உணராமல் கற்பது எவ்வாறு உங்கள் குழந்தையின் படைப்பாற்றலை பாதிக்கிறது

ஒன்றுக்குப் பலமுறை ஒருபொருளின் பொருளை திரும்பத் திரும்ப சொல்வதனால் ஒருவரால் அதை  நினைவுப்படுத்த முடியும் என்று பலர் நம்புகிறார்கள். இந்தக் கற்றல் முறை “உணராமல் கற்பது” என்று அழைக்கப்படுகிறது. ஹாமில்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் கல்வியின் முதுநிலை மாணவரான அனிதா அகாய் கூறுகிறார், “மனனம்  செய்வது உங்கள் கற்றலை எந்த வகையிலும் மேம்படுத்தும் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. கற்றலுக்கு அது ஒரு விரைவான தீர்வைக்காண முயல்கிறது.” [1].

மற்றொரு புறம் ஊடாடலுடன் கூடிய கற்றல், பாடத்தில் ஈடுபடுத்துவதற்கும், கருத்தாங்களை புரிந்து கொள்ளவதற்கும் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கிற ஒரு உத்தியாகும். 

 

எனவே குழந்தையின் படைப்பாற்றல் மிக்க சிந்திக்கும் திறனை உணராமல் கற்றல் எவ்வாறு பாதிக்கிறது?

பிரச்சனைகள் அல்லது யோசனைகளுக்கு புதிய, அசலான, தனிச்சிறப்பான தீர்வுகளை உருவாக்குவதற்கான திறனே படைப்பாற்றலாம். அது சரியான பதிலுடனான, பிரச்சனைகளுக்கான ஒற்றைத் தீர்வைத் தருகிற, குவிந்த சிந்தனைக்கு எதிராக, பல சாத்தியமுள்ள தீர்வுகளுடன் பிரச்சனைகளைத் தீர்க்கிற பரந்த சிந்தனையை அது பயன்படுத்திக்கொள்கிறது. உணராக் கற்றல் என்பது குவிவான சிந்தனையை ஊக்குவிப்பதாகப் பார்க்கப்படுகிறது. தனிப்பட்டக் கற்றலுக்கான உத்தியாகப் பயன்படுத்தப்படும் போது, அது குழந்தையின் பரந்த சிந்தனைத் திறனுக்கான வளர்ச்சியைப் புறக்கணித்து, படைப்பாற்றலுடன் சிந்திப்பதற்கான திறனை குறைக்க வழி வகுக்கிறது. [2]

பள்ளியில், பெரும்பாலான திட்டங்கள் மற்றும் வகுப்பிடுகள் ஒரு குறிப்பிட்டப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான குழந்தையின் வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. பிரச்சனைக்கான மாற்றுத் தீர்வுகளில் (மற்றும், ஒருவேளை, மிகவும் படைப்பாற்றல்மிக்கதாக இருக்கும்) தீர்வுகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, அவர்கள் தீர்வினை விரைவாக அடைவதில் கவனம் செலுத்துகிறார்கள்,

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே ஒரு “சரியான” தீர்வு தான் இருக்கிறது  என்தையும் இயன்ற அளவு விரைவாக அந்த பதிலை உண்டாக்குவதில் தான் எப்போதும் கவனம் இருக்கிறது என்பதையும் உணராக் கற்றல் குறிக்கிறது. நீண்டகால அடிப்படையில் சாத்தியத்திற்கான வாய்ப்புகளை கண்டறிவதிலிருந்து மாணவர்களை ஊக்கமிழக்கச் செய்து ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சூழலுக்கான படைப்பாற்றலுடன் அணுகுவதற்கான அவர்களின் திறத்தையும் குறைக்கிறது.

உணரா கற்றலின் மற்றுமொரு மிகவும் வெளிப்படையான பின்விளைவு என்னவென்றால் அது பாடத்தில் மாணவர்களின் ஆர்வத்தை அழிக்கிறது. பொருட்களின் ஒரு தொகுதியை ஆழ்ந்த அறிவினைப்பெறுவதற்கான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை விவரிப்பதற்காக கல்வியாளர்கள் பயன்படுத்தும் ஒரு வாக்கியம் டிரில் அண்டு கில் (அதாவது கடும்பயிற்சிக் கொடுத்துக்கொல்வது) என்பதாகும். உதாரணத்துக்கு

1.உடலில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகளின் பெயர் பட்டியல்
2.பெருக்கல் வாய்ப்பாடு
பல கல்வியாளர்கள் டிரில் அண்டு கில்லை நிராகரித்துவிட்டார்கள் ஏனென்றால் அது ஆழ்ந்த, கருப்பொருள் சார்ந்த கற்றலுக்கு எதிராக, மனனம் செய்தல் அல்லது உணராக் கற்றலை ஊக்குவிக்கிறது. மேலும், அது மாணவர்களை பொருளடக்கத்தின் செயலற்ற நுகர்வோராக ஆக்கி, அவர்களை வெறுப்படையவும், அலட்சியம் கொள்ளவும் மற்றும் மிகமுக்கியமாக கற்பதற்கு விருப்பமில்லாமலும் செய்கிறது. [3]

படைப்புத்திறன் மீதான உணராக் கற்றலின் விளைவுகளை இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆய்ந்தறியும் போது, இது  மறைந்திருக்கும் பிரச்சனைக்கான உணரச்கூடிய ஒரு சிறு பகுதியினைத் தொடுகிறது. உணராக் கற்றல் குழந்தைகளின் படைப்பாற்றல் சிந்தனையை பாதிக்கிறது ஏனென்றால் கீழுள்ள காணொளியில் உள்ள காண்பது போல் “புரிதலை” காட்டிலும் “அறிதலை” ஊக்குவிக்கிறது. 

கற்றலின் மோசமான தரங்களுக்காக நாடெங்கிலும் உள்ள சுமார் 80% பள்ளித் தலைமையாசிரியர்கள் உணராமல் கற்றலைத் தான் பழி சுமத்துகிறார்கள். பெற்றோர்களாக நீங்கள்,உங்கள் குழந்தைகளை விவாதங்களில் பங்கேற்கவும், ஆன்லைன் பாடங்களை எடுத்துக்கொள்ளவும் மற்றும் ஊடாடுவகைகள் மூலம் கற்பதற்கு ஊக்கவிப்பதன் மூலம், இதை எதிரக்கலாம். ஏனென்றால் அவை உணராமல் கற்றலுக்கான சிறந்த மாற்றுமுறையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.