாக செயல்பட ஏதுவானவர்களாக்கும் மேலும் இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அவர்கள் முடிவெடுக்க உதவும்.

4) ப்ளே டைமைக் குறித்து மறக்க வேண்டாம்

அதிகமான பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள் என்றால் தேர்வுக்கு பின்பே பிள்ளைகள் விளையாட வேண்டுமென்று. இருப்பினும், விளையாடுவதற்கென திட்டமிட்ட இடைவெளிகளை எடுப்பது மேலும் ஸ்பார்க்கல் போன்ற PC விளையாட்டுகளை விளையாட நேரத்தை ஒதுக்குவது உங்கள் பிள்ளைகளின் கவனத்தை கூர்மையாக்குவதோடு, அவர்கள் ரிலாக்ஸ்டு மைண்டோடு படிப்பதால் நீண்டகாலத்திற்கு அதை நினைவில் கொள்ள முடியும். இடைவெளிகள் குறுகியதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்-அரைமணிநேரத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் அப்போது தான் அவர்களால் மீண்டும் பாடத்தில் கவனத்தை செலுத்த முடியும்.

5) இறுதி முடிவு குறித்து ஓவர் திங்கிங் செய்வதை தவிர்க்கவும்

உங்கள் பிள்ளைகள் எத்தனை மதிப்பெண்கள் எடுப்பார்கள் என்பதை யூகிக்க பரீட்சை முடிந்தவுடன் கேள்விதாளை ஆய்வு செய்வது என்பது மிகவும் பொதுவான ஒரு நடைமுறையாகும். இது ஒரு எதிர் விளைவாக அமையலாம், ஊகிக்கப்பட்ட முடிவைப் பொறுத்து உங்கள் பிள்ளைகள் அலாதியான நம்பிக்கையை கொடுக்கலாம் அல்லது அடுத்த பரீட்சைக்காக முழுமையான செயல் நோக்கத்தை கொண்டிருக்கமாட்டார்கள்.

உங்கள் பிள்ளைகள் பரீட்சைகளைக் குறித்து அதிக மன அழுத்தம் கொண்டில்லை என்பதை உறுதி செய்வதற்கான மிகப்பெரிய வழி என்னவென்றால் அவர்களை எது ஊக்கத்தோடு செயல்பட வைக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் மேலும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமெனில் PC –யைப் பயன்படுத்தி சிறந்ததை எடுத்துக் கொள்ளவேண்டும்.