2020-ல் நீங்கள் பார்க்கப்போகும் ஐந்து தொழில்நுட்பப் போக்குகள்

 

தகவலின் தரத்தைப் பொறுத்து வளர்ச்சி அமையக்கூடிய அறிவுப் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா பெருமளவில் நகர்ந்து கொண்டிருப்பதால், தேவையான திறன்களைக் கொண்டு நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதென்பது நமக்கு மிகவும் அவசியமாகிறது. கற்றுக்கொள்ளவும் மற்றும் தொழில்நுட்பத்துடன் வசதியாக இருக்கவுமான திறமை என்பது, ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கவேண்டிய மிக முக்கியமான திறன்களில் ஒன்றாகும்

  1. குரல் தொழில்நுட்பம்

 

 

விலைமதிப்பற்ற நேரத்தை சேமிப்பதன் மூலம், தகவலுக்கான அணுகலைப் பெறுவதை எளிதாக்கும் விதமாக, கட்டளையிடப்பட்ட செயலைச் செய்வதற்கு, பேச்சறிதலை குரல் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. 1 உண்மையில் சொல்லப்போனால், குரல் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்கள் புதிய கருத்துக்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வேடிக்கையான விளையாட்டை உருவாக்குவதன் மூலம், வகுப்பறை கற்றலை மேம்படுத்த இது பயன்படுத்தப்படலாம். 2  

 

2. 5ஜி

 

 

5ஜி என்பது அடுத்த தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பமாகும். இது 4ஜி-யின் ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். அதிக இணைய வேகம், அதிக அலைவரிசை மற்றும் குறைவான பின்தங்கல் அல்லது இடையகப்படுத்தல் போன்ற பல நன்மைகளை இது கொண்டுள்ளது. இதனை மேலும் சிறப்பு வாய்ந்ததாக ஆக்குவது என்னவெனில், கணினிகள், IoT மற்றும் திறன்மிக்க சாதனங்கள் போன்ற திறன்பேசிகளுக்கு அப்பாலும் இது இணைப்பை இயக்கமுடியும் என்பதாகும். 3

 

3. தரவு பகுப்பாய்வு

 

 

இது, பெரிய அளவிலான மூலத் தரவுகளை, வேலைசெய்யக்கூடிய மற்றும் பயனுள்ள வடிவத்திற்கு மாற்றுவதற்கான செயலாக்கத்தை உள்ளடக்குகிறது. தரவைப் புரிந்துகொள்வதற்கும், சிக்கல்களைக் கண்டறிவதற்கும், தரவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளைச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படலாம். 4 உதாரணமாக, ஒரு மாணவனின் கற்றல் திறன் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில், அனுபவங்களை உருவாக்குவதற்காக அவனுடைய சோதனை மதிப்பெண்களை ஆசிரியர்கள் பகுப்பாய்வு செய்யலாம்.

 

4. இணைய உலகம்

 

 

இணைய உலகம் (IoT) என்பது, தரவைச் சேகரித்து பகிர்ந்துகொள்ளும் ஒரு பிணையத்தை உருவாக்கும் விதமாக, சாதனங்களை இணையத்துடனும், ஒன்றுடன் ஒன்றும் இணைப்பதாகும். இன்று IoT என்பதை, சுய-ஓட்டுநர் கார்கள், உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் உட்பட, வாழ்க்கையின் ஒவ்வொரு செயற்களத்திலும் காணலாம் 6 மற்றும் கற்றல்பொருட்கள் இணைய வழியாக கிடைப்பதற்கும், தரங்களை நிர்வகிக்கவும் மற்றும் இணையவழியாக வகுப்புகள் எடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.  7

 

5. இணைய பாதுகாப்பு

 

 

வங்கி விவரங்கள் போன்ற முக்கிய தகவல்கள் டிஜிட்டலில் இருப்பதால், இணையப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இன்றையதினம், அதிகரிக்கப்பட்ட இணைய இணைப்பு காரணமாக, இலக்களிக்கப்பட்ட பணயத் தீநிரல், மின்-தூண்டிலிடல் மற்றும் கைபேசி வங்கிச்சேவை தாக்குதல்கள் போன்ற பல அச்சுறுத்தல்கள் உள்ளன. AI போன்ற தொழில்நுட்பங்களை ஏற்படுத்தியதன் மூலம், இந்தப் பிரச்சினைகளை எதிர்த்து நாம் போராட முடியும் மற்றும் இணையத்தைப் பாதுகாப்பாக வைக்க முடியும். 8

வரவிருக்கும் போக்குகளைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம் எனும்போது, அத்தியாவசிய PC திறன்களுடன் நமது குழந்தைகளை ஆயத்தப்படுத்துவதும் மிகவும் அவசியமாகும். இந்த 2020-ல், நாம் ஒன்றுசேர்ந்து தொழில்நுட்பத்தை தழுவிக்கொள்வோம்!