உங்கள் குழந்தையின் கற்றல் திறன்களை திறப்பதற்கான ஐந்து வழிகள்

”கல்வி என்ற அஸ்திவாரத்தின் மேல் தான் நாம் நமது எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்.” – கிறிஸ்டின் கிரகோரி

 

ஒரு பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகள் கல்வி முறையை தக்கவைத்துக் கொள்வதை விட, அவர்கள் பள்ளியில் வெற்றி நடை போடுவது தான் பெருமைக்குரிய ஒரு தருணமாக இருக்கும். அவர்கள் பள்ளியில் தங்கள் கற்றலை சிறந்ததாக்க, ஒரு குழந்தை அதனுடைய கற்றல் திறனை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும். இதோ உங்கள் குழந்தைக்கு உதவுவதற்கான படிநிலைவாரியான வழிகாட்டு குறிப்புகள் உள்ளன:

 

1) படிப்பதை ஒரு தின பழக்கமாக உருவாக்குங்கள்

ஒவ்வொரு நாளும் வாசிப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் அது உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் சிறப்பாக எழுதுவதற்குமான ஒரு வாய்ப்பாக அமைகிறது. அது செய்திதாளின் ஸ்போர்ட்ஸ் பிரிவாகவோ அல்லது கிளாசிக் நாவலிலிருந்து ஒரு சேப்டராகவோ இருக்கலாம்- ஆனால் தினமும் படிப்பதன் மூலம் உங்கள் குழந்தை புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளும் மேலும் மொழி சூழலை நன்கு புரிந்து கொள்ளும்.

 

2) அவர்களின் கிரியேட்டிவ் பக்கத்தை வெளியே கொண்டு வாருங்கள்

ஒவ்வொரு வயதினருக்குமான மற்றும் வேறுபட்ட ஆர்முள்ளவர்களுக்கென மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட் உள்ளது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் குழந்தைக்கு வேடிக்கையானவற்றைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுப்பதாகும். ஒவ்வொரு மேக்கர்ஸ்பேஸ் ப்ரொஜக்ட்டும் உங்கள் குழந்தைக்கு புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுக்கும். கடினமாக தோன்றும் ஒரு வேலையை செய்து முடித்த பிறகு வருகின்ற வெற்றியை போல் சிறந்த வெற்றி வேறெதுவுமில்லை!

 

3) அவைகளை விளையாட்டாகவே பெறுங்கள்

உங்கள் குழந்தையின் ஸ்டடி ரொட்டீனோடு விளையாட்டை சேர்ப்பதற்கான சிறந்த பகுதி என்னவென்றால், அவர்கள் விளையாடும்போது ஒரு போதும் “போர் அடிக்கிறது” என்று சொல்லமாட்டார்கள். அது தேர்வுக்காக படிக்கையில் இடையிலே எடுக்கப்படும் ப்ரேக்காக இருக்கலாம் அல்லது முழு பாடத்தையும் முடித்த பிறகு உள்ள ஸ்பெஷல் ட்ரீட்டாக கூட அது இருக்கலாம். இதன் சிறந்த பகுதியாக உங்கள் குழந்தைகள் அவர்களின் அனைத்து முயற்சிகள் நோக்கி உந்தப்படுவார்கள், மேலும் அவர்களின் திறன்களை கண்டறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

 

4) உங்கள் குழந்தையின் லேர்னிங் ஸ்டைலை அடையாளம் காணுங்கள்

காலப்போக்கில் மேலும் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு சிறந்ததாக தோன்றும் லேர்னிங் முறையை மேம்படுத்திக் கொள்ள ஆரம்பிப்பார்கள். ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தையின் லேர்னிங் ஸ்டைலை அடையாளம் காண வேண்டும் மேலும் சரியான ரிசோர்ஸின் பயன்பாட்டில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

 

5) குறிப்பிட்ட கருத்து தெரிவிக்கவும்

கற்றலை பலப்படுத்துவதற்காக விளையாட்டு என்பது முயற்சிக்கப்பட்ட மற்றும் பரிசோதிக்கப்பட்ட அறிவுரை தான் இருப்பினும் உங்கள் குழந்தையின் பலவீனமான பாடங்கள் குறித்து நீங்கள் என்ன செய்வீர்கள்?

அதற்கான முதல் படி என்னவென்றால், உங்கள் டீச்சர்களிடம் குறிப்பிட்ட, செயல்திறன் வாய்ந்த கருத்துக்களை பெற்று அதன்படி அதற்கேற்ற உதவிகளை பெறுவதாகும். இங்கே அதற்கான சாவி எதுவெனில், உங்கள் குழந்தையின் டீச்சரிடம் அதிகமான கேள்விகள் கேளுங்கள், எத்தகைய கேள்விகள் எனில் ‘ஆம் அல்லது இல்லை’ பதில்களைக் கொண்ட கேள்விகள் இல்லை.

உங்கள் குழந்தையின் வெற்றிக்கான மிகப்பெரிய ஊக்கப்படுத்தும் கருவியாகிய இந்த PC –யை மறந்துவிடாதீர்கள்.