குருட்டு மனப்பாடம் செய்ய விரும்பாத போது நீங்கள் படிக்க உதவும் ஐந்து வழிகள்

 

முக்கியமான ஃபார்முலாக்கள் மற்றும் சிக்கலான பெயர்களை நினைவில் கொள்ள தான் இந்த ராட் லேர்னிங் தேவைப்படும் ஆனால், கட்டாயமாக அது மட்டுமே உங்கள் படிக்கும் முறையாக இருக்க முடியாது. ஒரு நீண்ட கால அடிப்படையில் படிக்கும் வழக்கத்தை வேடிக்கையானதாகவும், நன்மை பயக்க தக்கதாகவும் மாற்றுவதற்கு ஒரு PC –யின் யுடன் அவற்றை கலந்து படிக்கலாம்.

குருட்டு மனப்பாடம் செய்ய விரும்பாத போது நீங்கள் படிக்க உதவும் ஐந்து வழிகள்

1. உங்கள் சொந்த “டெக்ஸ்ட்புக்”கை எழுதுங்கள்

டையகிராம்ஸ், மைண்டு மேப்ஸ், ப்ரசன்டேஷன் ஹேண்டவுட்ஸ் இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் என்ன கற்கிறீர்கள் என்பதை எழுதவும் – அதே அடிப்படையில், உங்களுக்கு சுலபமாக இருக்கும் எந்த வடிவில் இருக்கும் ஸ்டடி மெட்டீரியலாகவும் அது இருக்கலாம். இதனுடைய மிகப்பெரிய நன்மை என்னவென்றால் படிக்கும் போது நீங்கள் மிக விழிப்போடு இருப்பீர்கள் அதோடு அனைத்து ஸ்டடி மெட்டீரியலும் ஒரே இடத்தில் இருக்கும்.

2. முயற்சி செய், கற்க செய், தவறு செய் & திரும்ப செய் – நீங்கள் வெற்றி பெறும் வரை

இது கொஞ்சம் நேரம் தான் எடுக்கும் – இருந்தாலும் பலன் கொடுக்க கூடியது தான். அது மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட்டைக் கொண்டு செய்யப்படும் சைன்டிஃபிக் தியரியை பரிசோதிப்பதாக இருக்கட்டும் அல்லது மூன்றாந்தர மொழியைப் பேசக்கூடிய ஒருவரிடம் மேற்கொள்ளும் ஒரு முழுமையான உரையாடலாக இருக்கட்டும் – நீங்கள் வெல்லும் வரை முயற்சிக்கவும்.

3. டயலோஜிக் லேர்னிங்கிற்கு ஒரு ட்ரை கொடுங்கள்

இந்த டயலோஜிக் லேர்னிங், ஒரு தலைப்பு குறித்த பொருளடக்க புரிதலை மேம்படுத்துவதற்கு தேவையான கலந்தாய்வு மற்றும் டையலாக் மேல் அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதை செய்வதற்கு, உங்கள் வகுப்பு தோழர்களை குழுவாக சேர்த்து, ஒன்றாக சேர்ந்து பதில்களை கண்டு பிடிக்கலாம் மேலும் முக்கியமான தியரி மற்றும் கோட்பாடுகளை மாற்றி மாற்றி பரிசோதித்துக் கொள்ளலாம்.

4. நீங்கள் இப்போது கற்ற தகவல்களைக் கொண்டு உங்களுக்கென குயிஸ்களை உருவாக்குங்கள்

நல்ல மதிப்பெண்களை பெறுவதற்காக கடந்த பரிட்சை பேப்பர்களை பயிற்சி செய்வது என்பது முயற்சிக்கப்பட்ட மற்றும் பரிசோதிக்கப்பட்ட முறையாகும். நீங்கள் தொடர்ந்து முன்னேறிச் சென்று குயிஸ்லெட்டில் கேள்வித் தாள்களையும் உருவாக்கலாம் மேலும் தேர்வுக்கு தேவையான தன்னம்பிக்கை அளவை நீங்களாகவே பரிசோதித்துக் கொள்ளலாம்.

5. உங்களை காப்பாற்ற தக்க ஃப்ள்ஷ் கார்ட்ஸ்

தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன், க்ராம்-ல் உங்கள் ஃப்ள்ஷ் கார்டுகளை உருவாக்கி, நீங்கள் படித்த அனைத்தும் உங்கள் நுனி விரலில் தான் இருக்கிறது என்பதை உறுதி செய்ய ஒவ்வொரு நாளும் அதைக் கொண்டு பரிசோதிக்கவும். தேர்வுக்கு இரண்டொரு ரிவிஷன்கள் மட்டும் பார்ப்பதை விட ஒவ்வொரு நாளும் உங்கள் நோட்ஸ்களை பார்ப்பதன் மூலம், எல்லாவற்றையும் நீங்கள் தெளிவாக நினைவில் வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உண்மையில் இந்த ஸ்டடி முறைகள் ஒவ்வொன்றையும் மிகச் சிறப்பாக செய்ய, உங்கள் கால அட்டவணையில் இவற்றையும் இணைத்துக் கொள்ளுங்கள். ஒரு PC யில், ரிசர்ச்-ஐ அக்ஸஸ் செய்வது விரைவான செயல் மட்டும் அல்ல ஆனால் நீங்கள் படித்ததை சேவ் செய்து கொள்வதற்கான திறமையான வழி ஆகும் மேலும் அதை உங்கள் குறிப்போடு சேர்த்துக்கொள்ளலாம், இது உங்கள் ரிவிஷனுக்கான ஒரு வின்-வின் சிட்டுவேஷன் ஆகும்.