நவீன பெற்றோர்களைத் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றிவிட்டது

நேற்றைய நிஜத்தில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள நவீன கல்விமுறைகளை இந்தப் பெருந்தொற்று கொண்டுவந்துள்ளது. பல விஷயங்களின் செயல்முறைகள் மாறிவிட்ட நிலையில், தங்கள் குழந்தையின் கற்றல் மற்றும் வளர்ச்சியுடன் பலவற்றையும் பெற்றோர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.

முந்தைய காலங்களைப் போலில்லாமல், நவீனப் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்துப் பணியாற்றுகிறார்கள், ஏதேனும் இடைவெளி இருந்தாலும் கூட அவற்றை தொழில்நுட்பம் இணைத்துவிடுகின்றது.

1. செயலிகள் மூலம் கல்வியைச் செயல்படுத்துவது: வகுப்பறையில் இருந்து ஆன்லைன் வகுப்பு என்னும் மாற்றத்தை சுமூகமாக்க, Khan Academy Kids போன்ற தனித்துவமான கற்றல் திட்டங்கள் கொண்ட, Brainly போன்ற கடிமான வீட்டுப்பாட கேள்விகளைக் கையாள வெவ்வேறு செயலிகள் மற்றும் கல்விக்கருவிகளைப் பெற்றோர்கள் முயற்சி செய்கிறார்கள்.

2. கற்றலை மகிழ்ச்சியாக்கல்: பெரும் அளவிலான தரமான ஒலி உள்ளடக்கம் கொண்ட Kinderling Kids Radio, சிறுகுழந்தைகளுக்கு ஸ்பானிஷ் மொழியை அறிமுகப்படுத்தும் FabLingua, சிறு குழந்தைகளிடம் சிக்கல் தீர்க்கும் திறனை வளர்க்கும் Thinkrolls Play & Code போன்ற செயலிகள் கல்வி அமர்வுகளில் போது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை இணைக்க உதவுகிறது.

3. பெற்றோர் கட்டுப்பாட்டை உபயோகித்தல்/தொழில்நுட்பத்தைப் பொறுப்பாக உபயோகித்தல்: தங்கள் சகாக்களுடன் குழந்தைகள் ஊடாடும் முறையைத் தொழில்நுட்பம் மாற்றிவிட்டது. Qustodio, Kaspersky Safe Kids போன்ற பெற்றோர் கட்டுப்பாட்டு கருவிகளை உபயோகிப்பதன் மூலம் பாதுகாப்பான இணையத் தேடல் பழக்கத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துரைப்பது பெற்றோர்களின் கடமையாகும். ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்து டிஜிட்டல் குடியுரிமை பற்றி அவர்களுக்குப் புரியவைத்தால் இணையத்தின் உண்மையான ஆற்றலை அவர்கள் உபயோகிக்க உதவும்.

கல்வியில் மாறிவரும் இக்காலத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வது இன்றைய பெற்றோர்களுக்கு அவசியமான ஒன்றாகும். முறையான யுக்திகள் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் சூழலை வேடிக்கையாக, பாதுகாப்பாக மற்றும் ஆக்கபூர்வமாக மாற்றலாம். அதிக கற்றல் வாய்ப்புகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க கணிப்பொறி அறிவை Dell ஊக்குவிக்கிறது. மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.