எதிர்காலத்தில் இருக்கக்கூடிய நான்கு தொழில்கள்

 

"தகவல் தொழில்நுட்பமும் வணிகமும் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஒன்றைப் பற்றி ஒருவர் அர்த்தமுள்ள வகையில் பேசும்பொழுது, மற்றொன்றைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்."- பில் கேட்ஸ்

இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் 65% குழந்தைகள், நமது ராடாரில் இல்லாத புதிய வகை வேலைகளில் இறுதியாக பணிபுரிகிறார்கள். [1] அந்த வேலைகள் என்னவென்பது குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா?

3D வடிவமைப்பு நிபுணர்

3D வடிவமைப்பு நிபுணர் என்பது 3D கருவிகள் மற்றும் அதன் வடிவமைப்பு பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிய ஒரு நல்ல புரிதலைக் கொண்ட தனிநபர் ஆகும். தொழிற்துறை சார்ந்த மென்பொருளி(களி)ல் வடிவமைப்பு, திட்ட மேலாண்மை மற்றும் திறமை ஆகியவை இந்தத் தொழிலை சிறப்பாகச் செய்யத் தேவையான திறன்கள் ஆகும். மரச்சாமான்களில் இருந்து செயற்கை உறுப்புகள் வரை தேவையான பொருட்களை உருவாக்க வடிவமைப்பாளர்களுக்கு அதிக தேவை இருக்கிறது, அது போதுமான வாய்ப்பு கொண்ட ஒரு தொழிலை அளிக்கிறது.

மெய்நிகர் யதார்த்த அனுபவ வடிவமைப்பாளர்

மெய்நிகர் யதார்த்தம் என்பது ஒரு கணினி உருவாக்கிய சூழலாகும், இது ஒரு தனிச்சிறப்பான ஹெட்செட் மூலம் நீங்கள் வேறுபட்ட அனுபவத்தை அனுபவிக்க உதவுகிறது. வடிவமைப்பாளர் என்பவர் வெளி உலகம் போலவே உண்மையான ஒரு 'நம்பமுடியாத' மெய்நிகர் அனுபவத்தை ஆராய்ந்து, திட்டமிட்டு, வடிவமைத்து, செயல்படுத்துகிறார். பொருத்தமான தொழில்நுட்ப திறன்களுடன், நுகர்வோரின் மனப்பாங்கு பற்றிய ஆழ்ந்த புரிதலும், இயல்பான திறமையும்கொண்ட  தனிநபர்கள் இந்த பணிக்கு தேவைப்படுபவர்களாக உள்ளனர். மெய்நிகர் யதார்த்தம் என்பது மெய்நிகர் பயிற்சி மாநாடுகள், குழு கூட்டங்கள், தொலைதூர இடங்களில் விடுமுறை சுற்றுலாக்கள், கற்பனையான சோதனை ஓட்டங்கள் மற்றும் இன்னும் பலவற்றை செயல்படுத்தவும் போதுமானதாக உள்ளது. [2]

டிஜிட்டல் நாணய ஆலோசகர்கள்

பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்களானது முதலீடு மற்றும் தேவை ஆகியவற்றை நிர்வகிக்க வல்லுனர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் தேவைக்கு உள்ளன. ஒரு டிஜிட்டல் நாணய ஆலோசகர் என்பவர் இந்த புதிய நிதியியல் சூழலில் தங்கள் செல்வங்களை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை மக்களுக்குக் காண்பிப்பார். ஆலோசகர் என்பவர் நிதி மேலாண்மை, கணக்கியல், கணினி பாதுகாப்பு மற்றும் இயங்குதளம் ஆகியவற்றில் திறமையுடன் இருக்க வேண்டும். [3]

மனிதன்- தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு நிபுணர்

ஒரு மனிதன்-தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பு நிபுணர் என்பவர் தொழில்நுட்பத்தின் தினசரி பயன்பாடு குறித்து ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்கிறார். தொழில்நுட்பம் என்பது வேலையில் இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்தாலும், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்கனவே மாறிவிட்டது. எனவே, உற்பத்தித்திறனை அதிகரிக்க தொழில்நுட்பத்தை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதே ஒரு உண்மையான தேவையாக இருக்கிறது. ஒரு கிளையண்ட் சிறந்ததைப் பெறுவதற்காக பல சாதனங்களையும், மென்பொருளையும் தொடர்ச்சியாக ஒழுங்கமைக்க முடியும் என்பதால், தனிநபர் திறன்கள் மற்றும் ஐ.டி குறித்த அறிவு ஆகியவை பணிக்கு முக்கியமாகும்.

இந்த தொழில்கள் அனைத்திலும் உள்ள பொதுவான விஷயம் என்பது தொழில்நுட்பமாகும். குழந்தைகள் இன்றைய தொழில்நுட்ப ஆர்வலராகவும், நாளைய திறமையானவர்களாகவும் ஆவதற்கு தயாராக இருக்க வேண்டும். இதைத் தொடங்குவதற்கு சரியான பீசி ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் http://www.dellaarambh.com/pick-right-school-pc/