நீங்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய ஐந்து வகுப்பறை ஐஸ்-பிரேக்கர்கள்!

 

பள்ளிகள் துவங்கியுள்ள நிலையில், குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பது என்பது ஒவ்வொரு ஆசிரியரும் சந்திக்கும் ஒரு உலகளாவியப் பிரச்சனையாகும். மாணவர்களை கவனிக்கச்செய்வது, அவர்களது ஈடுபாட்டினை தூண்டுவதுமற்றும் அவர்களை சொகுசாக உணரச் செய்வதற்கு வகுப்பறையில் ஐஸ்-பிரேக்கிங் அமர்வுகள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

 

இதில் கேள்வி என்னவென்றால், இப்பிரச்சனையை நீங்கள் எவ்வாறு தீர்க்கலாம் என்பதே. உங்களுக்கு உதவத்தக்க சில குறிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன!

 

உங்கள் அவதாரத்தை உருவாக்குங்கள்

மாணவர்களிடம் அவர்களது அவதாரத்தை உருவாக்குமாறும் மற்றும் அதை வகுப்பில் உள்ள மற்றவர்களுக்கு காட்டுமாறும் கூறுவும். பிற மாணவர்கள் அந்த அவதாரங்களுக்குப் பின்னால் உள்ள குணாதிசியங்களை அனுமானிக்க முயற்சிக்கலாம். Dopplemeடூல், மாணவர்கள் அவர்களது அவதாரத்தை இலவசமாக உருவாக்க உதவும். இச்செயல்பாடு அவர்களை ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, ஒருவரைப் பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்ளவும் உதவும்.

 

வகுப்பறை பிளாக் (Blog)

ஒரு வகுப்பறை பிளாக்கை உருவாக்கவும் மற்றும் மாணவர்கள் அவர்களை பிறருக்கு அறிமுகம் செய்யும் வகையில் ஒரு சிறு குறிப்பை எழுதச்சொல்லவும். Kidblogடூல், பயன்படுத்த வசதியானது மற்றும் மாணவர்களை ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்ளவும் மற்றும் அவர்களிடையே பொதுவாக உள்ளவற்றை அறிந்துகொள்ளவும் உதவும்.

 

செல்ஃப் போர்ட்டிரெய்ட்

மாணவர்கள் அவர்களை sketchpadகொண்டு இலவசமாக வரையச் சொல்லவும். உங்கள் மாணவர்கள் புத்தாக்கத்தோடும் மற்றும் தங்களது சுய – போர்ட்டிரெய்ட்களை படைப்பாற்றலுடனும் காண்பிக்கச் செய்யவும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கும் மற்றும் தங்களுக்கு ஒத்துகருத்துடைய நபர்களை அடையாளம் காண உதவும்

 

காமிக்ஸ்களை பயன்படுத்தவும்

உங்கள் மாணவர்களின் ஈடுபாட்டினை அதிகரிக்கச்செய்ய உங்களுக்கு உதவத்தக்க ஒரு டூல் MakeBeliefஆகும். மாணவர்களின் கவனத்தை ஈர்க்கவும் மற்றும் அவர்களை மகிழ்விக்கவும் கதைகளை உங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்க இது உதவும். இது, இலவசமானது, சுலபமானது மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையானதாகும்.

 

ஹியூமன் பிங்கோ

தங்களைப்போன்ற விருப்பங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் திறன்களைக் கொண்ட நபர்களைக் கண்டறியவும் மற்றும் ஒருவருக்கொருவர் அதிகம் உரையாடவும், இந்த ஹியூமன் பிங்கோ மாணவர்களுக்கு உதவும். மாணவர்கள் அதை டிஜிட்டலாக நிரப்புமாறுக் கூறவும்.

 

இப்போது மாணவர்களின் கவனம் உங்கள் மீது திரும்பியிருக்கும் மற்றும் அனைத்து ஐஸ்-பிரேக்கிங் அமர்வுகளோடும் இணைந்து, அவர்களுக்கு அசைன்மெண்ட்களை வழங்க வேண்டியதும் முக்கியமாகும். எனவே, எவ்வாறு ஒவ்வொருஅசைன் மெண்டையும் உங்கள் வகுப்பிற்கு ஈடுபாடு மிக்கதாக மாற்றுவது என்பதை கண்டறியவும்.