ஒவ்வொரு ஆசிரியரும் கற்பிக்கும்பொழுது பின்பற்ற வேண்டிய நான்கு விஷயங்கள்

 

"மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பீசி என்பது படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு தளத்தை ஆசிரியர்களுக்கும் வழங்குகிறது; கற்றலை ஊக்குவிப்பதற்கான புதிய வழிமுறைகளை பரிசோதிக்க உதவுகிறது."

- செல்வி.ஆகான்ஷாபக்ஷி - இணை இயக்குநர் சீட்லிங் சர்வதேச அகாடமி

ஒரு ஆசிரியரின் பங்கு என்பது ஒரு மாணவரின் வாழ்க்கையில் தொடர்ந்து நிலையானதாக இருக்கிறது. தரமான ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களின் கல்விசார்ந்த செயல்திறனில் மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வு வெற்றிகரமாக அமைவதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் காட்டுகிறது. [1] ஆர்வமிக்க, ஊக்கமளிக்கக்கூடிய மற்றும் திறன் வாய்ந்த ஆசிரியர்கள், தரமான கல்விக்கான அஸ்திவாரத்தை அமைக்கிறார்கள்.

சரியான திசையில் ஒரு சில படிகளை எடுத்து வைப்பதன் மூலம், கல்வி மற்றும் கற்றல் ஆகியவற்றுடன் மாணவருடனான உறவை ஒரு ஆசிரியர் மேம்படுத்த முடியும்.

1. ஒரு கலந்துரையாடும் செயல்பாட்டுடன் கற்பித்தல்

ஒரு புதிய UChicago தலைமையிலான ஆய்வின் படி, கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஆழமாகப் புரிந்துகொள்கிற மாணவர்கள், தத்துவார்த்த பார்வையில் மட்டும் பார்க்கிற மாணவர்களை விட தேர்வுகளில் சிறப்பாக மதிப்பெண் பெறுகிறார்கள். [2] செயல்முறை செய்வதன் மூலம் கற்றல் என்பது களப் பயணங்கள், மெய்நிகர் உருவகப்படுத்துதல்கள், ஆய்வக பார்வையிடல்கள் மற்றும் குழு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உடனடி நடைமுறை பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறது. [2]

2. ஒருங்கிணைப்பை கற்றலின் ஒரு பகுதியாக ஆக்குதல்

ஒருங்கிணைந்த திட்டங்கள் என்பது ஒரு மாணவரின் தனிப்பட்ட திறன்கள், நேர மேலாண்மை மற்றும் அமைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். விவாதங்கள், விளக்கக்காட்சிகள், அறிக்கைகள் மற்றும் பல்வேறு சூழல்களில் கலந்துரையாடல் அமர்வுகள் போன்ற குழு செயல்பாடுகளானது, மாணவர்கள் எந்த விஷயங்களில் சிறப்பாக இருக்கிறார்கள் மற்றும் எந்த விஷயத்தில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது.

3. பலங்கள் மற்றும் பலவீனங்களை அடையாளம் காணுதல்

ஒரு மாணவர் மொழிகள் குறித்த ஒரு திறனை தெளிவாக வெளிப்படுத்தினால், பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம் போன்ற கல்விசாரா செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அதேபோன்று, உதாரணமாக அல்ஜீப்ரா போன்ற ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் புரிந்துகொள்ள ஒரு மாணவர் போராடிக்கொண்டு இருந்தால், ஒரு விக்கிஸ்பேஸ் கிளாஸ்ரூம் (Wikispace classroom) வழியாக கூடுதல் கற்றல் வளங்களை மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட குழு திட்டங்கள் போன்ற சரியான வாய்ப்பு அளிக்கப்பட்டால், மாணவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து கற்றுக் கொள்ளலாம்.[3]

4. பீசி உதவியுடன் கூடிய கற்றலை ஒரு பழக்கமாக மாற்றுதல்

பீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது மாணவர்கள் விரைவாக அறிந்துகொள்வதற்கு உதவுகிறது மற்றும் பாடங்கள் குறித்து ஆழமாக கற்பதை எளிதாக்குகிறது. [4] உருவகப்படுத்துதல்களில் இருந்து ஆன்லைன் கருவிகள் வரை, பீசி என்பது பல்வேறு வகையான கற்றல் வளங்களை வழங்குகின்றது. மனப்பாடம் செய்து கற்றல் என்பதற்கு எதிராக, பாடம் குறித்த விஷயத்தை ஒரு ஆழமான அளவில் மாணவர்கள் புரிந்துகொள்கிறார்கள், இது தகவல்களை விரைவாகவும், நீண்ட நேரத்திற்கும் அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள உதவுகிறது, இது ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகிய இருவருக்கும் பயனளிக்கிறது.

ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் புதிய கற்றல் அனுபவங்களைப் பெறுகிறார்கள், மேலும் சிறிய படிநிலைகள் மூலம் நீண்ட தூரத்திற்கு செல்கிறார்கள். இந்த உத்திகளை நடைமுறைப்படுத்துவது என்பது வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்த உதவுவதோடு, மாணவர்களுக்குள் கற்றல் மீதான ஒரு உண்மையான ஆர்வத்தைத் தூண்டும்.

எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் வகுப்பறை அனுபவத்தை எவ்வாறு நீங்கள் மேம்படுத்துகிறீர்கள்? #DellAarambh-ஐ பயன்படுத்தி எங்களுக்கு ட்வீட் செய்யுங்கள்.