உங்கள் குழந்தையை நீங்கள் கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் சேர்ப்பதற்கான ஐந்து காரணங்கள்

 

எழுந்திருப்பது
பள்ளி
டுயூஷன்ஸ்
தூக்கம்
திரும்ப செய்

இங்கே என்ன காணவில்லை?

உங்கள் குழந்தை விரும்பக் கூடிய எதிர்ப்பார்க்க கூடிய ஒரு செயல்பாடு!

தினந்தோறும் அதே வழக்கமான நாளாக இருப்பதாக நினைத்துப் கொள்ளுங்கள். அதையே தான் இன்றைய வளர்ந்த தலைமுறையினரும் - தங்கள் வேலை நிலையில் அல்லது உங்கள் தொழில் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் உணர்ந்து வருகிறார்கள்.

உங்கள் குழந்தையை நீங்கள் கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் சேர்ப்பதால், உங்கள் பிள்ளைக்கு பயனுள்ள முறையில் நேரத்தை செலவழிக்க ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கிறீர்கள் மேலும் அதை வேடிக்கையாகவும் செய்வார்கள். அதற்கான ஐந்து காரணங்கள் இதோ:

1) இது படிப்பிலிருந்து ஒரு மிக -தேவையான இடைவெளி ஆகும்

ஆய்வுகள் மற்றும் பரீட்சைகள் அதிக போட்டித்திறனுடன் இருப்பதால் விளையாட்டுகளில் பங்கெடுப்பது அல்லது நடனம், யோகா அல்லது கலை போன்ற பழக்கவழக்கங்களில் நேரத்தை செலவிடுவது போன்றவற்றால் தேவையான அளவு இடைவேளைகளை எடுக்க முடியும் மேலும் உங்கள் குழந்தை கொண்டிருக்கும் எந்த வகையான தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும் அது கையாள உதவும்.

2) ஒரு அணியாக எவ்வாறு வேலை செய்வது என்பதை கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு

தினசரி குழு நடவடிக்கைகளில் பங்கெடுப்பதால் குழு முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிள்ளைகள் உணர உதவுகிறது மேலும் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து, ஒத்துழைப்புடன் செயல்பட அவர்களை சிறப்பானவர்களாக ஆக்குகிறது. இது அவர்களது சக மாணவர்களிடமிருந்து அதிக திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், அவர்கள் அறியாத மக்களிடம் பேசுவதைப் போன்ற தனிப்பட்ட குறைபாடுகளை அல்லது அச்சங்களைத் தடுக்கவும் உதவுகிறது.

3) கால மேலாண்மை திறன்களை கைக்கொள்ளுதல் – இதை பழக்கத்தால் மட்டுமே அடைய முடியும்

கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் பங்கெடுப்பதால் கடமைகளை முன்னுரிமை படுத்துவதோடு படிப்பு மற்றும் விளையாட்டுக்கு இடையே நல்ல சமநிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். குழந்தைகள் சிறப்பாக தங்கள் நாள் மற்றும் பணிகளைத் திட்டமிடுவதற்கு இது உதவுகிறது – திறன்களை பழக்கத்தோடு கூர்படுத்த முடியும்.

4) அத்தியாவசிய சமூக திறன்களை மேம்படுத்துதல்

புதிய நபர்களுடன் தொடர்புகொள்வது, நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொள்வது போன்றவை மனநல மற்றும் உணர்ச்சிபூர்வமான நன்மைகளை அளிக்கும். இது புதிய நண்பர்களை உருவாக்க உதவுவதோடு, அவர்களது சுய நம்பிக்கையையும் அதிகரிக்க உதவியாக இருக்கும்.

5) புதிய விஷயங்களை ஆராய்வது

கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகள் விளையாட்டு மைதானத்தோடு மட்டும் நின்றுவிடுவதல்ல. PC-க்கள் எப்போதும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளவும் மற்றும் புதிய ஒன்றை அதிகமாக அணுகல் செய்யவும் ஏதுவானதாக்குகிறது. Canva வழியாக டிஜிட்டல் கலைகளை எடுத்துக் கொள்ளவும் அல்லது Code.org இலிருந்து குறியீடு அடிப்படையை கற்றுக்கொள்ளவும் உங்கள் பிள்ளைக்கு உற்சாகம் தரலாம். இந்த நடவடிக்கைகள் இன்னும் உங்கள் பிள்ளையின் பள்ளியால் வழங்கப்படவில்லை என்றால், அதை நிறுவுவதற்கோ அல்லது உங்கள் பிள்ளைகளில் தூண்டுதலை உந்துவிக்ககூடிய முயற்சிகளை எடுக்குமாறும் அதிகாரிகளிடம் நீங்கள் பேசலாம்!

உங்கள் பிள்ளை சவாலானதை உணரும் வரை மேலும் செயல்பாட்டை அனுபவிக்கும் வரை, உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ஒருபோதும் “அம்மா எனக்கு போர் அடிக்குது” என்று சொல்லமாட்டார்கள் :)