இதோ, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டி ஏன் தேவை என்பதற்கான காரணங்கள்

 

நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு கேட்கப்பட வேண்டிய கதையைக் கொண்டிருக்கலாம். அதை கேட்க வேண்டிது, நீங்களாகவும் இருக்கலாம்”

- பெத்தனி ஹில்

 

தொழில்நிபுணத்துவ மற்றும் தனிநபர் மேம்பாட்டினை இலக்காகக் கொண்ட, இரண்டு நபர்களுக்கு இடையிலான உறவே வழிகாட்டுதல் ஆகும். ஒரு “வழிகாட்டி” என்பவர், பொதுவில் தனது அறிவு, அனுபவம் மற்றும் ஆலோசனைகளை குறைவான அனுபவம் கொண்ட அல்லது “வழிகாட்டலை பெறுபவர்” – க்கு வழங்கும் நிபுணத்துவம் மிக்க தனிநபராக இருப்பார்.

ஒரு வழிகாட்டியை நீங்கள் ஏன் பெற வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்கள், கீழ்காணுமாறு:

 

1. வழிகாட்டிகள் ஊக்கமளிப்பார்கள் மற்றும் நாம் தொடர்ந்து முன்னேற உதவுவார்கள்

வழிகாட்டுதல் என்பது நமக்காக சிந்திக்கும், நமக்காக செவிமடுக்கும் மற்றும் சரியான திசையை நோக்கி நம்மை செலுத்தும் ஒரு செயலாகும்”

- ஜான் கிராஸ்பி

ஒரு நல்ல வழிகாட்டி, உங்களுக்குப் பழக்கமான வட்டத்திலிருந்த உங்களை வெளியே கொண்டுவருவார், உங்கள் வலிமைகளை கட்டமைக்க உங்களை ஊக்குவிப்பார், உங்கள் குறைகளைக் களைவார் மற்றும் உங்களது சிறந்த தன்மைகளை வெளிக்கொணர, உங்களை உத்வேகிப்பார்

 

2. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவங்களையும், நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளையும் வழிகாட்டிகளின் அனுபவம் தெரிவிக்கும்

“உங்களுக்குள் உள்ள உங்களாலேயே காண முடியாத திறன்களையும் மற்றும் திறமைகளையும் காண்பதும் மற்றும் அதை வெளிக்கொணர உதவுவதுமே வழிகாட்டியின் பணியாகும்”

- பாப் பிராக்டர்

ஒரு வழிகாட்டியானவர் உங்கள் நிலையில் இருந்திருப்பார் மற்றும் அதை செய்திருப்பார். உங்களை மறுஆக்கம் செய்யத்தக்க பின்னூட்டங்களை அவரால் வழங்க முடியும் மற்றும் நீங்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கை திட்டத்தை வகுத்துத் தர முடியும். உதாரணத்திற்கு, உங்கள் ஆங்கிலப்பாடத்தின் கட்டுரையை எழுத நீங்கள் சிரமப்படுகையில், கிராமர்லி (Grammarly)அல்லது கிராமரிக்ஸ் (Grammarix)போன்ற கணிணி கருவிகளை பரிந்துரைத்து, உங்கள் வழிகாட்டியால் உங்களுக்கு உதவ முடியும்.

 

3. வழிகாட்டிகள் தனிப்பட்ட இலக்கு அமைப்புகளை வழங்குவர்

“வைரம் வைரத்தை அறுக்கும், மனிதரே மனிதரை மேம்படுத்துவர்”

- பைபிள்

படிநிலை 1 – உங்கள் இலக்கை நிர்ணயிக்கவும்

படிநிலை 2 – ஒரு நடவடிக்கை திட்டத்தை உருவாக்கவும்

படிநிலை 3 – அதை மேற்கொள்ளவும்

படிநிலை 4 – முற்றிலும் அமலாக்கவும்

படிநிலை 5 – தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும்

படிநிலை 6 – மீண்டும் அதையே செய்யவும்

வெற்றிகரமான வழிகாட்டுதலின் அடித்தளம் இலக்கினை நிர்ணயித்தலே ஆகும். ஒரு முறை நீங்கள் அதை சரியாக செய்துவிட்டால், உங்கள் வழிகாட்டியிடமிருந்து பெறத்தக்க பலன்களை முழுவதையும் பெறலாம்.

சிறப்பான வழிகாட்டுதலைப் பெறுவதன் வழியாக, தேர்வுக்கு முந்தைய நாள் மாத்திரம் படைப்பாற்றலை மேம்படுத்தாமல் – உங்களின் ஒரு பகுதியாக, உங்களுக்கு இயற்கையாகத் தோன்றும் ஒரு வழக்கமாக அது மாறும். இறுதியில், பள்ளியில் சிறந்து விளங்க யார்தான் விரும்பமாட்டார்கள்!