நீங்கள் முயற்சிக்க வேண்டிய ஐந்து ஸ்டடி ப்ரேக் ஆலோசனைகள்

 

 

தேர்வு நேரம் மிகவும் மன அழுத்தம் கொண்டதாக இருக்கும். பசி, தூக்கம், கவனம் இருக்காது அது உங்களின் அனைத்து செயல்திறன்களையும் பாதிக்கும். ஒரு சில எளிய படிநிலைகள் அழுத்தத்திலிருந்து விடுதலை தரும் மேலும் பரீட்சைகளின் போது நீங்கள் மன அழுத்தத்தை குறைப்பதோடு நேரத்துக்கு இடைவெளிகளும் எடுத்துக்கொள்ள உதவும்.

ஒரு ஸ்டடி ப்ரேக்கின் போது நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்:

1) ஒரு ஃப்ரண்டுக்கு ஃபோன் கால் செய்யுங்கள்

உங்கள் மூளைக்கு சிறு ஓய்வு கொடுப்பதற்காக உங்கள் பெஸ்ட் ஃப்ரண்டுக்கு கால் செய்து ஜோக் சொல்லி செய்யுங்கள் அல்லது விளையாட்டு குறித்து விவாதியுங்கள். உங்களுக்கு பிடித்தவர்களோடு கொஞ்சம் நேரம் பேசினால் உங்கள் மனம் உற்சாகமடையும் – பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம் கவனம் இருக்கட்டும்! நீங்கள் படித்ததைக் குறித்து உங்கள் நண்பரைக் கேள்வி கேட்க செய்து ஒரு வேடிக்கையான குயிஸை விளையாடுவது கூட உங்கள் மனநிலையை மாற்றலாம்.

2) மூளை பயிற்சி

மூளை பயிற்சி நடவடிக்கைகள் சிக்கல் தீர்க்கும் திறன் மேம்படுத்தவும், உங்கள் வக்காபுலரி அறிவாற்றைப் பெருக்கும் மேலும் படிப்பதால் ஏற்படும் சோர்வை அகற்றும்.ப்ரேக்கில் க்ராஸ்வேர்டும், சுடோகு அல்லது லுமோசிட்டு போன்றவைகளை விளையாடுவதன் மூலம் உண்மையில் உங்களை சிறந்தவராக்கும் ஆக்கும், விழிப்பாக்கும் மேலும் அடுத்த ஸ்டடி அமர்வுக்கு தயாராக்கும்.

3) ஊக்கம் பெறுங்கள்

படிக்க அமர்வதற்கு முன், உங்களை ஊக்குவிக்கும் நபர்கள் அல்லது உங்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை பட்டியலிடுங்கள். உங்கள் மேசையில் படிப்பதற்கு ஒரு உற்சாகமான மனநிலையை உருவாக்க அவர்களது படங்களை அல்லது மேற்கோள்களை நீங்கள் வைக்கலாம். உங்கள் குறிக்கோள்கள் மற்றும் ரிவார்டுகளை எழுதுவது கூட ஒரு அதிகபட்ச செயல்பாடாகும்! உங்கள் ப்ரேக் நேரங்களில் டெட் டாக்ஸை படிப்பது அல்லது பார்ப்பது உங்களுக்கு ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும்.

4) ஆக்கத்திறன் கொண்டிருங்கள்

உங்கள் ஆக்கத்திறன் உங்களை வழி நடத்தட்டும்! உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் கிட்டார் வாசிப்பது அல்லது டூட்லிங் விளையாடுவது போன்ற உங்கள் படிப்போடு தொடர்பில்லாத செயல்பாடுகளிலும் அக்கறை காட்டுங்கள். இது ஒரு புதிய மனம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கவனத்தோடு படிக்க திரும்புவதை உறுதிசெய்யும்.

5) உங்கள் பக்கெட் லிஸ்ட்டை அப்டேட் செய்யுங்கள்

ஒரு பக்கெட் லிஸ்ட்டை உருவாக்குவது என்பது உங்கள் இலக்குகளை நோக்கி உந்துவிக்கும் ஒரு சிறந்த வழியாகும்! நீங்கள் இன்னும் பக்கெட் லிஸ்ட்டை உருவாக்க ஆரம்பிக்கவில்லை என்றால், இது தான் அதற்கானநேரம் ஆகும்! எல்லா இடங்கள், உணவு மற்றும் சாகசங்களை வோர்டு டாகுமெண்ட்டில் லிங்கோடு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் ஸ்டடி ப்ளனின் ஒவ்வொரு மைல்கல்லை அடையும் போதும், உங்கள் பக்கெட் லிஸ்ட்டில் ஏதாவது ஒன்றை சேர்த்து உங்களையே பாராட்டிக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றையும் சரியாக செய்ய தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி படிப்பதை எளிதாக்க மறக்காதீர்கள் – ப்ரொஜக்ட்டிலிருந்து ப்ரசன்டேஷன் வரை!