ஒவ்வொரு மாணவரும் பின்பற்ற வேண்டிய ஐந்து ஸ்டடி ஸ்டெப்

 

படித்தல் என்பது தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் படிப்பதோ அல்லது ஒரு ப்ராஜக்டிற்கு ஒரு நாள் படிப்பதோ இல்லை.

எவ்வளவு சீக்கிரமாக நீங்கள் படிக்க ஆரம்பிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் பாடத்தை ஆழமாக புரிந்து கொள்ள முடியும் மேலும் இது நீங்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கான நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். [1]

ஒரு PC உங்கள் தேர்வை நீங்கள் சிறப்பாக செய்ய மட்டும் உதவாது மாறாக, சிக்கலான கோட்பாடுகளை நீங்கள் ஆராய்ந்து புரிந்து கொள்ளவும் உதவும்.

ஒரு PC ஐப் பயன்படுத்தி படிப்பதைப் பெறுவதற்கு ஐந்து படிப்பு குறிப்புகள் இங்கே உள்ளன:

1.  ஒரு அட்டவணையை உருவாக்கி அதை பழக்கத்திற்கு கொண்டு வருவது 

படிப்பதற்கான ஒரு அட்டவணையை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் எடுக்கும் மேலும் எத்தனை பாடங்களை உங்களால் முடிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கூகுள் போன்ற டூல்ஸ் ஒரு நிரந்தர ஸ்டடி சுழற்சியை உருவாக்க உதவியாகஇருக்கும். ஆனால் உங்கள் அட்டவணையில் போதுமான இடைவெளிகள் இருக்கட்டும்.

2.  வகுப்பில் குறிப்புகளை எடுத்தல்

வகுப்பில் பகிர்ந்துகொள்ளப்படும் பாடம் தொடர்பான விஷயங்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டு, பரீட்சைக்கு படிக்கும்போது அல்லது ஒரு ப்ராஜக்ட்டில்   பணியாற்றும்போது அந்த குறிப்புகளை பயன்படுத்தும் வகையில்   சேமிப்பது ஒரு வழி. பேப்பர் வொர்க்ஸூம் நல்லது தான் இருப்பினும் வோர்டு ப்ரொஸஸர் கூடுதல் நன்மை பயக்கும். இது இணையத்தில் இருந்து குறிப்புகள் மற்றும் இணைப்புகளுடன் குறிப்புகளைத் தனிப்பயனாக்க உதவுகிறது.

3.  கற்பிக்கப்பட்ட கருத்துகளை நிஜ வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளக்   கற்றுக்கொள்ளுங்கள்

படிக்கும் போது, எப்பொழுதும் ப்ராக்டிக்கல் மற்றும் தேரிக்கு இடையே ஒரு தொடர்பினை ஏற்படுத்தி படியுங்கள். நீங்கள் வகுப்பில் கற்றுக்கொண்ட விஷயங்களை உங்களுடைய தினசரி விஷயங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கும் போது அவைகளை நினைவு கொள்வதை எளிதாக்கும். கோட்பாடுகளை எளிதாக புரிந்து கொள்வதற்காக வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட் [2] களை மேற்கொள்வது   மேலும் எஜூகேஷனல் கேம்ஸ் [3] விளையாடுவது போன்றவை உதவியாக இருக்கும்.

4.  நீங்கள் உங்களையே பரிசோத்தித்து உங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் 

ஒரே பாடத்தை   திரும்பத் திரும்பப் படிப்பதைவிட ஒவ்வொரு தலைப்பையும் நீங்கள் கற்ற பிறகு உங்களை நீங்களே பரிசோதிப்பது அதை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு சிறந்த வழியாகும். [4] ஆன்லைன் டூல்ஸை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் படித்தவற்றை நீங்களே பரிசோதிக்கலாம். முதலில் அது உங்களுக்கு எல்லாம் சரியாக வராமல் இருந்தாலும், உங்கள் தவறுகளை நீங்கள் திருத்திக் கொள்ள முடியும். அடுத்த முறை நீங்கள் இன்னும் சிறப்பாக செய்ய அது உதவியாகஇருக்கும்.

5.  நீங்கள் படித்ததை அடிக்கடி மறுபார்வை பார்ப்பது 

நிலைத்தன்மையும் முக்கியமானது. ஸ்டடி மெட்டீரியலை அடிக்கடி திருப பார்த்து சாத்தியமானால் தினமும் மற்றும் வாரத்தில் ஒரு நாள் ஆன்லைன் குறிப்புகளை அவ்வப்போது பார்க்க வேண்டும். இது நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்பதோடு மட்டுமல்லாமல், தேர்வுக்கு முந்தைய நாள் உங்கள் அழுத்தத்தை குறைக்கவும் செய்யும்.

திறமையாக படிப்பதன் மூலம்   அது கற்றலையும் மற்றும் நினைவாற்றலையும்   ஊக்குவிக்கிறது. இது நீங்கள் ஸ்மார்ட்டாக படிக்க உதவுகிறது, அதே சமயம் அது உங்கள் பள்ளி திட்டமாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும்.