பீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எவ்வாறு உதவுகிறது

 

எதிர்காலத்தில் ஒரு குழந்தையின் வெற்றிக்கு தொழில்நுட்பம் என்பதே முக்கியமானது ஆகும். ஒரு குழந்தை வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் பீசி உதவியுடன் கூடிய கல்வி என்பது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. [1]  பாடத்திட்டங்களுக்கு அப்பால், அவர்களை எப்பொழுதும் நல்ல நிலையில் கொண்டுசெல்ல உதவும் புறநிலை திறன்களை கற்றுக்கொள்ள உதவுகிறது.

1. சுயாதீனமாக கற்று கொள்வதற்கான முயற்சி

ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது, தகவலைச் சேகரிக்கும்பொழுது அல்லது திட்டங்களில் பணிபுரியும்பொழுது, பீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது கற்றலை தாங்களே கட்டுப்படுத்திக்கொள்ள குழந்தைகளுக்கு உதவுகிறது. நீங்களாகவே கற்றுக்கொள்வதற்கு முன்முயற்சி எடுத்துக்கொள்வது என்பது பள்ளியில் நன்றாகப் படிப்பதற்கு மட்டுமல்லாமல், பணியிடத்தில் நன்றாக பணிபுரிவதற்கும் அவசியமானதாகும், இது ‘தானாகவே கற்றுக்கொள்ளும்’ மனநிலையை குழந்தைகளுக்கு வளர்க்கிறது.

2. வேகமாக மாறும் தொழில்நுட்பம் மீதான நம்பிக்கை

உங்கள் குழந்தை எந்தத் தொழிலைத் தேர்வு செய்தாலும், கணினி குறித்த அறிவு மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறன் ஆகியவை அவசியமாகும். பள்ளி மற்றும் வீடு ஆகிய இரண்டிலும் இளம் வயதிலேயே படிப்பதற்காக கணினிகளைப் பயன்படுத்தும் குழந்தைகள், அடிப்படையில் தங்கள் எதிர்கால பணியிடத்திற்காக பயிற்சி பெறுபவர்கள் ஆகும். பீசி-ஐ பயன்படுத்துவது குறித்த நம்பிக்கையும், தொழில்நுட்ப அறிவும் கட்டமைக்கப்படுவதால், "பயிற்சியே ஒருவனை சிறந்தவனாக்குகிறது" என்ற பழமொழியானது இங்கே உண்மையாக இருக்கிறது.

3. விமர்சனரீதியாக சிந்திக்கும் திறனை கூர்மையாக்குதல்

பீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது பல்வேறு நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கற்றல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் மாணவர்கள் விமர்சனரீதியாக சிந்திக்கும் திறன்களை உருவாக்க உதவுகிறது. உதாரணமாக, டிஜிட்டல் உதவியுடன் கூடிய சக மாணவர் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளானது மாணவர்களுக்கு மாற்று கருத்துக்களை உருவாக்க உதவுகின்றன. அதேபோன்று, ஆன்லைன் விவாத அரங்கங்கள் என்பது அவர்களின் பகுப்பாய்வுத் திறன்களை வளர்த்து, அவர்களின் பார்வையை முன்வைக்க உதவுகின்றன. கூடுதலாக, வகுப்பறையில் டிஜிட்டல் முறையில் கதை சொல்லுதல் என்பது அவர்களை பாடநூல் உள்ளடக்கத்துடன் மேலும் முழுமையாக ஈடுபட அனுமதிக்கிறது, அவர்கள் கற்றுக்கொண்டுள்ளதை ஆய்வு செய்து, மதிப்பீடு செய்வதற்கும் உதவுகிறது.

4. வெற்றிகரமாக ஒத்துழைத்தல்

குழுப்பணி என்பது எப்பொழுதும் வகுப்பறையுடன் ஒருங்கிணைந்ததாக இருப்பதால், வளங்கள் மற்றும் கருவிகளுக்கான உடனடி அணுகல் காரணமாக பீசி உதவியுடன் கூடிய கற்றல் மூலமாக ஒத்துழைப்பானது எளிதாகவும் வேகமாகவும் உள்ளது. உதாரணமாக, மாணவர்கள் விக்கிஸ்பேஸ் கிளாஸ்ரூம்(Wikispaces Classroom)-ஐ பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிகளைப் பார்த்துக்கொள்ளலாம், ஆராய்ச்சியில் ஈடுபடலாம் மற்றும் தொகுக்கப்பட்ட தகவல்களை ஒரு டிரைவ்-ல் ஒன்றோடு ஒன்றாக இணைக்கலாம், மேலும் அவர்களது யோசனைகளை மேக்கர்ஸ்பேஸ்(Makerspace)-ல் நடைமுறைக்குக் கொண்டு வரலாம். இந்த செயல்பாடுகளானது ஒத்துழைப்புடன் எவ்வாறு ஒன்றாக இணைந்து செயல்படுவது என்பதை அவர்களுக்குக் கற்பிக்கிறது, இது குழந்தைகள் வளரும்பொழுது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு திறன் ஆகும்.

பீசி உதவியுடன் கூடிய கற்றல் என்பது குழந்தைகளுக்கான வாய்ப்புகள் நிறைந்த ஒரு உலகை திறக்கிறது மற்றும் தொழில்நுட்பத்தை அதிகமாகச் சார்ந்திருக்கும் ஒரு எதிர்காலத்திற்கு அவர்களை தயார் செய்கிறது.

எனவே இந்த உயர்தரமாக இணைக்கப்பட்ட நாளைய உலகில் வெற்றிபெற உங்கள் குழந்தையை நீங்கள் எவ்வாறு தயார் செய்கிறீர்கள்?