கற்பதித்தலை தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கான ஐந்து கட்டளைகள்

 

நாம் இதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் – தொழில்நுட்பம் கல்வியை மாற்றியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, “கல்விக்கு கணிணி” என்பது கேள்விப்படாத ஒன்றாகும். ஆனால், தற்போது நல்ல ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்களாகத் திகழ வேண்டுமெனில், ஒவ்வொரு ஆசிரியருக்கும் அது அத்தியாவசியமானதாக மாறியுள்ளது.

இப்போது நம் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி – வகுப்பறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டை எளிமையாக்குவது எப்படி என்பதே ஆகும்? இதோ உங்களுக்கான சில குறிப்புகள்:

 

கட்டளை எண்.1: ஆய்வுக்கலையில் நிபுணத்துவம் பெற்றிடுங்கள்

இது ஒரு கடினமான விஷயம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால், இதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றுவிட்டால் – உங்களைத் தடுக்க எவருமில்லை. முதலில், உங்களது பிரவுஸரில் Wikipedia மற்றும் Google Scholar ஆகியவற்றை புக்மார்க் செய்திடுங்கள். அடுத்து, Google News வழியாக, உங்களது பாடம் மற்றும் விரும்பும் தலைப்புகள் தொடர்பான அன்றாட செய்திகள் குறித்து அறிந்துகொள்வதை தினசரி வழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இது, சமகாலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள உதவும்.

 

கட்டளை எண்.2: உரித்தானவர்களை கௌரவித்திடுங்கள்

ஒன்றைப்போன்று நடந்துகொள்வது ஒரு சிறந்த பாராட்டு...

ஆனால் அது கல்விக்குப் பொருந்தாது!

எந்தவொரு கட்டுரை, ஆய்வுத்தொகுப்பு அல்லது இணையதளத்திலிருந்து நீங்கள் தகவல்களை எடுத்திருந்தாலும், அதற்கான ஆதாரங்களை ஹைப்பர்லிங்க் அல்லது சுட்டுதல்கள் வழியாக தெரிவிக்கவும் மற்றும் கருத்துக்களவு சிக்கல்களை தவிர்க்கவும்.

 

கட்டளை  எண்.3: உங்கள் தரவுகளை பேக்அப் செய்யவும், தொடர்ச்சியாக...

நீங்கள் உங்களது கோப்புகளில் எப்போதும், மாற்றங்களை மேற்கொண்டாலோ அல்லது புதிய கோப்புகளை சேர்த்தாலே, அவற்றை பேக்அப் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஒரு பேக்அப் காலஅட்டவணையை உருவாக்கிப் பின்பற்றுவது நல்ல வழக்கமாகும். நீங்கள் ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருப்பின், பேக்அப் இடைவெளியை மேலும் நெருக்கமாக மாற்ற வேண்டும். தேவைப்பட்டால் தினமும் செய்யலாம்.

 

கட்டளை எண் 4: மின்னஞ்சல் நடத்தை நெறிமுறைகளை மனதில் கொள்ளவும்

இது ஒரு அடிப்படையான விஷயமாகத் தோன்றினாலும், உங்களது தகவல்தொடர்புகளை நீங்கள் மேற்கொள்ளும் முறையே உங்கள் தன்மைகளை மேம்படுத்திக் காட்டும். உதாரணத்திற்கு, சப்ஜெக்ட் லைனிலிருந்து விலகிய மற்றும் மாறிய மின்னஞ்சல்கள் பயனற்றவையே. எப்போதும், கூற வேண்டியதை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறவும் மற்றும் உங்களது இணைப்புகள் சரியாகப் பெயரிடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.

 

கட்டணை எண் 5: சமூக ஊடகத்தில் செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை பின்பற்றவும்

செய்யக்கூடியவைகள்

தங்களது தனிப்பட்டதன்மை அமைப்புகளை (பிரைவஸி செட்டிங்ஸ்) கட்டுப்படுத்தவும்

எதிர்மறை விஷயங்களிலிருந்து விலகிக்கொள்ளவும்

சரியான உள்ளடக்கத்தை, சரியான வலையமைப்பில் பயன்படுத்தவும்

வர்த்தக மற்றும் தனிப்பட்ட கணக்கை தனித்தனியாக பராமரிக்கவும்

தங்களது சமூக ஊடக விபரக்குறிப்புகளை முழுமையாகவும் மற்றும் நிகழ்நிலைபடுத்தப்பட்டதாகவும் பராமரிக்கவும்

செய்யக்கூடாதவைகள்

அதிகப்படியான இடுகைகளை வெளியிடக்கூடாது

சொல்லும் விஷயம் முழுவதையும் பெரிய எழுத்துகளில் தெரிவிக்கக்கூடாது

ஒரு ஆசிரியர் அவரது வாழ்க்கைத் தொழிலில் சிறந்து விளங்க – up-skilling என்னும் திறன் மேம்பாடு மிகவும் முக்கியமாகும். இது உங்களுக்கு உதவுவதோடு மட்டுமின்றி, மாணவர்கள் அதிகம் கற்கவும் உறுதுணை புரியும்.