ஆராய வேண்டிய வேடிக்கை நிறைந்த தொழில்நுட்ப பொழுதுபோக்குகள்!

விளையாட்டுகள் அல்லது கலை மட்டுமே பொழுதுபோக்காக அடையாளம் காணப்பட்ட காலங்கள் கடந்து  போய்விட்டன - தொழில்நுட்ப அடிப்படையிலான பொழுதுபோக்குகளை பின்பற்றுவதே இந்த நாட்களில் செய்ய வேண்டிய வழிமுறையாகும். உங்கள் ஓய்வு நேரத்தில் உங்கள் கணினியில் நீங்கள் செய்யக் கூடிய ஏராளமான கற்பனைவளமுள்ள பொழுதுபோக்குகள் உள்ளன. அவை உங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும் மற்றும் அழகான கலை படைப்புகளை உருவாக்கவும் உதவுகின்றன.

இந்த எளிய தொழில்நுட்ப அடிப்படையிலான பொழுதுபோக்குகளை செய்ய ஆரம்பியுங்கள்!

1. வலைப்பதிவிடுதல்


ஒரு வலைப்பதிவு என்பது பார்வையாளர்களை மறைமுகமாக இணையத்தில் ஈடுபடுத்தும் ஒரு நாட்குறிப்பு நடையிலுள்ள இணையதளம் ஆகும். வலைப்பதிவிடுதல் என்பது இணையவழி பத்திரிக்கையை நிர்வகிக்க அல்லது உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும்! பாரம்பரிய வலைப்பதிவுகளானது உரை மற்றும் படங்களை பயன்படுத்தும் வேளையில், கலை வலைப்பதிவிடுதல் ஊடகம் மற்றும் அரசியல் தளங்கள் வரை பரந்து விரிந்துள்ளது. உங்கள் குரலை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள சவுண்ட்கிளவ்டு போன்ற ஒலிபரப்புகளில் நீங்கள் இப்போது இணையலாம். அல்லது 140 எழுத்துக்கள் அல்லது அதற்கு குறைவாக “நுண்வலைப்பதிவிட” ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுக்கு செல்லவும். நீங்கள் எந்த தளத்தை அல்லது ஊடகத்தை விரும்புகிறீர்கள் என்பது முக்கியமல்ல, வலைப்பதிவிடுதல் என்பது உலகத்துடன் பெரிய அளவில் இணைவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

2. குறியீடாக்குதல்

கணினி மென்பொருள், செயலிகள் மற்றும் வலைத்தளங்களை எது உருவாக்க வைக்கிறது என்பது குறித்து ஆச்சரியமாக இருக்கிறதா? குறியீடு என்பதே அதற்கு பதிலாகும். உங்கள் புரவுஸர், உங்கள் இயக்கும் அமைப்பு (OS), உங்கள் போனிலுள்ள செயலிகள், முகநூல் மற்றும் இணையதளம் - இவை அனைத்தும் குறியீட்டால் உருவாக்கப்படுகின்றன. குறியீடாக்குதல் என்பது உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றும் ஒரு இலாபகரமான மற்றும் சுவாரஸ்யமான பொழுதுபோக்காகும். யாருக்குத் தெரியும், ஒருவேளை நீங்கள் கூட அடுத்த முகநூலை உருவாக்கும் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கலாம்! நீங்கள் பார்க்க விரும்பும் சில ஆதாரங்களுடன் சேர்த்து குறியீடாக்கலின் அடிப்படை கருத்துக்களை புரிந்து கொள்ள ஒரு வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

3. வீடியோ பதிவிடல்

ஒரு வீடியோ பதிவு (அல்லது வீடியோ வலைப்பதிவு) என்பது வீடியோ உள்ளடக்கத்தை கொண்டுள்ள ஒரு வலைப்பதிவாகும். நீங்கள் உங்கள் வீடியோ பதிவின் மூலம் எளிதாக துவங்கலாம் மற்றும் உங்கள் பார்வையாளர்களுக்கு உங்கள் அன்றாட செயல்பாடுகளை காண்பிக்கலாம் அல்லது அவர்கள் முயற்சிப்பதற்காக ஒரு DIY செயல்பாட்டை உருவாக்கலாம்.

இவ்விதத்தில் தங்கள் வீடியோ பதிவுகளை துவங்கியுள்ள தொழில்சார்ந்த வீடியோ பதிவாளர்கள் எத்தனை பேர் என்று நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். லில்லி சிங் ஏ.கே.ஏ. சூப்பர் பெண்மணி, சாரதா சர்மா, தன்மயி பட் போன்றவர்கள் சொந்த வீட்டிலேயே உள்ள வீடியோக்களை எடுத்து புகழ்பெற்ற சில வீடியோ பதிவாளர்கள் ஆகும். பிரபலமான யூடியூப் பயண மற்றும் அழகு வீடியோ பதிவாளர் செர்டேடு ஷெராப் ஒப்பனைக் குறிப்புகள் மூலம் புகழ் பெற்றுள்ளார். உங்கள் பொழுதுபோக்குகளை ஒரு வாழ்க்கைத் தொழிலாக மாற்றும் ஒரு நிகழ்ச்சியான டெல் பியுச்சரிஸ்ட்டின் ஒரு அங்கமாகவும் இருக்கிறார்.

அவர்களுடைய வீடியோ பதிவுகளை பார்ப்பது உங்கள் சொந்த பாணியை துவங்கவும் மற்றும் கண்டுபிடிக்கவும் உதவும். கூட்டத்தின் மத்தியில் நீங்கள் நிலைத்து நிற்பதற்கு வேண்டிய நல்ல தரமான வீடியோ பதிவுகளை தயாரிப்பதற்கான குறிப்புகளுக்கு இந்த கட்டுரையை பார்க்கவும்.

 4. புகைப்படமெடுத்தல்

நடைமுறை மற்றும் டிஜிட்டல் உலகுக்கு இடையிலான உறவை நீங்கள் ஆராய விரும்பினால் இது சரியான பொழுதுபோக்காக இருக்கும்! புகைப்படமானது  விளக்கவுரைக்கு ஒரு பார்வையை உருவாக்குவதற்கு உதவுகிறது மேலும் வாழ்வின் அற்புதமான நினைவுகளை எவ்வாறு படம் பிடிக்கலாம் என்பதை கற்றுக்கொடுக்கிறது. தெளிவான படங்களை எடுப்பதில் நீங்கள் கைதேர்ந்தவர்களானதும், நீங்கள் புகைப்பட எடிட்டிங் பற்றிய தகவல்களைக் கொண்ட இந்த வழிகாட்டியைப் பார்த்து உங்கள் சொந்த படைப்பை உருவாக்கத் துவங்கலாம்.

இந்த புதுயுக பொழுதுபோக்கானது எண்ணற்ற வாய்ப்புகளுக்கான கதவை திறக்கின்றது. உங்கள் ஆர்வம் எதுவாக இருந்தாலும் அவை உங்கள் சிந்தனையை தூண்டுகின்றன, உங்கள் எண்ணங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கும் மற்றும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் உங்களுக்கு தேவையானதெல்லாம் ஒரு கணினிதான்.

ஆகையால் நீங்கள் எதை தேர்ந்தெடுக்கப்ப போகிறீர்கள்?