உங்கள் குழந்தைகள் மேல்நிலை பள்ளிக்கு செல்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 5 வாழ்க்கை திறன்கள்

 

தகவமைப்பு மற்றும் நேர்மறையான நடத்தைக்கான உளவியல் திறன்களை “வாழ்க்கை திறன்கள்”என்று வரையறுக்கப்படுகிறது. அது அன்றாட வாழ்க்கையின் தேவைகள் மற்றும் சவால்களுடன் தனிநபர்களை திறம்பட சமாளிக்க உதவுகிறது.

உங்கள் குழந்தைகள் மேல் நிலை பள்ளிக்கு செல்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

1) நேரத்திற்கு எழுந்திடுங்கள்

இப்போதைக்கு நீங்கள் தான் “அலாரம் க்ளாக்”ஆனால் உங்கள் பிள்ளைகள் விடுதியில் தங்கியிருக்கும் போதோ அல்லது வேலைக்குச் செல்லும்போதோ நீங்கள் அவ்வாறு செய்ய முடியுமா? உங்கள் பிள்ளைகள் உதவி இல்லாமல் நேரத்தில் எழும்புவது என்பதும் வாழ்க்கையின் அத்தியாவசிய திறமை ஆகும்.நல்ல வேளை பள்ளி எப்போதும் ஒவ்வொரு நாளும் அதே நேரத்திலே தான் ஆரம்பிக்கிறது.

2) உணவு தயாரியுங்கள்

உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கென உணவு தயாரிக்காத போது அவர்கள் வீட்டிலிருந்தபடி ஆர்டர் செய்து சாப்பிடுவது அல்லது அங்கேயே சென்று சாப்பிடுவது தான் ஒரே வழி. அவ்வபோது, ட்ரீட் ஓகே ஆனால் ஆரோக்கியமான, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை விட சிறந்தது எதுவும் இல்லை. டீ போடுவதற்காக தண்ணீரை கொதிக்க வைப்பது போன்ற சிறிய வேலைகளில் உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களை பழக்குங்கள். அப்போது அவர்கள் அவர்களுக்கான சத்தான உணவை அவர்களாகவே தயாரித்துக் கொள்வார்கள்.

3) உங்கள் குடும்பத்தில் உங்களை விட வயதில் குறைந்தவர்களை கவனித்து கொள்வது

இதை உங்களால் அறவே தவிர்க்க முடியாது ஏனென்றால் உங்கள் பொறுப்புணர்வு உங்கள் வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. உங்கள் தம்பி/தங்கை, கஸின்ஸ் அல்லது பக்த்து வீட்டு பிள்ளைகள் மேலும் உங்களை சார்ந்து இருப்பவர்களை பார்த்துக் கொள்வது என்பது நீங்கள் பொறுப்பாக இருக்கிறீர்கள் என்பதை காட்டும் முதல் செயலாகும் – இந்த நிஜ உலகத்தில் இது நிஜமாகவே தேவைப்படும் ஒன்று ஆகும், அது ஒரு மணிநேரத்திக்கும் குறைவாக கூட இருக்கலாம்.

4) ஒரு அட்டவணையை உருவாக்கி அதையே பின்பற்றுங்கள்

உங்கள் குழந்தை வளர வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் ஒன்று பள்ளி, டூயூஸ், விளையாட்டு, சமூக வாழ்க்கை ஆகியவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும் மேலும் ஒவ்வொரு நாளின் கடமையையும் தவறாமல் செய்ய வேண்டும். ஆரம்ப காலத்திலேயே நேரத்தை சரியாக நிர்வகிப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டால் வளர்ந்த பிறகு வரும் சவால்களைச் சமாளிப்பதற்கு உதவியாக இருக்கும்.

5) உங்கள் PC யை சரியாக பயன்படுத்துங்கள்

ஒரு டிஜிட்டல் பேரண்டாக, ஒரு எஸ்கேப்பிங் டெக்னோலாஜி இல்லை என்றே சொல்லலாம். அது வீடாக இருந்தாலும் பள்ளியாக இருந்தாலும் சரி- உங்கள் குழந்தையின் முதல் கற்றல் கருவி என்பது இந்த PC தான். காலத்தோடும், பழக்கத்தோடும் இந்த புதிய பழக்கத்தை கைக்கொள்வதன் மூலம் படிப்பிற்காக இதை எவ்வாறு இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் 2018 என்பது PC –க்கான வருடம் தான்!