உங்கள் மாணவர்களின் விமர்சன சிந்தனை திறன்களை அதிகரிக்க ஐந்து வழிகள்

 

விமர்சன சிந்தனை என்பது கடந்து மறைந்து போகும் ஒரு விஷயமில்லை. இது ஒரு *முக்கியமான*(நோக்கம்)  திறன் அதை இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது எதிர்காலத்தை தயாராக்க தேவைப்படுகிறது.

எளிதாக சொல்ல வேண்டுமானால், இரு பக்கங்களிலிருந்தும் தகவல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஒரு கருத்தை உருவாக்குவதற்கான திறமை தான் இது. உங்கள் மாணவர்கள் வகுப்பில் கற்பிக்கப்படும் கருத்தாக்கத்தின் பின்னால் இருக்கும் லாஜிக் மற்றும் பகுத்தறிதல் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும், தேர்வுக்காக அதை நன்றாகவே நினைவில் வைத்திருக்க முடியும் – ஆரம்பத்திலிருந்தே படிப்பதை குறைக்கும்.

உங்கள் மாணவர்களின் விமர்சன சிந்தனை திறன்களை அதிகரிக்க இதோ ஐந்து வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன:

1) நாளிற்கான கேள்வி

உங்கள் வகுப்பின் இறுதியில், வகுப்பில் அவர்களை குழப்பம் அடையச் செய்யும் ஏதாவது ஒரு கேள்வியைக் கேட்கவும் – உலகம் தட்டையாக இருந்தால் எப்படி இருக்கும்? போன்றவை. இது போன்ற ஒரு செயல்பாடு உங்கள் மாணவர்கள் படிக்கையில் "ஏன்" கோட்பாட்டின் அர்த்ததை புரிந்து கொள்வார்கள்.

2) "ஏன்"

ஒரு கோட்பாட்டின் பின்னால் உள்ள நியாயத்தை உங்கள் மாணவர்களைக் கண்டுபிடிக்க அனுமதிப்பதன் மூலம் வகுப்பின் சாதாரண வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு, “இலைகள்ஏன் பச்சையாக இருக்கின்றன?” என்று கேளுங்கள் மேலும் அவர்கள் பதில் என்னவாக இருக்கும்என்று பாருங்கள்! இந்த செயல்பாடு உங்கள் வகுப்பை மேலும் ஈடுபாட்டோடும் மற்றும் உற்சாகமூட்டுவதாகவும் செய்யும்.

3) விவாதங்கள் நல்லதே

மாணவர்களுக்கு நேரத்தை ஒதுக்கி விவாதத்திற்கென அவர்களுக்குள் ஆர்வத்தை தூண்டும் ஒரு தலைப்பை கொடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்ட சீருடைகள் போன்ற தலைப்பு. உங்கள் மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரும்போது நீங்கள் இன்னும் அதிகமான தலைப்புகள் கொடுக்க முடியும். PC யில் தேட ஊக்குவிக்கவும், அப்போதுதான் அனைவராலும் நன்கு அறியப்பட்ட விவாதங்களை உருவாக்க முடியும்.

4) டாட்ஸ்களை இணைக்கவும்

மைண்ட்மெயிஸ்டர் போன்ற டெக் டூல்களைப் பயன்படுத்தி வெவ்வேறான தியரிகளை ஒன்றோடொன்று இணைக்கவும். இத்தகைய இணைப்புகள் தான் உங்கள் மாணவர்கள் தேர்வு வரை அவற்றை  நினைவில் வைத்திருக்க உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக இறுதி நாளில் மதிப்பெண்கள் தான் பெரிய விஷயமே!

5) இது சரியா அல்லது தவறா? 

கூகுள் ஃபார்ம்ஸ் அல்லது சர்வேமங்க்கி போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி  பதில் அளிக்க கடினமாக இருக்கும் கேள்விகளுக்கு சரியா அல்லது தவறா கேள்விகளுக்கு உங்கள் மாணவர்களை பதில் அளிக்கச் சொல்லி கேளுங்கள். இதை ஆரம்பிக்க பஸ்ஃபீடால் வழங்கப்படும் குயிஸை தவிர வேறு பெரிய குறிப்பு இருக்க முடியாது.

ஒரு PC யை பயன்படுத்துவதற்கான இணைப்பு மற்றும் பாட பொருளடக்கத்தின் விஷயங்களைப் பற்றிய மேம்பட்ட புரிந்துணர்வு தான் இன்றைய கல்வி வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது.இது ஏனென்றால், ஒரு PC உங்கள் மாணவர்களை தனித்து பயிலுபவர்களாக மாற்றுகிறது மேலும் கற்றலை காதலிப்பவர்களாகவும் அவர்களை மாற்றும்.